Published:Updated:

உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3 லட்சத்தை தாண்டியது! #CoronaUpdates #NowAtVikatan

கொரோனா தொற்று
கொரோனா தொற்று

14.5.2020 | இன்றைய முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு!

14 May 2020 10 PM

3 லட்சத்தை தாண்டியது!

உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3 லட்சத்தை தாண்டியது. உலகம் முழுவதும் கொரோனா தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 3,00,220 ஆக உள்ளது. உலகளவில் சுமார் 44 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 16.82 லட்சம் பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்

14 May 2020 6 PM

தமிழகத்தில் கொரோனா அப்டேட்!

தமிழகத்தில், 'இன்று புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 447 ஆக உள்ளது' என மாநில சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார். சென்னையில் மட்டும் 363 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் கொரோனாவுக்குப் பலியானவர்களின் எண்ணிக்கை 66 ஆக அதிகரித்திருக்கிறது. தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9,674ஆக இருக்கிறது. சுமார் 10 நாள்களுக்குப் பின்னர், தமிழகத்தில் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 500 -க்கும் குறைவாக வந்திருக்கிறது.

14 May 2020 4 PM

தன்னிறைவு இந்தியாவின் 2-ம் கட்ட அறிவிப்பு

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், இன்று மீண்டும் செய்தியாளர்களைச் சந்தித்து தன்னிறைவு இந்தியாவின் இரண்டாம் கட்ட திட்டங்களை அறிவித்துவருகிறார். இன்று, புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், சிறு வியாபாரிகள், சிறு விவசாயிகள், நடைபாதை வியாபாரிகள் ஆகியோருக்காக 9 திட்டங்கள் அறிவிக்கப்பட உள்ளன.

`3 கோடி விவசாயிகளுக்கு 4 லட்சம் கோடி ரூபாய் கடன் உதவி, குறைந்த வட்டியில் வழங்கப்பட்டுள்ளது’ என்று தெரிவித்த நிர்மலா சீதாரமன், சிறு விவசாயிகள் பெற்ற கடனுக்கான வட்டி, மே மாதம் 31-ம் தேதி வரை தள்ளுபடி செய்யப்படுகிறது என்றார்.

14 May 2020 12 PM

காவலர்களுக்கு புதிய மாஸ்க்!

கொரோனா வைரஸ் தொற்று தடுப்புப் பணியில் ஈடுப்பட்டுள்ள சென்னை பெருநகர போக்குவரத்துக் காவலர்களுக்கு புதிதாக மாஸ்க் வழங்கப்பட்டுள்ளது. அதை அணிந்துகொண்டு போலீஸார் பாதுகாப்பாக வேலை செய்கின்றனர்.

இடம் - குரோம்பேட்டை

வீடியோ: அசோக்குமார். தே

கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள சென்னை பெருநகர போக்குவரத்து காவலர்களுக்கு புதிதாக வழங்கப்பட்டுள்ள மாஸ்க் இடம் குரோம்பேட்டை வீடியோ: அசோக்குமார். தே

Posted by Vikatan EMagazine on Wednesday, May 13, 2020
14 May 2020 10 AM

நாடு முழுவதும் பயணிகள் ரயில் போக்குவரத்து ஜூன் 30 வரை ரத்து!

நாடு முழுவதும் பயணிகள் ரயில் போக்குவரத்து ஜூன் 30-ம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக ரயில்வே அறிவித்திருக்கிறது.

ரயில்
ரயில்
AP | Manish Swarup

ஜூன் 30-ம் தேதி வரை முன்பதிவு செய்யப்பட்ட அனைத்து ரயில் டிக்கெட்டுகளும் ரத்துசெய்யப்பட்டு, கட்டணம் முழுமையாக திருப்பி அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம், புலம்பெயர் தொழிலாளர்களுக்கான ஷார்மிக் சிறப்பு ரயில்கள் மற்றும் சிறப்பு ரயில்கள் மட்டும் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

14 May 2020 9 AM

78,000-த்தைத் தாண்டிய பாதிப்பு; 2,549 பேர் உயிரிழப்பு!

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 78,003 ஆக அதிகரித்திருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 3,722 பேருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்ட நிலையில், கொரோனா தொற்றால் 134 பேர் உயிரிழந்ததனர். இதையடுத்து, மொத்த பலி எண்ணிக்கை 2,549 ஆக உயர்ந்திருக்கிறது.

கொரோனா தடுப்பு
கொரோனா தடுப்பு

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 47.27 லட்சமாக அதிகரித்துள்ளது. அதேநேரம், கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 16,57,735 ஆக உயர்ந்திருக்கிறது. மேலும், கொரோனா தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 2,98,059 ஆகவும் அதிகரித்திருக்கிறது.

கொரோனா: என்னதான் ஆச்சு சென்னைக்கு?
அடுத்த கட்டுரைக்கு