Published:Updated:

ஊரடங்கு கட்டுப்பாடுகள் தீவிரம்; காலை 10 மணி வரை மட்டுமே கடைகள் - முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு #NowAtVikatan

முதல்வர் ஸ்டாலின்
முதல்வர் ஸ்டாலின்

14-05-2021 | இன்றைய முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு..!

14 May 2021 7 PM

ஊரடங்கு   விதிமுறைகள்   அதிகரிப்பு!

மே 10-ம் தேதி முதல் மே 24-ம் தேதி வரை அறிவிக்கப்பட்டிருக்கும் ஊரடங்கு விதிமுறைகளை பின்பற்றுவதில் மக்கள் அலட்சியம் காட்டியதால், கூடுதல் கட்டுப்பாடுகளை விதிப்பது என சட்டமன்ற கட்சிகள் ஆலோசனைக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. அதன்படி கூடுதல் விதிமுறைகளை அறிவித்திருக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்.

- அதன்படி இனி காய்கறி, மளிகை, பல சரக்குக் கடைகள் காலை 6 மணி முதல் காலை 10 மணி வரை மட்டுமே இயங்க அனுமதிக்கப்படும் .

- டீக்கடைகள், சாலையோர பூ, பழம், காயகறிக்கடைகளுக்கு அனுமதியில்லை.

- மாவட்டங்களுக்கும், மாநிலங்களுக்கும் இடையே இனி பயணம் செய்ய இ-பாஸ் கட்டாயமாக்கப்படுகிறது.

மேலும், கட்டுப்பாட்டு விதிமுறைகளை பற்றிய தகவல் இங்கே

download
14 May 2021 12 PM

அரபிக்கடலில் நாளை உருவாகிறது புயல்..!

 வானிலை ஆய்வு மையம்
வானிலை ஆய்வு மையம்

அரபிக்கடலில் நாளை புயல் உருவாக உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. ப்திதாக உருவாகும் இந்த புயல் `டவ்-தே’ என்று அழைக்கப்படும். புயல் உருவாவதால், தமிழகம், கேரளாவில் இன்றும் நாளையும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

14 May 2021 11 AM

ஊரடங்கு கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்துவது தொடர்பாக ஸ்டாலின் ஆலோசனை!

ஸ்டாலின்
ஸ்டாலின்

தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக தற்போது தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் இருக்கிறது. எனினும் தளர்வுகளை மக்கள் பயன்படுத்தி வெளியே அதிகம் செல்வதாக குற்றச்சாட்டுகள் எழுந்தது. நேற்று அனைத்து சட்டமன்ற கட்சி தலைவர்களின் கூட்டம் ஸ்டாலின் தலையில் நடைபெற்றது. இதில் ஊரடங்கு கட்டுப்பாடுகளை அதிகரிப்பது தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டது. இந்த நிலையில் முதல்வர் ஸ்டாலின் தற்போது காவல்துறை உயரதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டிருக்கிறார். தொடர்ந்து கட்டுப்படுகள் கடுமையாக்குவது குறித்த அறிவிப்பு வரும் என்று கூறப்படுகிறது.

14 May 2021 11 AM

ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்ஸிஜன் உற்பத்தி தற்காலிக நிறுத்தம்!

ஸ்டெர்லைட் ஆலை: ஆக்ஸிஜன் விநியோகம்!
ஸ்டெர்லைட் ஆலை: ஆக்ஸிஜன் விநியோகம்!

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து முதல்கட்டமாக 4.8 மெட்ரிக் டன் மருத்துவ ஆக்ஸிஜன் உற்பத்தி செய்யப்பட்டு நேற்று, நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்நிலையில், ஆக்ஸிஜன் பிளான்டில் குளிர்பதன பெட்டியில் ஏற்பட்ட கசிவு காரணமாக ஆக்ஸிஜன் உற்பத்தி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அக்கோளாறு சரி செய்யப்பட்டு 2 முதல் 3 நாட்களுக்குள் மீண்டும் ஆக்ஸிஜன் உற்பத்தி துவங்கும் என ஆலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

14 May 2021 11 AM

ஸ்டாலின் அறிவிப்பு..!

மு.க. ஸ்டாலின்
மு.க. ஸ்டாலின்

தி.மு.க. சட்டமன்ற - நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களது ஒரு மாத ஊதியத்தை ‘முதலமைச்சர் பொது நிவாரண நிதி’க்கு வழங்குவார்கள் என தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார்.

14 May 2021 9 AM

இந்தியாவில் கொரோனா நிலவரம்..!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் புதிதாக 3,43,144 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்திருக்கிறது. இதன் காரணமாக, இந்தியாவில் மொத்த கொரோனா பாதிப்பு 2,40,46,809 என்ற எண்ணிக்கையை எட்டியிருக்கிறது.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு
இந்தியாவில் கொரோனா பாதிப்பு

கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா காரணமாக பலியானவர்களின் எண்ணிக்கை 4,000. இந்தியாவில் இதுவரை கொரோனா பாதிப்பு காரணமாக பலியானவர்களின் எண்ணிக்கை 2,62,317-ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் இதுவரை கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டு வந்தவர்களின் எண்ணிக்கை 2,00,79,599-ஆக இருக்கிறது. தற்போது மருத்துவமனைகளில் 37,04,893 பேர் சிகிச்சையில் இருக்கிறார்கள். ஒரே நாளில் 3,44,776 பேர் பாதிப்பிலிருந்து மீண்டு வீடு திரும்பியிருக்கிறார்கள்.

இந்தியாவில் இதுவரை 17,92,98,584 பேருக்குத் தடுப்பூசி போடப்பட்டிருக்கிறது.

அடுத்த கட்டுரைக்கு