Published:Updated:

தமிழகத்தில் ஒரே நாளில் 1,974 பேருக்கு கொரோனா தொற்று; 38 பேர் உயிரிழப்பு! #NowAtVikatan

கொரோனா
கொரோனா

14.06.2020 | இன்றைய முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு..!

14 Jun 2020 7 PM

தமிழகத்தில் ஒரே நாளில் 1,974 பேருக்கு பாதிப்பு

தமிழகத்தில் இன்று மட்டும்1,974 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதனையடுத்து தமிழகத்தில் கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 44,661 -ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா வைரஸ்
கொரோனா வைரஸ்

சென்னையில் மட்டும் இன்று 1,415 பேருக்கு பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. சென்னையில் கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 31,896 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா நோய்த் தொற்றால் இறந்தவர்களின் எண்ணிக்கை 435-ஆக அதிகரித்துள்ளது. இன்று 38 பேர் இறந்துள்ள நிலையில், அவர்களில் 31 பேர் சென்னையைச் சேர்ந்தவர்கள். தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,138 பேர் குணமடைந்து மருத்துவமனைகளில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.

14 Jun 2020 5 PM

சுஷாந்த் மரணம் அதிர்ச்சியளிக்கிறது!

பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங், மும்பையில் உள்ள தனது வீட்டில் இன்று தற்கொலை செய்துகொண்டார். 34 வயதான இளம் நடிகரின் இந்த விபரீத முடிவு பாலிவுட் பிரபலங்கள் முதல் ரசிகர்கள் வரை பல்வேறு தரப்பினரையும் அதிர்ச்சியடையச் செய்திருக்கிறது. அவரது மறைவுக்குப் பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

சுஷாந்த் சிங் ராஜ்புத்
சுஷாந்த் சிங் ராஜ்புத்
தே.அசோக்குமார்

இதுதொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி, `` திறமையான இளம்நடிகரான சுஷாந்த்சிங் ராஜ்புத் விரைவில் நம்மைவிட்டுச் சென்றுவிட்டார். சின்னத்திரையிலும் திரைப்படங்களிலும் ஜொலித்தவர் அவர். திரையுலகில் அவரது வளர்ச்சி பலருக்கு முன்மாதிரியானது. அருமையான பலபடங்களில் நடித்து, பல்வேறு நினைவுகளை விட்டுச் சென்றிருக்கிறார். அவரது மரணம் எனக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. அவரது குடும்பத்தினருக்கும் ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்கள்’’ என்று இரங்கல் தெரிவித்திருக்கிறார்.

14 Jun 2020 10 AM

இந்தியாவில் 3.20 லட்சம் பேருக்குப் பாதிப்பு! - #corona நிலவரம்

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,08,993-லிருந்து 3,20,922 ஆக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் 24 மணி நேரத்தில் இதுவரை இல்லாத புதிய உச்சமாக 11,929 பேருக்குக் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. கொரோனா தொற்றால் 24 மணி நேரத்தில் மட்டும் 311 பேர் உயிரிழந்துள்ளனர்.

அதேபோல், தொற்று பாதிப்பிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 1,54,330-லிருந்து 1,62,379 ஆகவும் உயர்ந்துள்ளது. இதனால், உயிரிழந்தோர் எண்ணிக்கை 8,884-லிருந்து 9,195 ஆக அதிகரித்திருக்கிறது. தொற்று பாதிப்பால் 1,49,348 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

`தவறான டெஸ்ட் ரிசல்ட்; கொரோனா வார்டில் 3 நாள்கள் தங்கவைக்கப்பட்ட 35 பேர்!’ - நொய்டா அதிர்ச்சி
கொரோனா
கொரோனா

உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையும் 78,59,557 ஆக உயர்ந்திருக்கிறது. அதேநேரம் வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கையும் 40,35,421 ஆக அதிகரித்தது. உலக அளவில் இதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4,32,168 ஆக உயர்ந்துள்ளது. தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள அமெரிக்காவில் இதுவரை 21,42,224 பேருக்குக் கொரோனா உறுதி செய்யப்பட்டிருக்கிறது. உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,17,527ஆக இருக்கிறது.

இந்தியாவில் கொரோனா சமூகப் பரவல் இருக்கிறதா, இல்லையா... கள நிலவரம் என்ன?
அடுத்த கட்டுரைக்கு