Published:Updated:

மதுரையைப் பதறவைத்த ஜவுளிக்கடை தீ விபத்து! - தீயணைப்பு வீரர்கள் இருவர் பலி #NowAtVikatan

மதுரை தீ விபத்து
மதுரை தீ விபத்து ( என்.ஜி.மணிகண்டன் )

14-11-2020 | இன்றைய முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு...!

14 Nov 2020 12 PM

தீயணைப்பு வீரர்களின் குடும்பங்களுக்கு நிதியுதவி!

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

மதுரை தீ விபத்தில் உயிரிழந்த தீயணைப்பு வீரர்கள் இருவரின் குடும்பங்களுக்குத் தலா ரூ.25 லட்சம் நிதியுதவியைத் தமிழக அரசு அறிவித்திருக்கிறது. அவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை, காயமடைந்தவர்களுக்கு ரூ.3 லட்சம் நிவாரணத்தையும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருக்கிறார்.

14 Nov 2020 12 PM

மதுரையைப் பதறவைத்த ஜவுளிக்கடை தீ விபத்து!

மதுரை ஜவுளிக்கடையில் நள்ளிரவில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்ட தீயணைப்பு வீரர்களில் இருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

மதுரை தெற்குமாசி வீதியில் விளக்குத்தூண் அருகே ஜவுளிக்கடையில் நள்ளிரவில் பயங்கர தீவிபத்து ஏற்பட்டது. தீ மளமளவெனப் பரவியதால், அந்தப் பகுதி முழுவதும் புகைமண்டலமானது. தீவிபத்து குறித்துத் தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு வீரர்கள் உடனடியாகத் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்,. தீயை அணைக்கும்போது கட்டடம் இடிந்து விழுந்ததில் நான்கு வீரர்கள் இடிபாடுகளில் சிக்கினர்.

இடிபாடுகளில் சிக்கிய நான்கு வீரர்களில் இருவர் உயிரிழந்தனர். இடிபாடுகளில் சிக்கி சிவராஜன், கிருஷ்ணமூர்த்தி ஆகிய தீயணைப்பு வீரர்கள் உயிரிழந்தநிலையில், மற்ற இருவர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.

- செ.சல்மான்

`10 நிமிடத்தில் மீட்கப்பட்ட ஒன்றரை வயதுக் குழந்தை!' -பெற்றோரை நெகிழவைத்த சென்னை தீயணைப்பு வீரர்கள்
அடுத்த கட்டுரைக்கு