Published:Updated:

`அம்மா மினி கிளினிக்’ திட்டம்! - தொடங்கிவைத்தார் முதல்வர் பழனிசாமி! #NowAtVikatan

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

14-12-2020 | இன்றைய முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு..!

14 Dec 2020 6 PM

தீ விபத்தில் தந்தை, மகன் பலி!

சென்னை ஆதம்பாக்கம் பாலாஜி நகர், 6வது தெருவில் உள்ள வீட்டின் இரண்டாவது மாடியில் குடியிருந்தவர் பாரி (45). இவரின் மகன் பாலமுருகன் (11). இன்று பிற்பகலில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் அப்பாவும் மகனும் பரிதாபமாக உயிரிழந்தனர். தீ விபத்துக்கான காரணம் தெரியவில்லை. இந்த தீ விபத்து குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

14 Dec 2020 9 AM

`அம்மா மினி கிளினிக்’ -தொடங்கிவைத்தார் முதல்வர்!

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, `மக்களுக்கு அன்றாடம் ஏற்படும் நோயை குணப்படுத்த, தமிழகம் முழுவதும் 2,000 மினி கிளினிக்குகள் ஏற்படுத்தப்படும்’ என்று கடந்த செப்டம்பர் மாதம் அறிவித்திருந்தார். தேவையான மருத்துவ உபகரணங்கள் மற்றும் மருந்துகளுடன் ஒரு டாக்டர், ஒரு செவிலியர், ஓர் உதவியாளர் அதில் இடம்பெறுவார்கள் என்றும் காய்ச்சல், தலைவலி போன்ற எளிதாகச் சிகிச்சை அளிக்கக்கூடிய நோய்களுக்கு இந்த மினி கிளினிக்கில் மருந்துகள் வழங்கப்படும் என்று முதல்வர் அறிவித்திருந்தார்.

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

`முதலமைச்சரின் அம்மா மினி கிளினிக்’ என்று பெயரிடப்பட்டிருக்கும் இந்தத் திட்டத்தை இன்று முதல்வர் பழனிசாமி தொடங்கிவைத்தார். முதற்கட்டமாக தமிழகத்தில் 630 மினி கிளினிக்குகள் தொடங்கப்பட்டிருக்கின்றன. காலை 8 - 12 மணி வரையும், மாலை 4 - 8 மணி வரையிலும் தினமும் இது செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

14 Dec 2020 9 AM

இன்று முதல் உண்ணாவிரதப் போராட்டம்!

டெல்லி விவசாயிகள் போராட்டம்
டெல்லி விவசாயிகள் போராட்டம்

மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் போராடிவரும் விவசாயிகளின் போராட்டம், இன்று 19-வது நாளை எட்டியிருக்கிறது. இன்னும் இந்த விவகாரத்தில் தீர்வுகாண முடியாத நிலையில், இன்று காலை முதல் டெல்லி ஹரியானா எல்லைப் பகுதியான சிங்கு பகுதியில் விவசாயிகள் உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்திருக்கிறார்கள். நாளுக்கு நாள் விவசாயிகளின் போராட்டம் தீவிரமடைந்துவருவது மத்திய அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியிருக்கிறது.

அடுத்த கட்டுரைக்கு