Published:Updated:

இளையோர் ஒலிம்பிக்கில் சாதித்த கூலித் தொழிலாளி மகன் - பயிற்சிக்கு உதவும் பள்ளி நிர்வாகம்!

இளையோர் ஒலிம்பிக்கில் சாதித்த கூலித் தொழிலாளி மகன் - பயிற்சிக்கு உதவும் பள்ளி நிர்வாகம்!
News

அர்ஜென்டினா நாட்டில் நடைபெற்ற இளையோர் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் பதக்கம் வென்று சாதனை படைத்த கூலித் தொழிலாளியின் மகனுக்கு பாராட்டுகள் குவிகின்றன. 

நெல்லை மாவட்டம் வடக்கன்குளத்தைச் சேர்ந்தவர் சித்திரவேல். கூலி வேலை செய்து வருகிறார். இவரின் மகன் பிரவீன். இவர் வடக்கன்குளம் பாலகிருஷ்ணா மெட்ரிகுலேஷன் பள்ளியில் படித்து வருகிறார். பாடத்தில் மட்டுமல்லாமல் விளையாட்டிலும் பிரவீன் ஆர்வம் கொண்டவர். ட்ரிபிள் ஜம்ப் விளையாட்டில் ஆர்வம் கொண்டு அதில் தீவிர பயிற்சி மேற்கொண்ட அவர், ஏற்கெனவே பல்வேறு போட்டிகளில் பங்கேற்று பதக்கங்களை வென்றுள்ளார்.

கடந்த ஆண்டு நடைபெற்ற கேலோ இந்தியா போட்டியில் தேசிய அளவில் பதக்கம் வென்று சாதனை படைத்தார். இந்த நிலையில், கடந்த வாரம் அர்ஜென்டினாவின் தலைநகரான பியூனஸ் அயர்ஸ் நகரில் நடைபெற்ற 3-வது இளையோர் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் கலந்துகொண்டார். பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள் பங்கேற்ற இந்தப் போட்டியில் அவர் 3-ம் இடத்தைப் பிடித்து வெண்கலப் பதக்கம் வென்றார். 

கூலித் தொழிலாளியின் மகன் பிரவீன் இளையோர் ஒலிம்பிக் பதக்கம் வென்றதால், வடக்கன்குளத்தைச் சேர்ந்த பலரும் அவரது சாதனையைப் பாராட்டினார்கள். பதக்கம் வென்று நாடு திரும்புகையில், பிரதமர் மோடி மற்றும் மத்திய அமைச்சர் ரத்தோர் ஆகியோரைச் சந்தித்து வாழ்த்துப் பெற்றதை மாணவன் பிரவீன் நெகிழ்ச்சியுடன் தெரிவிக்கிறார். தொடர்ந்து இந்தியாவுக்காக விளையாடி ஒலிம்பிக் போட்டியில் தங்கப் பதக்கம் வெல்வதே தனது லட்சியம் எனவும் தெரிவித்தார். 

சாதனை மாணவன் பிரவீனை பாலகிருஷ்ணா பள்ளி சார்பாக நடைபெற்ற விழாவில் தாளாளர் திவாகர் பொன்னாடை அணிவித்து கௌரவித்தார். பள்ளி முதல்வர் ஆறுமுககுமார், தமிழக விளையாட்டுப் பயிற்சியாளர் பிரேமா ஆகியோரும் பாராட்டினார்கள். மாணவன் பிரவீன் தொடர்ந்து விளையாட்டுப் போட்டிகளில் சாதனை படைக்கும் வகையில் அவருக்கு சிறப்புப் பயிற்சிகள் அளிக்க பள்ளி நிர்வாகம் முன்வந்துள்ளது.