தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் உள்ள வேளாண் காலநிலை ஆராய்ச்சி மையம், தென்மேற்குப் பருவமழை மூலம் தமிழ்நாட்டுக்குக் கிடைக்கவிருக்கும் மழையளவைக் கணித்திருக்கிறது. பூமத்திய ரேகையை ஒட்டியுள்ள கடற்பகுதியின் மேற்பரப்பு நீரின் வெப்பநிலை, தென் மண்டல காற்றழுத்த குறியீடு ஆகியவற்றை உபயோகித்து ஆஸ்திரேலியா நாட்டிலிருந்து பெறப்பட்ட ‘மழை மனிதன்’ எனும் கணினி கட்டமைப்பு மூலம் கிடைத்த தகவல்களின் அடிப்படையில், மழை குறித்த முன்னறிவிப்பு வெளியிடப் பட்டுள்ளது.

“வரவிருக்கும் தென்மேற்குப் பருவமழைக் காலத்தில் கோயமுத்தூர், சென்னை, ஈரோடு, கடலூர், மதுரை, தேனி, தர்மபுரி, காஞ்சிபுரம், கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி, நாமக்கல், நீலகிரி, பெரம்பலூர், சேலம், திருவள்ளூர், திருவண்ணாமலை, வேலூர், விழுப்புரம், ராமநாதபுரம், நாகப்பட்டினம், திருவாரூர், கரூர், விருதுநகர், திருநெல்வேலி, தஞ்சாவூர், திருச்சி, சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் சராசரி மழைப்பொழிவு இருக்கும்.

அரியலூர், புதுக்கோட்டை, திண்டுக்கல், திருப்பூர், தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் சராசரிக்கும் குறைவான அளவு மழைப்பொழிவு இருக்கும்” என்று மழை முன்னறிவிப்பு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.