Published:Updated:

'நிவாரணம் ஏதும் வேண்டாம், பள்ளிக்கூடத்தை மீட்டுத் தாருங்கள்'- மாணவிகள் உருக்கம்

'நிவாரணம் ஏதும் வேண்டாம், பள்ளிக்கூடத்தை மீட்டுத் தாருங்கள்'- மாணவிகள் உருக்கம்
'நிவாரணம் ஏதும் வேண்டாம், பள்ளிக்கூடத்தை மீட்டுத் தாருங்கள்'- மாணவிகள் உருக்கம்

பூவரசக்குடி கிராமத்தில் உள்ள நடுநிலைப் பள்ளியின் மேற்கூரையில்  மரங்கள் ஒடிந்து விழுந்ததால், கட்டடம் முழுவதுமாக சேதமடைந்துள்ளது. 'எங்களுக்கு நிவாரணம் வேண்டாம், பள்ளிக்கூடத்தை மீட்டுத் தாருங்கள்' என மாணவிகள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.

'நிவாரணம் ஏதும் வேண்டாம், பள்ளிக்கூடத்தை மீட்டுத் தாருங்கள்'- மாணவிகள் உருக்கம்

புதுக்கோட்டை அருகே, பூவரசக்குடி கிராமத்தில் நடுநிலைப் பள்ளி ஒன்று செயல்பட்டுவருகிறது. 8-ம் வகுப்பு வரை உள்ள இந்தப் பள்ளியில் 80 மாணவ மாணவிகள் பயின்றுவருகின்றனர். கஜா புயல் தாக்கத்தால், மாவட்டத்தில் மரம், மின்கம்பங்கள், விவசாயப் பயிர்கள் அனைத்தும் சேதமடைந்துள்ள நிலையில், புயலுக்கு இந்தப் பள்ளிக்கூடமும் தப்பவில்லை. பள்ளியில் இருந்த மரங்கள் வேரோடு பெயர்ந்து பள்ளிக் கட்டடத்தின் மேற்கூரையில் விழுந்தது. இதனால், மேற்கூரை முற்றிலும் சேதமடைந்து இடிந்துவிழும் அபாய நிலையில் உள்ளது. பிரதான சாலையில் இருந்தும் அதிகாரிகள் யார் கண்ணுக்கும் படவில்லை. இந்த வழியாக சாலையில் சென்ற அமைச்சர் விஜயபாஸ்கரிடம் இதுகுறித்து தெரிவித்தும், எந்த நடவடிக்கையும் இல்லை என இப்பகுதி மக்கள் கோபத்துடன் கூறுகின்றனர்.

'நிவாரணம் ஏதும் வேண்டாம், பள்ளிக்கூடத்தை மீட்டுத் தாருங்கள்'- மாணவிகள் உருக்கம்

பள்ளியில் படிக்கும் மாணவிகள் கூறும்போது, ‘கஜா புயலால் எங்கள் வீடும் பாதிக்கப்பட்டிருக்கு. புயல் போனதுக்குப் பின்னால், முதலில் வீட்டைக்கூட சரியா பார்க்கலை. ஓடி வந்து பள்ளிக்கூடத்தைத்தான் பார்த்தோம். பள்ளிக்கூடம் தெரியாத அளவுக்கு மரம் சாய்ந்து கிடந்ததைப் பார்த்து அழுதுட்டோம். தினமும் வந்து பாக்குறோம், ஆறு நாளாக அப்படியேதான் கிடக்குது. பள்ளிக்கூடத்தை தலைமை ஆசிரியர்கூட வந்து பார்க்கலை. புயல் நிவாரணம்கூட எங்களுக்கு வேண்டாம். பள்ளிக்கூடம் திறப்பதற்கு முன் இதைச் சரிசெய்து தரணும்’ என்கின்றனர்.