Published:Updated:

`எல்லோருமே அவங்களுக்கு ஹெல்ப் பண்ணனும்!' - உண்டியல் பணத்துடன் பொம்மைகளையும் கொடுத்த சிறுமி #RestoreDelta

`எல்லோருமே அவங்களுக்கு ஹெல்ப் பண்ணனும்!' - உண்டியல் பணத்துடன் பொம்மைகளையும் கொடுத்த சிறுமி #RestoreDelta
`எல்லோருமே அவங்களுக்கு ஹெல்ப் பண்ணனும்!' - உண்டியல் பணத்துடன் பொம்மைகளையும் கொடுத்த சிறுமி #RestoreDelta

புயலால் பாதிக்கப்பட்ட டெல்டா மக்களுக்கு நிவாரண நிதியாகத் தனது உண்டியல் சேமிப்பு ரூ.12,404 உடன் தனது பொம்மைகளையும் கொடுக்க முன்வந்திருக்கிறார் கோவை பள்ளியின் ஒன்றாம் வகுப்பு மாணவி தமிழினி. 

தமிழகத்தின் 7 மாவட்டங்களைப் புரட்டிப் போட்டிருக்கிறது கஜா புயல். இதனால், நாகை, திருவாரூர், தஞ்சாவூர் உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த மக்களின் வாழ்வாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கிறது. புயல் கரையைக் கடந்து 8 நாள்கள் ஆன பின்னரும், பல பகுதிகள் மின்சாரம் இன்றி இருளில் மூழ்கியிருக்கின்றன. அந்தப் பகுதிகளில் மின்சார வசதியைக் கொண்டுவர தமிழ்நாடு மின்சாரவாரிய ஊழியர்களுடன், கேரளா உள்ளிட்ட மாநில ஊழியர்களும் இரவு பகலாகப் பணியாற்றி வருகிறார்கள். புயலால் கடுமையான பாதிப்புக்குள்ளாகியுள்ள நாகை மாவட்டம் வேதாரண்யம் உள்ளிட்ட பகுதிகளில் மக்கள் உணவு, முறையான குடிநீர் வசதி இன்றித் தவித்து வருகிறார்கள். பாதிக்கப்பட்ட மக்களுக்கு உலகம் முழுவதும் இருந்து உதவிக் கரங்கள் நீண்டிருக்கின்றன.

அந்தவகையில் கோவை தனியார் பள்ளியில் ஒன்றாம் வகுப்புப் படிக்கும் மாணவி தமிழினி, தனது உண்டியல் சேமிப்புப் பணமான ரூ.12,404 உடன் தனது பொம்மைகளையும் கொடுக்க முன்வந்திருக்கிறார். மேலும், புயலால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நாம எல்லோரும் உதவி பண்ணனும் என்று கோரிக்கையும் வைத்திருக்கிறார் அந்த மாணவி. வழக்கறிஞர் சிவக்குமார் - மீத்தா தம்பதியினரின் மகளான தமிழினியின் கோரிக்கை நெகிழவைத்திருக்கிறது. அந்த சிறுமி இதுகுறித்து பேசுகையில், ``புயல் வந்ததால எல்லோர் வீட்லயும் தண்ணி புகுந்து ரொம்ப பாதிச்சுட்டாம். அதனால நாங்க எப்படி ஹெல்ப் பண்ணனும்னு யோசிச்சோம். நான் சொன்னேன், என் உண்டியல்ல இருக்க காசு, பணம் எல்லாம் தரலாம்னு. உண்டியல் இருக்க பணத்தைக் கவுண்ட் பண்ணிப் பார்த்தோம். அதுல 12,404 ரூபாய் இருந்துச்சு. அந்த பணத்தோட என்னோட பொம்மைகளையும் அவங்களுக்குத் தருவேன்னு சொன்னேன். நாம எல்லோருமே அவங்களுக்கு ஹெல்ப் பண்ணனும்’’ என்று பேசியிருக்கிறார்.  

பசியாற்றிய டெல்டா மக்களின் துயர் துடைக்க நாமும் கைகோப்போம்!