Published:Updated:

`டெல்டாவைக் காப்பாற்றுங்கள்’ - டி20யில் ஒலித்த தமிழர்களின் குரல்!

`டெல்டாவைக் காப்பாற்றுங்கள்’ -  டி20யில் ஒலித்த தமிழர்களின் குரல்!
`டெல்டாவைக் காப்பாற்றுங்கள்’ - டி20யில் ஒலித்த தமிழர்களின் குரல்!

ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற இந்தியா - ஆஸ்திரேலியா டி20 போட்டியில் `டெல்டாவைக் காப்பாற்றுங்கள்' என்ற பேனரை அங்குள்ள தமிழர்கள் காட்டிய புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.


ஆஸ்திரேலியாவுக்குச்சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது இந்திய அணி. அந்நாட்டின் சிட்னி நகரில் இந்தியா- ஆஸ்திரேலியாவுடனான இறுதி டி20 போட்டி நடைபெற்றது. முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா 164 ரன்களை எடுத்திருந்தது. இதையடுத்து, களமிறங்கிய இந்தியா இதில்  6 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இந்தியா வெற்றி பெற்றது. இதன் மூலம் இந்தியா 1-1 என்ற கணக்கில் ஆஸ்திரேலியாவுடனான டி20 தொடரை  சமன் செய்தது.

இந்த நிலையில், இந்த ஆட்டத்தைக் காண ஏராளமான ரசிகர்கள் மைதானத்தில் குவிந்தனர். அதிலிருந்த ஆஸ்திரேலிய வாழ் தமிழர்கள் செய்த செயல் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. அங்கிருந்த தமிழர்கள் சிலர் “Save Delta, Save Tamil Nadu Farmers, Gaja Cyclone Relief” என்று எழுதப்பட்ட பதாகைகளைக் கையில் ஏந்தியவாறு நின்றுகொண்டிருந்தனர். இந்தப் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.  ஏற்கெனவே காவேரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என வலியுறுத்தி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஐ.பி.எல் போட்டியின்போது ரசிகர்கள் பேனர் காட்டியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.  அந்தவகையில், கஜா புயலால் பெரும் பாதிப்புக்குள்ளாகியிருக்கும் டெல்டாவை காக்க ஆஸ்திரேலியாவிலிருந்து தமிழர்கள் குரல் கொடுத்திருப்பது தமிழர்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.