Published:Updated:

இசையால் குறையும் வலி!

இசையால் குறையும் வலி!
பிரீமியம் ஸ்டோரி
News
இசையால் குறையும் வலி!

இசையால் குறையும் வலி!

டையாறு, புற்றுநோய் மருத்துவமனையின் குழந்தைகள் பிரிவு.

மழிக்கப்பட்ட தலையுடனும் சோர்ந்த உடலுடனும் துவண்டு கிடக்கும் அந்தக் குழந்தைகளைக் காண்பது துயரத்தின் உச்சம். ஏதேனும் அற்புதம் நிகழ்ந்து, அந்தக் குழந்தைகளின் நோயும் வலியும் மாயமாகிவிடாதா என்று நினைக்கத் தோன்றுகிறது. நோய் மாயமாகிறதோ இல்லையோ, வலி மறைக்கும் அற்புதம் அங்கே அடிக்கடி நிகழ்கிறது. அந்த அற்புதத்தை இசைஞானியும் இசைப்புயலும் சாத்தியப்படுத்துகிறார்கள்.

இசையால் குறையும் வலி!

ஆம்! வலியால் துடிக்கும் புற்றுநோயாளிகளுக்கு மியூசிக் தெரபி கொடுக்கப்படுகிறது. நோயை மறந்து, வேறோர் உலகில் அவர்களைச் சஞ்சரிக்கச் செய்கிறது அந்த இசை.

அடையாறு, புற்றுநோய் மருத்துவமனையில் மட்டுமன்றி, டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை, அஹமதாபாத்தில் உள்ள குஜராத் கேன்சர் அண்டு ரிசர்ச் இன்ஸ்டிட்யூட்,  சென்னை, ராஜீவ் காந்தி அரசுப் பொது மருத்துவமனை,   கோவை அரசுப் பொது மருத்துவமனை, கோவை மருத்துவக் கல்லூரி, ஜிப்மர் என இந்தியா முழுவதிலும் பல மருத்துவமனைகளிலும் மியூசிக் தெரபி மூலம் நோயாளிகளின் வலி தீர்க்கும் மாபெரும் சேவையைச் செய்கிறது ‘அஷ்வின் மகராஜ் ஃபவுண்டேஷன்.’ அதற்குப் பின்னால் உள்ள கதையும் வலி நிரம்பியது.

“சட்டம் படிச்சுக்கிட்டிருந்த அஷ்வின், ஆதரவற்ற குழந்தைகளைத் தாழ்வு மனப்பான்மையிலேருந்து  மீட்கணும்னு ‘ஸ்போர்ட்ஸ் ஃபார் டெவலப்மென்ட்’டுனு ஓர் அமைப்பு தொடங்கி, ஃபுட் பாலும், ஸ்போக்கன் இங்கிலீஷும் சொல்லிக்கொடுத்துட்டிருந்தான். இந்தியாவில் ஸ்டெம் செல் தானத்தைப் பத்தின விழிப்பு உணர்வைப் பரவலாக்குவது, மியூசிக் தெரபியின் பலனை எல்லாரும் உணரச் செய்யறதுனு அஷ்வினுக்கு அத்தனை கனவுகள் இருந்தன. ஆனா, அதெல்லாம் நனவாகிறதைப் பார்க்க அவன்தான் இல்லை....’’ குரல் உடைகிறது அஷ்வினின் அம்மா மனோன்மணிக்கு.

“அஷ்வின் மகராஜ் எங்கள் இளைய மகன். ஹரியானாவில் உள்ள ஜிண்டல் குளோபல் லா ஸ்கூல்ல சட்டம் படிச்சிட்டிருந்தான். அவனுக்கு அப்போ 22 வயசு. கடைசி வருஷம் படிச்சிட்டிருந்தான். ட்ரெக்கிங் போனபோது மூச்சு முட்டியிருக்கு. உடனடியா அவனுக்கு  ரத்தப் பரிசோதனை செய்து பார்த்ததுல  கேன்சர்னு கண்டுபிடிச்சாங்க. சென்னைக்குக் கூட்டிட்டு வந்து ஒன்றரை மாசம் ட்ரீட்மென்ட் கொடுத்தோம்.  அடுத்தகட்ட சிகிச்சைக்காக கலிஃபோர்னியா கூட்டிட்டுப் போனோம். ‘போன் மேரோ ட்ரான்ஸ்ப்ளான்ட்’ பண்ணினோம். கேன்சருக்கான சிகிச்சைகள் பெரும் வலியைக் கொடுக்கக்கூடியவை. புற்றுநோயின் தீவிரத்தைவிடவும், அந்த வலியிலிருந்து அவங்களை விடுவிக்கிறதுதான் பெரிய சவால். 

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
இசையால் குறையும் வலி!

அஷ்வினுக்கு ட்ரீட்மென்ட் கொடுத்த ‘ஸ்கிரிப்ஸ் கிரீன் ஹாஸ்பிட்ட’லில் மியூசிக் தெரபி கொடுப்பாங்க. இசைக்கலைஞர்கள் அங்கேயே வந்து பாடுவாங்க. கிடார் வாசிப்பாங்க. அதுவரைக்கும் வலியில துடிச்சிட்டிருந்த அஷ்வின், அந்த தெரபிக்குப் பிறகு அவ்வளவு சந்தோஷமாயிடுவான்.  இசைக்கலைஞர்கள் அத்தனை பேரும் அமெரிக்கர்கள். அவங்களுக்கு அஷ்வின், இளையராஜா பாடல்களையும், ரஹ்மான் இசையையும் சொல்லிக் கொடுத்துப் பாடவும் வாசிக்கவும் வைப்பான். அந்தச் சூழலே மகிழ்ச்சியானதா மாறிடும்.

அஷ்வினுக்கு வந்த புற்றுநோயின் பெயர் ‘அக்யூட் மயலாயிடு லுக்கிமியா.’ ரத்தப்புற்றுநோய்களிலேயே ரொம்ப மோசமான வகை இது. அந்த நிலையிலயும் ஒருநாள்கூட அவன் முகம் வாடினதில்லை. சுற்றியிருந்தவங்களை உற்சாகப்படுத்திட்டே இருப்பான். தன் வலியைக் குறைச்ச மியூசிக் தெரபியைப் புற்றுநோய் பாதிச்ச எல்லாருக்கும் கொடுக்கணும்னு சொல்லிக்கிட்டே இருப்பான். எப்படியும் பிழைச்சிடுவான்னு நம்பினோம். ஆனா 2015 அக்டோபர்ல அஷ்வின் தவறிட்டான்.

அஷ்வினோட நண்பர்கள், எங்க சொந்தக்காரங்கனு எல்லாரும் சேர்ந்து 2015 டிசம்பர்ல ‘அஷ்வின் மகராஜ் ஃபவுண்டேஷனை’ ஆரம்பிச்சோம்.  இந்தியா முழுவதும் 63 கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்கள் அவங்களுடைய
என்.எஸ்.எஸ் வேலையா இதைச் செய்யறாங்க. சென்னையில் அண்ணா யுனிவர்சிட்டி, ஐஐடி, எத்திராஜ், ஸ்டெல்லா மாரிஸ், டபிள்யு.சி.சி, எஸ்.ஆர்.எம் வடபழனி, எஸ்.எஸ்.என் இப்படி முக்கியமான பல கல்லூரிகள் எங்களோடு கைகோத்திருக்காங்க.

ஓரளவுக்கு நல்லா பாடத் தெரிஞ்சவங்களை செலக்ட் பண்றோம். இதமா ஒலிக்கிற இசைக் கருவிகளுக்கு மட்டும் அனுமதி.  ஆன்மிக, மதப் பாடல்கள் பாடறதில்லை.  மெலடி பாடல்களும் சினிமாப் பாடல்களும் மட்டும் பாடுவாங்க. முதல் செஷனே ஏ.ஆர்.ரஹ்மான் மியூசிக் ஸ்கூல்லேருந்து வந்து பாடினாங்க. சரண்யா சீனிவாஸ், சைந்தவி, பிரகதி, பூஜா, சாய் சரண் மாதிரி அப்பப்ப பிரபல பாடகர்களும் வந்து பாடறதுண்டு” என்கிறார் அஷ்வின் அம்மா.

இறந்த பிறகும் இசைச் சிகிச்சையின் மூலம் வாழ்கிறார் அஷ்வின்.

ஆர்.வைதேகி - படங்கள்: ப.சரவணகுமார்