Published:Updated:

உலகம்

உலகம்
பிரீமியம் ஸ்டோரி
News
உலகம்

உலகம்

உலகம்

அபராதம் செலுத்தும் செரினா!

மெரிக்க ஓப்பன் டென்னிஸின் இறுதிப் போட்டியில் செரினா வில்லியம்ஸ், ஜப்பான் வீராங்கனை ஓசாகா ஆகிய இருவரும் மோதினர். அந்தப் போட்டியின்போது, நடுவருடன் ஏற்பட்ட வாக்குவாதத்தில், அவரைத் திருடன் என்று செரினா வில்லியம்ஸ் கடுமையாகத் திட்டினார். அதனால், செரீனாவுக்கு, அமெரிக்க டென்னிஸ் ஆணையம் 17,000 அமெரிக்க டாலர் அபராதம் விதித்தது.

உலகம்

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

ஓய்வுபெறும் குக்!

னது டிஃபன்ஸிவ் ஷாட்கள்மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில்  தனி முத்திரை பதித்தவர் இங்கிலாந்து வீரர் அலெஸ்டர் குக். தனது முதல் சர்வதேசப் போட்டியை இந்தியாவுக்கு எதிராக விளையாடிய குக், முதல் இன்னிங்ஸில் அரைசதமும், இரண்டாவது இன்னிங்ஸில் சதமும் அடித்திருந்தார். அதேபோல தனது கடைசிப் போட்டியிலும், இந்தியாவுக்கு எதிராக முதல் இன்னிங்ஸில் அரைசதமும், இரண்டாவது இன்னிங்ஸில் சதமும் அடித்துள்ளது ஆச்சர்யம்!

உலகம்

வென்றது தங்கம்!

டந்து முடிந்த ஆசிய விளையாட்டுப் போட்டிகளில், துப்பாக்கிச் சுடுதலில் 16 வயது மட்டுமே நிரம்பிய செளரப் செளத்ரி தங்கம் வென்றுள்ளார். இதன்மூலம் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் மிகக் குறைந்த வயதில் தங்கம் வென்ற இந்தியர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார். ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்தியா, 15 தங்கம், 24 வெள்ளி, 30 வெண்கலம் உட்பட 69 பதக்கங்களை வென்றுள்ளது.

உலகம்
உலகம்

உயரமான சிலை!

குஜராத் மாநிலம், நர்மதா மாவட்டத்தில் அமைக்கப்பட்டுவரும்  சர்தார் வல்லபாய் படேல் சிலைதான் உலகிலேயே உயரமான சிலை. இந்தச் சிலையை, இரும்பு மனிதர் படேலின் பிறந்த நாளான அக்டோபர் 31-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைக்கிறார்.

உலகம்

தீபாவளி தபால்தலை!

ந்தியாவில் கொண்டாடப்படும் முக்கியப் பண்டிகையான தீபாவளி பண்டிகைக்குப் பெருமை சேர்க்கும் விதமாக அடுத்த மாதம் சிறப்புத் தபால் தலை வெளியிடப்படுமென ஐ.நா சபை அறிவித்துள்ளது. வரும் அக்டோபர் மாதம் 19-ம் தேதி நடைபெறும் விழாவில் இந்தத் தபால் தலை வெளியிடப்படவுள்ளது.

- பெ.மதலை ஆரோன்

உலகம்

தெரியுமா?

* ஒலியை அளக்கப் பயன்படுத்தும் அலகு, டெசிபல்.