Published:Updated:

`மல்யுத்த வீரர்களுக்கு உதவி' - பயிற்சி திட்டத்துடன் கைகொடுக்கும் டாடா மோட்டார்ஸ்!

`மல்யுத்த வீரர்களுக்கு உதவி' - பயிற்சி திட்டத்துடன் கைகொடுக்கும் டாடா மோட்டார்ஸ்!
`மல்யுத்த வீரர்களுக்கு உதவி' - பயிற்சி திட்டத்துடன் கைகொடுக்கும் டாடா மோட்டார்ஸ்!

ந்திய மல்யுத்த வீரர்கள், ஒலிம்பிக் போன்ற சர்வதேச போட்டிகளில் பதக்கம் மற்றும் பரிசுகளை வெல்வதற்கு உதவி செய்ய டாடா மோட்டார்ஸ் நிறுவனம் முன்வந்துள்ளது. 2020-ம் ஆண்டு டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகள் நடக்கவிருக்கிறது. அதை முன்னிட்டு டாட்டா மோட்டார்ஸ் நிறுவனம் இந்த முயற்சியை மேற்கொண்டிருக்கிறது.

டாட்டா மோட்டார்ஸ் மல்யுத்த வீரர்கள் வளர்ச்சித் திட்டம் மூலம் சர்வதேசப் பயிற்சியாளர்கள், பயிற்சிக் கூடம், உதவியாளர்கள், பயிற்சி அளித்தல் ஆகிய அனைத்தும் வழங்கப்படவிருக்கிறது. 2020 - ஆண்டு டோக்கியோ ஒலிம்பிக் மட்டுமல்லாமல், 2024 - ம் ஆண்டு பாரீசில் நடைபெறவிருக்கும் ஒலிம்பிக் போட்டிக்கும் இப்போதே திறமையான இளம் வீரர்களைக் கண்டறியும் திட்டத்தை டாட்டா மோட்டார்ஸ் நிறுவனம் முன்னெடுத்திருக்கிறது. இதற்காக இந்திய மல்யுத்த கூட்டமைப்புடன் மூன்று வருடங்களுக்கு டாட்டா நிறுவனம் ஒப்பந்தம் மேற்கொண்டிருக்கிறது. இந்தப் பயிற்சி திட்டத்தின் மூலம் ஆண் மற்றும் பெண் ஆகிய இரு தரப்பினரும் சேர்த்து மொத்தம் 50 பேருக்கு பயிற்சி அளிக்கப்படும். 

இதுகுறித்து டாட்டா மோட்டார்ஸ் நிறுவனத்தின் தலைவர் கிரிஷ் வாக் கூறுகையில், ``நம் நாட்டின் மல்யுத்த வீரர்கள் பலரிடமும் கலந்தாலோசித்து இந்தப் பயிற்சித் திட்டத்தை வடிவமைத்திருக்கிறோம். இந்தத் திட்டத்தின் மூலம் நம் நாட்டில் மல்யுத்த விளையாட்டை இளம் வீரர்களிடம் கொண்டு சேர்த்து வளர்க்கலாம் என்று நம்புகிறோம். அனைத்து உதவிகளுடன், இன்ஷூரன்ஸ் வசதியும் வீரர்களுக்குச் செய்து தரப்படும்” என்று தெரிவித்தார்.