``இன்றைய இளைஞர்கள், முன்புபோல் இல்லை; சோம்பேறிகளாய் இருக்கிறார்கள்; சமூக

வலைதளங்களுக்கு அடிமையாய் கிடக்கிறார்கள். போதைப்பழக்கமும் தலைதெறித்து ஆடுகிறது'' - இப்படிப் பல குமுறல்களை எல்லா இடங்களிலும் கேட்க முடிகிறது. டாஸ்மாக்கில் பள்ளிச் சிறுவர்கள் என வாட்ஸ்அப் மெசேஜ்கள் பறக்கின்றன. முன்பைவிடவும் பாலியல் குற்றங்களில் இளைஞர்கள் பெயர்கள் அதிக அளவில் அடிபடுகின்றன.

`என்ன ஆனது நம் இளைஞர்களுக்கு?' என்று கொஞ்சம் யோசித்துப்பார்த்தால், நம் வாழ்க்கைமுறையில் ஏற்பட்டுள்ள பல மாற்றங்கள்தான் இதற்குக் காரணம் என்பது புரியவரும். அதில் முக்கியமானது, நாம் விளையாட்டை மறந்தது. விளையாட்டுகள் இளைஞர்களை நல்வழிப்படுத்தும் என்பதற்கு, பல உதாரணங்கள் இருக்கின்றன. சமீபத்திய உதாரணம், ஆசிய விளையாட்டுப் போட்டிகள்.

சீனா, ஜப்பான், தென் கொரியா என பலம்வாய்ந்த பல நாடுகளோடு மோதி தங்கம், வெள்ளி, வெண்கலம் எனப் பல பதக்கங்களை அள்ளி வந்திருக்கிறார் கள் நம் இளைஞர்கள். இவர்களில் தமிழக இளைஞர்களும் அதிகம்.

விளையாட்டுப் போட்டிகளில் தடகளப் போட்டிகளில் பதக்கம் வெல்வதுதான் சவால். தடகளப் போட்டிகளில் தமிழர்கள் பதக்கம் வெல்வதில்லையே என்கிற குறையை, தடையை உடைத்திருக்கிறார்கள் இரண்டு தமிழர்கள். 4X400 மீட்டர் கலப்பு ரிலே ஓட்டத்தில் வெள்ளிப்பதக்கம் வென்ற ஆரோக்கிய ராஜிவ், தருணோடு இணைந்து 4X400 மீட்டர் ஆண்கள் ரிலேவிலும் வெள்ளி வென்றார். 21 வயதேயான தருண் அய்யாசாமி, 400 மீட்டர் தடை ஓட்டத்தில் வெள்ளிப்பதக்கம் வென்று சாதித்திருக்கிறார். இவர்கள் இருவரும்தான் நம் சமூகத்துக்கான முன்மாதிரிகள். நல்ல முன்மாதிரிகளைக் கொண்டாடுவதில் பெருமைகொள்கிறது ஸ்போர்ட்ஸ் விகடன்.

திறமையாளர்களை, தகுதியாளர்களை, சிறந்த முன்மாதிரிகளை நம் இளைஞர்களுக்கு அறிமுகப்படுத்துவோம். அவர்கள் வழியில் பயணிக்க வழிகாட்டுவோம். இளைஞர்களை, பள்ளிக் காலத்தில் இருந்தே விளையாட்டுகளில் கலந்துகொள்ள உற்சாகப்படுத்துவோம். விளையாட்டு, அவர்களுக்கு பல்வேறு பெருமைகளைச் சேர்க்கும் என்பதோடு ஒழுக்கமான மனிதனாக உருவாகவும் வழிவகுக்கும். உடல்பலத்தையும், மனபலத்தையும் அதிகரித்து முழு மனிதர்களாக மாற்றும்.

விளையாடுவோம்... விளையாடுவதை உற்சாகப்படுத்துவோம்!

அன்புடன்

ஆசிரியர்