தமிழக நிலங்கள் ஐந்து வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொன்றும் ஒரு வகைத் தாவரத்தை அடிப்படையாகக் கொண்டே பிரிக்கப்பட்டது. வெப்பாலைப் பூக்கள் அதிகமாக வளரும் நிலத்தைப் பாலை என்றழைத்தனர். நீராம்பல் பூக்கும் கடலோரப் பகுதிகளை நெய்தல் நிலமாக வகைப்படுத்தினார்கள். அதைப்போலவே முல்லை அதிகமாக வளரும் காட்டுப்பகுதிகளை முல்லை நிலமென்றும், வயலோரங்களில் வளரும் மருத மரத்தை அடையாளம் காட்டி மருத நிலமென்றும் பிரித்தனர். அவற்றைப் போலவே குறிஞ்சி மலர் பூத்துக் குலுங்கும் மலைப்பகுதிகளைக் குறிஞ்சி நிலமென்று அழைத்தார்கள். நீல நிறத்தில் பூக்கும் குறிஞ்சிப் பூவை அடையாளமாக வைத்தே நீலகிரி என்று பெயர் பெற்றது.

உலகம் முழுவதும் 250 வகைக் குறிஞ்சிகள் இருக்கின்றன. ஒவ்வோர் ஆண்டும் பூக்கும் குறிஞ்சி முதல் தனது ஆயுளில் ஒருமுறை மட்டுமே பூக்கும் குறிஞ்சி வரை மொத்தம் 46 வகைக் குறிஞ்சியினங்கள் தமிழக மலைகளில் காணப்படுகின்றன. அவற்றில், ஏழாண்டுகளுக்கு ஒருமுறையும் பதினாறாண்டுகளுக்கு ஒரு முறையும் பூக்கும் குறிஞ்சிகள் தம் ஆயுளில் ஒருமுறை மட்டுமே பூத்து இறந்துவிடுகின்றன. ஒருமுறையே பூத்தாலும் தேனீக்கள் உதவியுடன் மகரந்தச் சேர்க்கை மூலம் அடுத்த தலைமுறையை உருவாக்கிவிட்டே இறக்கின்றன. நீலக்குறிஞ்சியில் சேகரிக்கப்படும் தேன் மிகவும் சுவையானதும் மருத்துவ குணமும் கொண்டது. 30 முதல் 60 செ.மீ வரை வளரக்கூடிய குறிஞ்சிச் செடி 1,300 முதல் 2,400 அடி உயரமான பகுதிகளில் மட்டுமே வளரக்கூடியது.

- க.சுபகுணம்
படங்கள்: கே.அருண்