Published:Updated:

‘கொட்டியது மழை எட்டியது முழுக்கொள்ளளவு!’- அதிகாரிகளின் பதிலால் அதிர்ந்த கிராம மக்கள்

‘கொட்டியது மழை எட்டியது முழுக்கொள்ளளவு!’- அதிகாரிகளின் பதிலால் அதிர்ந்த கிராம மக்கள்
‘கொட்டியது மழை எட்டியது முழுக்கொள்ளளவு!’- அதிகாரிகளின் பதிலால் அதிர்ந்த கிராம மக்கள்

விருத்தாசலம் அருகே உள்ள பாசிக்குளம் கிராமத்தில் தாமரைக்குளம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் வசிக்கும் சுமார் 500 குடும்பங்கள் இந்த குளத்தில் குளிக்கவும், துணிகள் துவைக்கவும், கால் நடைகள் பயன்பாட்டிற்கும் பயன்படுத்தி வந்துள்ளனர்.

இந்நிலையில்  மிகவும் பழமையான இந்த குளம் நீண்ட ஆண்டுகளாகத் தூர் வாரப்படாமல் ஆகாயத் தாமரை நிறைந்து பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. தற்பொழுது கிராமத்தில் கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருவதால் இந்த குளத்தை தூர் வார நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறி முதல்வர் குறை தீர்க்கும் பிரிவிற்கு ஆன்லைனில் புகார் தெரிவித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து முதல்வர் குறைதீர்க்கும் பிரிவில் இருந்து வந்த பதில் கடிதத்தில் குளம் தற்பொழுது பெய்த மழையில் முழு கொள்ளவை எட்டியுள்ளது. பொது மக்கள் தினமும் பயன்படுத்தி வருகின்றனர் எனப் பதில் வந்துள்ளது.

இது குறித்து கிராமமக்கள் கூறும் போது குளம் சீர் கேடு அடைந்து பல ஆண்டுகள் ஆகின்றது.இதனைத் தூர் வாரி பொது மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என முதல்வர் குறை தீர்க்கும் பிரிவிற்கு புகார் தெரிவித்தால் பொது மக்கள் தினம் பயன்படுத்தி வருகின்றனர் எனப் பொய்யான தகவல் தெரிவிக்கின்றனர். மாவட்ட நிர்வாகம் உடனடியாக குளத்தை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கின்றனர்.