Published:Updated:

காவிரி மேலாண்மை வாரியம்: தமிழக அரசு புதிய மனு தாக்கல்

காவிரி மேலாண்மை வாரியம்: தமிழக அரசு புதிய மனு தாக்கல்
காவிரி மேலாண்மை வாரியம்: தமிழக அரசு புதிய மனு தாக்கல்
காவிரி மேலாண்மை வாரியம்: தமிழக அரசு புதிய மனு தாக்கல்

புதுடெல்லி: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் பணியை மத்திய அரசு தொடங்க வேண்டும் என்று கோரி தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் புதிய மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளது.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்ற காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பை மத்திய அரசு செயல்படுத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மனு தாக்கல் செய்திருந்தது.

இந்த மனுவிற்கு பதில் அளிக்கும்படி கர்நாடகா, கேரளா, புதுச்சேரி மற்றும் மத்திய அரசுக்கு கடந்த 22ஆம் தேதி உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது.

அதற்கு பதிலளித்த கர்நாடக அரசு, மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பின் போது பரிந்துரையாகச் சொல்லப்பட்டதே தவிர, கட்டாயமில்லை என்று தெரிவித்திருந்தது.

##~~##
மத்திய அரசு தாக்கல் செய்திருந்த பதில் மனுவில், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் பணி, தொடங்கி விட்டதாகவும் கர்நாடகாவில் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதாகக் கூறியிருந்தது.
தற்போது கர்நாடகாவில் தேர்தல் முடிவடைந்துள்ள நிலையில், மேலாண்மை வாரியம் அமைக்கும் பணியை தொடங்க வேண்டும் என்று தமிழக அரசு தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் கூறியுள்ளது.