Published:Updated:

`வாய்க்குப்பூட்டு; மூக்கால் சுவாசம், நீலநிறமான உடல்’ - மாரத்தான் ஓடிய ஏ.டி.ஜி.பி 

`வாய்க்குப்பூட்டு; மூக்கால் சுவாசம், நீலநிறமான உடல்’ - மாரத்தான் ஓடிய ஏ.டி.ஜி.பி 

`வாய்க்குப்பூட்டு; மூக்கால் சுவாசம், நீலநிறமான உடல்’ - மாரத்தான் ஓடிய ஏ.டி.ஜி.பி 

`வாய்க்குப்பூட்டு; மூக்கால் சுவாசம், நீலநிறமான உடல்’ - மாரத்தான் ஓடிய ஏ.டி.ஜி.பி 

`வாய்க்குப்பூட்டு; மூக்கால் சுவாசம், நீலநிறமான உடல்’ - மாரத்தான் ஓடிய ஏ.டி.ஜி.பி 

Published:Updated:
`வாய்க்குப்பூட்டு; மூக்கால் சுவாசம், நீலநிறமான உடல்’ - மாரத்தான் ஓடிய ஏ.டி.ஜி.பி 

தமிழக காவல்துறை கூடுதல் டி.ஜி.பி ஜெயந்த்முரளி (வயது 56), வாயை டேப்பால் மறைத்துக்கொண்டு மூக்கால் மட்டுமே சுவாசித்து 42.195 கி.மீட்டர் தூர மாரத்தான் ஓட்டத்தை 5 மணி நேரம் ஓடி கடந்துள்ளார். அப்போது உடலுக்குத் தேவையான ஆக்ஸிசன் கிடைக்காததால் அவரின் தோல், நீல நிறமாக மாறியுள்ளது.  

தமிழக காவல்துறையில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறையில் இயக்குநராக உள்ளார் ஏ.டி.ஜி.பி ஜெயந்த் முரளி. திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த இவர், கடந்த 1991-ம் ஆண்டு பேட்ச் ஐ.பி.எஸ் அதிகாரி. நெல்லை மாநகரப் போலீஸ் கமிஷனராகப் பணியாற்றியவர். இவர், சென்னையில் பிளாஸ்டிக் தடை, உடல் உறுப்புகள் தானம் குறித்த விழிப்பு உணர்வை ஏற்படுத்த மாரத்தான் ஓட்டப்பந்தயத்தில் பங்கேற்றார். இதில் ஏராளமானவர்கள் பங்கேற்றனர். தமிழக காவல்துறையிலிருந்து ஏ.டி.ஜி.பி-க்கள் சைலேந்திரபாபுவும் கலந்து கொண்டார். 

சென்னை நந்தனம் சிக்னலில் தொடங்கிய இந்த மாரத்தான் ஓட்டம் அடையாறு, போட்கிளப் ரோடு வழியாக 10 கி.மீ, 21.கி.மீ, 42.195 கி.மீட்டர் என நடத்தப்பட்டது. ஏ.டி.ஜி.பி ஜெயந்த் முரளி மட்டும் 42.195  கி.மீட்டர் தூரத்தை 5 மணி நேரத்தில் கடந்துள்ளார். இந்தப் போட்டியில் அவர், தன்னுடைய வாயில் டேப் ஓட்டியபடி வித்தியாசமான முறையில் ஓடியுள்ளார். இதனால், அவர் ஓடும்போது மூக்காமல் மட்டுமே சுவாசித்துள்ளார். இதற்கு போதிய பயிற்சி இல்லையென்றால் உயிருக்கே ஆபத்தாக அமைந்துவிடுமாம். 

இதுகுறித்து நம்மிடம் பேசிய ஏ.டி.ஜி.பி ஜெயந்த் முரளி, ``மனிதனுக்கு மூச்சு என்பதுதான் உயிர்வாழ அவசியமான ஒன்று. அதன் செயல்பாட்டை எப்போதும் சுறுசுறுப்பாகச் செயல்பட வைத்தல் வேண்டும். நான் தினமும் மூச்சுப்பயிற்சி மேற்கொள்வேன். மூச்சுப்பயிற்சி செய்யும் முறைகள் பற்றி பிரபல யோகா பயிற்சியாளர் ஆசன ஆண்டியப்பன் இணையதளத்தில் நிறைய வீடியோக்களை வௌியிட்டுள்ளார். அதன் மூலம் நான் பார்த்து மூச்சுப் பயிற்சியைக் கற்றுக்கொண்டேன். என்னுடைய வாயை டேப் மூலம் மூடிக்கொண்டு ஓடும்போது மூக்கால் மட்டுமே மூச்சுவிட வேண்டும். அவ்வாறு ஓடும்போது உடலில் உள்ள கெட்ட காற்றுக்கள் அனைத்தும் வௌியேறி  நுரையீரல் புத்துஉணர்வு பெறும். இதன் மூலம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கும். நாம் ஆரோக்கியமாக வாழலாம். அரசு நடைமுறைப்படுத்தியுள்ள பிளாஸ்டிக்கை ஒழிக்கும் திட்டமானது மக்கள் மத்தியில் சென்று சேரும் வகையில் என்னால் ஆன விழிப்பு உணர்வை இந்த ஓட்டத்தின் மூலம் நான் மக்களுக்கு எடுத்துச் சொல்ல ஒரு வாய்ப்பாகவும் இந்த மாரத்தான் ஓட்டத்தைப் பயன்படுத்திக் கொண்டேன். பொதுவாக, ஓட்டப்பந்தயத்தில் பங்கேற்கும்போது அதிகமான ஆக்ஸிசன் உடலுக்குத் தேவைப்படும். அப்போது மூக்கால் மட்டுமல்லாமல் வாயாலும் சுவாசிப்போம். வாயைப் பொத்திக்கொண்டு ஓட முறையான மூச்சுப்பயிற்சி தேவை. நான் ஏற்கெனவே இதுபோன்று ஓடியுள்ளேன்.

அப்போது மூன்று மாதம் மூச்சுப் பயிற்சியை மேற்கொண்டேன். ஆசிய அளவில் சாதனை படைத்தேன். தற்போதும் மூன்று மாதங்கள் பயிற்சியை மேற்கொண்டேன். நந்தனத்தில் இருந்து தொடங்கி அடையாறு வழியாக கிழக்குக் கடற்கரை சாலை சென்று சோழிங்கநல்லுார், உத்தண்டி வரை சென்று 42.195  கி.மீட்டர் தூரம் ஓடி போட்டியை நிறைவு செய்தேன். என்னுடன் சிலர் மட்டுமே போட்டியை நிறைவு செய்தனர். இந்த வித்தியாமான விழிப்பு உணர்வு ஓட்டத்தைப் பலர் பாராட்டினர்" என்றார். 

ஓடும்போது என்ன மாதிரியான சிரமங்கள் இருந்தன என்று அவரிடம் கேட்டதற்கு, ``உடலுக்குத் தேவையான ஆக்ஸிசன் கிடைக்காத சமயத்தில் தோல் நீல நிறமாக மாறும். அதுபோல என்னுடைய தோலிலும் மாற்றம் தெரிந்தது. உடனே ஓடும் வேகத்தைக் குறைத்தேன். ஏன், மெதுவாக நடந்து சென்றேன். அதன் பிறகு மீண்டும் ஓடினேன். வாயை மட்டும் மூடாமல் ஓடியிருந்தால் 42.195 கி.மீட்டர் தூரத்தை மூன்று மணி நேரத்தில் கடந்திருப்பேன். ஆனால், வாயை மூடிக்கொண்டு ஓடியதால் 5 மணி நேரமானது. நான் நீச்சல் குளத்தில் மூச்சுப் பயிற்சியை மேற்கொண்டுள்ளேன். முதலில் ஒரு நிமிடம்கூட தண்ணீருக்குள் இருக்க முடியாது. தற்போது படிப்படியாக நிமிடங்கள் அதிகரித்துள்ளன. 5 நிமிடங்கள் வரை மூச்சுவிடால் என்னால் தண்ணீருக்குள் இருக்க முடியும்" என்றார்.