Published:Updated:

7 தலைமுறைகளாக மாறாத அசத்தல் சுவை!

7 தலைமுறைகளாக மாறாத அசத்தல் சுவை!
7 தலைமுறைகளாக மாறாத அசத்தல் சுவை!

ஃபில்டர் காஃபி பாரம்பரியம்...

'காஃபி' என்பது வார்த்தை, 'ஃபில்டர்  காஃபி' என்பது உணர்வு... இப்படித்தான் ஆர்ப்பரிக்கிறார்காள் நம்மூர் ஃபில்டர்  காஃபி இரசிகர்கள். ஃபில்டர்  காஃபி பருகும் பழக்கம் நம் கலாச்சாரத்தின் அங்கமாக ஆகிவிட்டது என்பதே நிதர்சனம். உண்மைதானே? தென்னகத்து இந்தியர்களின் ஃபேவரட் பானமான ஃபில்டர்  காஃபி இன்று நம் தேசத்தைத் தாண்டி, சர்வதேச அளவில் புகழ் பெற்றிருக்கிறது. என்னதான் காஃபிப் பொடியை பில்டரில் ஊறவைத்து வடிகட்டிக் கச்சிதமான பக்குவத்தில் பருகினாலும், எல்லா காஃபிப் பொடியும் நாம் நினைக்கும் அந்த மகத்துவமான சுவையைத் தந்துவிடமுடியாது. எனவே, சூப்பரான ஃபில்டர்  காஃபி குடிக்க தகுதிவாய்ந்த காஃபிப் பொடியைத் தேர்ந்தெடுப்பது மிக முக்கியம்...

7 தலைமுறைகளாக மாறாத அசத்தல் சுவை!

"கோத்தாஸ் காஃபி"

‘கோத்தாஸ் காஃபி’ நிறுவனம், 1949ஆம் வருடம் துவங்கப்பட்டதாகும். இந்தக் காலகட்டத்தில்தான் மெல்ல மெல்ல நாம் ஃபில்டர்  காஃபி விரும்பிகளாக மாற ஆரம்பித்தோம் எனலாம்! நறுமணம் மிக்க உயர்தர காஃபிப் பொடி தயாரிப்பதில் வல்லவர்களான கோத்தாஸ் நிறுவனம், இன்று இந்தியாவின் முக்கியமான காஃபி பிராண்டுகளில் ஒன்றாகும். நல்ல காஃபிப் பொடி வழங்கினால் போதாது, இருப்பதிலேயே சிறந்த இரக காஃபிப் பொடியைத் தன் வாடிக்கையாளர்களுக்குக் கொடுக்க வேண்டும் என எண்ணிய கோத்தாஸ்,  காஃபி வறுக்கவும் அரைக்கவும் இயந்திரங்களை ஐரோப்பாவிலிருந்து 1980ஆம் ஆண்டு தருவித்தது. கர்நாடக மாநிலத்தின் குடகு மற்றும் சிக்மகளூர் மலைப் பிரதேசங்களில் விளையும் உயர்ந்த இரக காஃபிக் கொட்டைகள் மட்டுமே கோத்தாஸ் நிறுவன தயாரிப்புகளில் உபயோகப்படுத்தப்படுகின்றன. எனவே, கர்நாடக மக்கள் அனைவருமே கோத்தாஸ் காஃபியை பருகியிருப்பார்கள் எனக் கூறினாலும் மிகையாகாது.

தந்தை சி.கே.ஸ்ரீகாந்த் மற்றும் மகன் சி.எஸ். நித்தின் கூட்டணியில் சிறப்புற இயங்கிவரும் கோத்தாஸ் காஃபி நிறுவனம் வருடத்துக்கு சுமார் 4500 டன் காஃபிக் கொட்டைகளை கொள்முதல் செய்கிறது. இந்தியாவில் மட்டுமல்ல, முக்கியமாக வெளிநாடு வாழ் இந்தியர்களிடையே அமோக வரவேற்பைப் பெற்றுள்ளது கோத்தாஸ் காஃபி. கார்ப்பரேட் கம்பெனிகள், மருத்துவமனைகள் மற்றும் கல்வி மையங்கள் என பலவிதமான இடங்களில் இன்று கோத்தாஸ் காஃபி விரும்பி அருந்தப்படுகிறது. ஒவ்வொரு இந்திய மாநிலத்துக்கும் ஒவ்வொரு டேஸ்ட் இருக்கும், இதையறிந்து அதற்கேற்ற வகையில் வித்தியாசமான பல பிளென்டுகளை  உருவாக்கி, ஓட்டல்களுக்கு ஏற்ற காஃபிப் பொடிகளை வழங்கிவருகிறது கோத்தாஸ் நிறுவனம்.

பல குடும்பங்களில் காஃபி குடிப்பது என்பது ஒரு சம்பிரதாயமாகவே மாறிவிட்டது, குறிப்பாக ஃபில்டர்  காஃபி விரும்பிகள் இதை ஒருபோதும் தவிர்க்கவே மாட்டார்கள். இதனால் தான் என்னவோ, ஃபில்டர்  காஃபியை வெறும் பானமாக பார்க்காமல், உயர்ந்த ஸ்தானத்தில் வைத்திருக்கிறார்கள். இதற்கு ஈடு செய்யும் வகையில் கோத்தாஸ் காஃபி நிறுவனமும் தரத்தில் சமரசம் செய்துகொள்ளாது ஃபர்ஸ்ட் கிளாஸ் காஃபிப் பொடியை மட்டுமே வழங்கி வருகிறது.

7 தலைமுறைகளாக மாறாத அசத்தல் சுவை!

கோத்தாஸ் காஃபி நிறுவனத்தில் இயந்திரங்களுக்கு செல்லும் முன், காஃபிக் கொட்டைகள் கடுமையான தர நிர்ணய பரிசோதனைக்கு உள்ளாகிறது. கையால் பொறுக்கி எடுக்கப்பட்ட சிறந்த கொட்டைகள் மட்டுமே வறுத்து, அரைத்து சரியான விகிதத்தில் கலக்கப்பட்டு பேக் செய்யப்படுகிறது. ஆரம்பத்தில் இருந்து பேக் செய்யப்படும் வரை, கோத்தாஸின் தர பரிசோதனைக் குழு காஃபியின் தரம் எல்லாவித செயல்முறையின்போதும் சிறப்பாக இருக்கும்படி உறுதிசெய்கிறது.

சூடான சுவையான டிஃபன் உண்டபிறகு, ஃபில்டர்  காஃபி குடிப்பது என்பது ஒதுக்கிவிட முடியாத நம் வழக்கமாகும். வீட்டு ஃபில்டர்  காஃபியை விட கோத்தாஸ் காஃபி பயன்படுத்தும் ஓட்டல்களில் காஃபி பிரமாதமாக இருக்கக் காரணம், ஓட்டல்களுக்கென்றே பிரத்தியேகமாக தயாரிக்கப்படும் கோத்தாஸ் காஃபி ப்ளென்ட்கள்தாம். பொதுவாகவே ஃபில்டர்  காஃபி விரும்பிகள் தாங்கள் பருகும் காஃபியின் சுவை மற்றும் பிராண்டில் மிகக் கவனமாக இருப்பதுண்டு, அதனால்தான் கோத்தாஸ் காஃபியின் ஒரு துளியை சுவைத்தாலும், கோத்தாஸின் பரம விசிறிகள் ஆகிவிடுகின்றனர். இதன்பிறகு, இன்ஸ்டன்ட் காஃபி பருகுவதற்கு மனமே வருவதில்லை.

இன்ஸ்டன்ட் காஃபியை 100 கோப்பைகள் குடித்தாலும், ஒரு கப் ஃபில்டர்  காஃபிக்கு இணையாக ஆகாது. காரணம், அதன் தனித்துவமான ருசி. ஃபில்டர்  காஃபி போடுவதற்கு நிறைய நேரம் பிடிக்கும் என பலரும் கூறுவதுண்டு. ஆனால், டிகாக்ஷன் தயாரிக்க ஆகும் நேரம் வெறும் 10 நிமிடங்கள்தான் தெரியுமா?

7 தலைமுறைகளாக மாறாத அசத்தல் சுவை!

பாரம்பர்ய காஃபி ஃபில்டர் , மோக்கா பாட், பிரெஞ்ச் பிரெஸ் மற்றும் எலெக்ட்ரிக் பிரெஸ்களை விற்பனை செய்துவரும் கோத்தாஸ், இந்தியா முழுக்க நம் தென்னிந்திய ஃபில்டர் காஃபியை எடுத்துச் செல்லும் நடவடிக்கையாக சிறந்த முறையில் பலவிதமான காஃபி தயாரிப்பது எப்படி எனும் வீடியோ வகுப்புகளையும் நடத்திவருகிறது. தமிழகம் மற்றும் கர்நாடகத்தில் ஃபில்டர்  காஃபி விரும்பிகள் பெருக்கம் அதிகம் என்றாலும், பிற மெட்ரோ நகரங்களான டெல்லி, மும்பை மற்றும் கொல்கத்தாவிலும் கூட ஃபில்டர்  காஃபிக்கு வாடிக்கையாளர்கள் அதிகரிக்கத் துவங்கியுள்ளனர். இதில் கோத்தாஸ் காஃபியின் பங்கும் மிக முக்கியமானதாகும்!

ஏற்கனேவே, மும்பை, டெல்லி மற்றும் கொல்கத்தா நகரங்களில் தங்களுக்கான வாடிக்கையாளர் வட்டத்தை உருவாக்கியுள்ள கோத்தாஸ், தங்களின் ஈடு இணையற்ற காஃபி ஃபிளேவர்கள் மூலம் உலகம் முழுவதும் ஃபில்டர்  காஃபியைக் கொண்டுசேர்ப்பதில் தீவிரம் காட்டி வருகிறது. சிறப்பான தொழில்நுட்ப வசதியோடு, தங்களின் பிரத்தியேகமான நறுமணச் சுவையை தக்கவைத்துக் கொண்டுள்ள கோத்தாஸ் நிச்சயம் உலக காஃபி வர்த்தகத்தில் சாதிக்கும் என்பதில் சந்தேகமில்லை!