Published:Updated:

Corona Live Updates: சென்னையில் குறையும் பாதிப்பு - தமிழகத்தில் புதிதாக 4,526 பேருக்குத் தொற்று!

corona spread
corona spread

14.7.2020 : கொரோனா வைரஸ் தொடர்பான முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு..!

14 Jul 2020 7 PM

தமிழகத்தில் புதிதாக 4,526 பேருக்குத் தொற்று!

தமிழகத்தில் இன்று மட்டும் 4,526 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதையடுத்து தமிழகத்தில் கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,47,324 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 4,743 பேர் குணமடைந்து மருத்துவமனைகளில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதனால், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 97,310 ஆக உயர்ந்தது. கொரோனா நோய்த் தொற்றால் இறந்தவர்களின் எண்ணிக்கை 67 அதிகரித்த நிலையில், மொத்த எண்ணிக்கை 2,099 ஆக அதிகரித்துள்ளது.

corona virus
corona virus

சென்னையில் மேலும் 1,078 பேருக்குத் தொற்று!

சென்னையில் மட்டும் இன்று 1,078 பேருக்கு பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. சென்னையில் கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 79,662 ஆக அதிகரித்துள்ளது.

14 Jul 2020 9 AM

இந்தியாவில் கொரோனா நிலவரம்:

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 9,06,752 ஆக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் 24 மணி நேரத்தில் 28,498 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

கொரோனா பரிசோதனை
கொரோனா பரிசோதனை

கொரோனா தொற்றால் 24 மணி நேரத்தில் மட்டும் 553 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், உயிரிழந்தோர் எண்ணிக்கை 23,727 ஆக அதிகரித்திருக்கிறது. அதேபோல், தொற்றுப் பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 5,71,460 ஆகவும் உயர்ந்துள்ளது. 3,11,565 பேர் இந்தியாவில் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

14 Jul 2020 9 AM

முதல்வருக்கு நெகட்டிவ்:

முதல்வர் எடப்பாடி பழனிசாமி
முதல்வர் எடப்பாடி பழனிசாமி

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டதாகத் தமிழக அரசு தெரிவித்துள்ளது. தொடர்ந்து கொரோனா தடுப்புப் பணிகளில் ஈடுபட்டு வருவதாலும் அமைச்சர்கள் சிலருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதாலும், முதல்வருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. அதில் அவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லாதது உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

14 Jul 2020 9 AM

உலகளவில் கொரோனா

உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,32,35,751 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 5,75,525 ஆகவும், கொரோனா வைரஸில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 76,96,381 ஆகவும் உள்ளது.

Corona
Corona
மாதிரிப்படம்

உலகிலேயே அதிகபட்சமாக அமெரிக்காவில் கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டோர் எண்ணிக்கை 34,79,483 ஆக உயர்ந்துள்ளது. அந்நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,38,247 ஆக அதிகரித்துள்ளது.

அடுத்த கட்டுரைக்கு