Published:Updated:

காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்க கோரி பிரதமருக்கு ஜெ. கடிதம்

சென்னை: காவிரி மேலாண்மை வாரியத்தை தாமதமின்றி அமைக்க வேண்டும் என வலியுறுத்தி பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு முதலமைச்சர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார்.

இது தொடர்பாக பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு ஜெயலலிதா எழுதியுள்ள கடிதத்தில்," பாசன ஆண்டு நெருங்குவதால் காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் காவிரி நீர் ஒழுங்குமுறை குழுவை உடனே அமைக்க வேண்டும் என்று நான் ஏற்கனவே 22-2-2013 மற்றும் 11-3-2013 ஆகிய நாட்களில் தங்களுக்கு கடிதம் எழுதினேன். ஆனால், காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பு கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 19-ம் தேதி மத்திய அரசிதழில் வெளியிடப்பட்ட பிறகும், அவற்றை அமைக்க மத்திய அரசு தேவையான சுறுசுறுப்பை காட்டவில்லை.

அதன்பின்னர் சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு சார்பில் வழக்கு தொடரப்பட்டது. அதன்பின்னர், காவிரி நீரைப் பகிர்ந்துகொள்வது தொடர்பாக நீர்வளத்துறை செயலர் தலைமையில் மேற்பார்வைக் குழுவை அமைக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது இடைக்கால ஏற்பாடுதான். எனவே, தமிழ்நாடு மற்றும் காவிரி டெல்டா பகுதி விவசாயிகளின் துயரத்தை போக்க வேண்டும் என்றால் நடுவர் மன்றத்தின் இறுதி

##~~##

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தீர்ப்பின்படி, காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் காவிர் நீர் ஒழுங்குமுறை குழு அமைப்பதுதான் ஒரே நிரந்தர தீர்வு ஆகும்.
தமிழக விவசாயிகளின் துன்பத்தைப் போக்குவதற்கு, நடுவர் மன்றத்தின் இறுதி தீர்ப்பை நடைமுறைப்படுத்த மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இறுதித் தீர்ப்பில் உள்ள அறிவிப்புகள் தொடர்பான நடைமுறைகளை இனிமேலும் தாமதப்படுத்தக்கூடாது.
எனவே, மேலும் காலம் தாழ்த்தாமல். காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் காவிரி நீர் ஒழுங்குமுறை குழுவை அமைக்க மத்திய நீர்வளத்துறைக்கு உத்தரவிட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்" என்று கூறப்பட்டுள்ளது.