Published:Updated:

`வயிற்றெரிச்சலில் போராடுகிறார்கள்!' - காங்கிரஸை விமர்சித்த அமித் ஷா #NowAtVikatan

14.12.2019 இன்றைய முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு..!

அமித் ஷா
அமித் ஷா
14 Dec 2019 9 AM

புத்துணர்வு முகாமிற்கு புறப்படும் மதுரை மீனாட்சி அம்மன் கோயில் பார்வதி யானை.

14 Dec 2019 9 AM

புவனேஷ்வர் குமார் விலகல்!

ஷர்துல் தாகூர்
ஷர்துல் தாகூர்
twitter

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டி20 தொடரை இந்திய அணி கைப்பற்றிய நிலையில் ஒருநாள் தொடர் நாளை சென்னையில் தொடங்குகிறது. இதற்காக இரு அணி வீரர்களும் சேப்பாக்கத்தில் பயிற்சி பெற்றுவரும் நிலையில் காயம் காரணமாக இந்திய பௌலர் புவனேஷ்வர் குமார் வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான அணியில் இருந்து விலகியுள்ளார். அவருக்குப் பதிலாக ஷர்துல் தாகூர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். மூன்றாவது டி20 போட்டியின் ஏற்பட்ட காயம் இன்னும் குணமாகததால் தொடரில் இருந்து விலகியுள்ளார் புவனேஷ்வர் குமார்.

14 Dec 2019 10 AM

போதைப்பொருள் பறிமுதல்!

பரமக்குடியில் ரூ.1 கோடி மதிப்புடைய போதை பொருள் சிக்கியது!
பரமக்குடியில் ரூ.1 கோடி மதிப்புடைய போதை பொருள் சிக்கியது!

மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவான போதைப்பொருள் கட்டுப்பாட்டு பணியகம் (என்.சி.பி) ஆஸ்திரேலிய அதிகாரிகளுடன் சேர்ந்து ரூ.1300 கோடி மதிப்புள்ள போதைப்பொருள்களைப் பறிமுதல் செய்துள்ளதாக ஏஎன்ஐ நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. இந்தியா, ஆஸ்திரேலியா அதிகாரிகள் சேர்ந்து கூட்டு நடவடிக்கையில் போதைப்பொருட்களைக் கைப்பற்றியுள்ளனர். இவை சர்வதேச போதைப்பொருள் கும்பல் பதுக்கி வைத்திருந்தவை எனக் கூறப்பட்டுள்ளது. இந்தியாவில் இருந்து 20 கிலோ கோகெயினும், ஆஸ்திரேலியாவில் இருந்து 200 கிலோ மெத்தாம்பேட்டமைன், 55 கிலோ கோகோயின் உள்ளிட்ட போதைப் பொருட்களைப் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் போதைப்பொருள்களைப் பதுக்கி ஈடுபட்ட 5 இந்தியர்கள், 1 அமெரிக்கர், 2 நைஜீரியர் மற்றும் 1 இந்தோனேசியர் அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளனர்.

14 Dec 2019 7 PM

வடகிழக்கு மாநில மக்களின் உரிமைகள் காக்கப்படும்!

``குடியுரிமை சட்டத் திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டது காங்கிரஸ் கட்சிக்கு வயிற்றெரிச்சலை ஏற்படுத்தியிருக்கிறது. அதனால், அக்கட்சியினர் போராடி வருகிறார்கள்'' என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா விமர்சித்திருக்கிறார்.

``என் பெயர் ராகுல் சாவர்க்கர் அல்ல; ராகுல் காந்தி!'' - டெல்லி பேரணியில் சீறிய ராகுல்

ஜார்க்கண்ட் மாநிலத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசாரப் பொதுக்கூட்டத்தில் பேசிய அமித் ஷா, ``வடகிழக்கு மாநில மக்களின் மொழி, கலாசாரம், இன அடையாளம், அரசியல் உரிமைகள் காக்கப்படும் என உறுதியளிக்கிறேன். மோடி தலைமையிலான அரசு இதைக் காக்கும்'' என்று பேசினார்.

`குடியுரிமை பற்றிக்கூடத் தெரியாது; ஆனால்?’ - அஸ்ஸாம் துப்பாக்கிச்சூடு கோரத்தை விவரிக்கும் நண்பர்

குடியுரிமைச் சட்டத் திருத்த மசோதாவை எதிர்த்து அஸ்ஸாம், நாகாலாந்து, திரிபுரா உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில் போராட்டங்கள் வலுத்து வருகின்றன. இதை எதிர்த்து டெல்லி ராம்லீலா மைதானத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில், `இந்தியாவைக் காப்பாற்றுங்கள்' என்ற தலைப்பில் பிரமாண்டப் பேரணி நடைபெற்றது. இதில், கலந்துகொண்ட சோனியா, மன்மோகன் சிங், ராகுல் காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் மத்திய அரசைக் கடுமையாக விமர்சித்துப் பேசியிருந்தனர்.

14 Dec 2019 8 PM

தடுக்கி விழுந்த மோடி!

உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரில் நடைபெற்ற கங்கை கவுன்சிலின் முதல் கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்துகொண்டார். அந்தக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காகச் சென்ற பிரதமர் மோடி கங்கை நதியில் படகு சவாரி செய்தார்.

பின்னர், கங்கை நதிக்கரையில் படிக்கட்டுகளில் ஏறியபோது எதிர்பாராதவிதமாக அவர் தடுக்கி விழுந்தார். இதனால், பதறிய பாதுகாப்பு அதிகாரிகள் அவரை உடனடியாக தூக்கினர். இதில், அவருக்குக் காயம் ஏதும் ஏற்படவில்லை என்று தகவல் வெளியாகியிருக்கிறது.

14 Dec 2019 11 PM

லண்டனில் நடைபெற்ற 2019ம் ஆண்டுக்கானஉலக அழகி போட்டியில் ஜமைக்காவின் டொனி அன் சிங் உலக அழகி பட்டத்தை வென்றார். இந்தியாவின் சுமன் ராவ் இறுதிச் சுற்றுவரை சிறப்பாக முன்னேறி 3வது இடத்தை பிடித்தார்.

14 Dec 2019 9 PM

கலாஷேத்ரா முன்னாள் இயக்குநர் லீலா சாம்சன் மீது சி.பி.ஐ வழக்குப் பதிவு!

நிதி மோசடி செய்ததாக மத்திய கலாசாரத் துறை அளித்த புகாரின்பேரில் சென்னை கலாஷேத்ராவின் முன்னாள் இயக்குநர் லீலா சாம்சன் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்திருக்கிறது.

லீலா சாம்சன்
லீலா சாம்சன்
Twitter

திருவான்மியூரில் செயல்பட்டு வரும் கலாஷேத்ராவின் இயக்குநராகக் கடந்த 2006ம் ஆண்டு முதல் 2012ம் ஆண்டு வரை செயல்பட்டவர் லீலா சாம்சன். மத்திய அரசின் பத்மஸ்ரீ விருது பெற்ற இவர், மத்திய தணிக்கைத் துறையின் தலைவராகவும் செயல்பட்டிருக்கிறார். கலாஷேத்ராவின் இயக்குநராக இவர் பதவி வகித்தபோது கலையரங்கை சீரமைப்பதாகக் கூறி மத்திய கலாசாரத் துறையிடம் ரூ.7 கோடி பெற்றதாகவும் அந்த நிதியை மோசடி செய்ததாகவும் புகார் எழுந்திருக்கிறது. இந்த புகார் தொடர்பாக மத்திய காலாசாரத் துறை சிபிஐயில் அளித்த புகாரின்பேரில் லீலா சாம்சன் மற்றும் கலாஷேத்ராவின் முன்னாள் நிர்வாகிகளான மூர்த்தி, ராமச்சந்திரன், சீனிவாசன், ரவி மற்றும் நீலகண்டன் ஆகியோர் மீது சிபிஐ 4 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்திருக்கிறது.