Published:Updated:

`உலகளவில் 20 லட்சத்தை நெருங்கும் எண்ணிக்கை!’ - #CoronaVirus அப்டேட்ஸ் #NowAtVikatan

கொரோனா பரிசோதனை
கொரோனா பரிசோதனை

15-04-2020 | இன்றைய முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு....!

15 Apr 2020 2 PM

கொரோனா தடுப்பு நடவடிக்கையில் சென்னை ஐஐடி!

சென்னை ஐஐடி
சென்னை ஐஐடி

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக சென்னை ஐஐடி நிர்வாகம், விடுதி ஒன்றை சென்னை மாநகராட்சிக்கு வழங்குவதாக அறிவித்துள்ளது. சென்னை ஐஐடி-க்குச் சொந்தமான விடுதி ஒன்றை கொரோனா தனிமை வார்டாக மாற்றிக்கொள்ளும்படி நிறுவன இயக்குநர் பாஸ்கர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கேட்டுக்கொண்டுள்ளார்.

15 Apr 2020 7 AM

சென்னை வர்த்தக மையம்!

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபர்களுக்குச் சிகிச்சை அளிக்க, சென்னை வர்த்தக மையத்தில் 600 படுக்கைகள் கொண்ட ஐசோலேஷன் வார்டு அமைக்கப்பட்டுள்ளது. இதை அதிகாரிகள் நேரடியாக ஆய்வு செய்தனர்.

15 Apr 2020 7 AM

20 லட்சத்தை நெருங்கும் எண்ணிக்கை!

கொரோனா
கொரோனா

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொடர்ந்து வேகமாகப் பரவி வருகிறது. குறிப்பாக அமெரிக்காவில், தினமும் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையில் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் ஆயிரங்களில் அதிகரித்து வருகிறது. உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தற்போது 20 லட்சத்தை நெருங்கியுள்ளது.

உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 19,98,111 ஆக இருக்கிறது. அதிகபட்சமாக அமெரிக்காவில் 6,13,886 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஸ்பெயினில் 1,74,060 பேரும், இத்தாலியில் 1,62,488 பேரும், பிரான்ஸில் 1,43,303 பேரும், ஜெர்மனியில் 1,32,210 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் பட்டியலிலும் அமெரிக்காவே முதலில் உள்ளது. இதுவரை அமெரிக்காவில் மட்டும் கொரோனாவால் 26,047 பேர் பலியாகியுள்ளனர். உலகம் முழுவதும் கொரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கை 1,26,604 ஆக இருக்கிறது. உலகம் முழுவதும் கொரோனாவிலிருந்து மீண்டு வந்தவர்களின் எண்ணிக்கை 4,78,659 ஆக இருக்கிறது.

அடுத்த கட்டுரைக்கு