Election bannerElection banner
Published:Updated:

கொரோனா:`டெல்லியில் வார இறுதி நாள்களில் முழு ஊரடங்கு!’ - முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் #NowAtVikatan

கொரோனா
கொரோனா

15-04-2021 | இன்றைய முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு..!

15 Apr 2021 1 PM

டெல்லியில் வார இறுதியில் முழு ஊரடங்கு!

அர்விந்த் கெஜ்ரிவால்
அர்விந்த் கெஜ்ரிவால்

இந்தியாவில் தொடர்ந்து கொரோனா பாதிப்பு அதிகரித்துவருகிறது. பல மாநிலங்களில் அரசுகள் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துவருகின்றன. இந்தநிலையில், டெல்லியில் கொரோனா பரவலைத் தடுக்க புதிய கட்டுப்பாடுகளை அந்த மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்திருக்கிறார். டெல்லியில் தினசரி பாதிப்பு 17 ஆயிரத்துக்கும் அதிகமாகப் பதிவாகிவரும் நிலையில் வார இறுதி நாள்களான சனி, ஞாயிறு தினங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தினங்களில் அத்தியாவசியத் துறைகள் மட்டுமே இயங்கும் என்றும், உணவகங்கள் ஆன்லைன் ஆர்டர் மூலம் மட்டுமே செயல்பட வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. வார இறுதி நாள்களில் மார்கெட்டுகள், சினிமா திரையரங்குகள், மால்கள் எதுவும் செயல்படாது.

15 Apr 2021 11 AM

ஆன்லைனில் அரியர் தேர்வுகள்!

`கொரோனா காரணமாக தமிழகத்தில் ரத்துசெய்யப்பட்ட அரியர் தேர்வுகள் ஆன்லைன் முறையில் நடத்தப்படும்’ என தமிழக அரசு அறிவித்துள்ளது. அரியர் தேர்வுகளை எட்டு வாரங்களில் நடத்தி முடிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

15 Apr 2021 9 AM

இரண்டு லட்சத்தைத் தாண்டிய ஒருநாள் பாதிப்பு!

இந்தியாவில் தொடர்ந்து கொரோனா பாதிப்பு அதிகரித்துவருகிறது. தற்போது ஒரு நாள் பாதிப்பு இதுவரை இல்லாத அளவாக 2 லட்சத்தைக் கடந்திருக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் மேலும் புதிதாக 2,00,739 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்திருக்கிறது. இதன் காரணமாக இந்தியாவில் மொத்த கொரோனா பாதிப்பு 1,40,74,564 என்ற எண்ணிக்கையை எட்டியிருக்கிறது.

கொரோனா
கொரோனா

கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா காரணமாக பலியானவர்களின் எண்ணிக்கை 1,038. இந்தியாவில் இதுவரை கொரோனா பாதிப்பு காரணமாக பலியானவர்களின் எண்ணிக்கை 1,73,123-ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் இதுவரை கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டு வந்தவர்களின் எண்ணிக்கை 1,24,29,564-ஆக இருக்கிறது. தற்போது மருத்துவமனைகளில் 14,71,877பேர் சிகிசையில் இருக்கிறார்கள். இந்தியாவில் 11,44,93,238 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டிருக்கிறது.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு