Published:Updated:

சர்வதேச கிரிக்கெட் போட்டியிலிருந்து தோனி ஓய்வு!

தோனி
தோனி

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக தோனி அறிவிப்பு

15 Aug 2020 8 PM

சர்வதேச கிரிக்கெட் போட்டியிலிருந்து தோனி ஓய்வு!

'ஆதரவு அளித்த ரசிகர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார் தோனி.

39 வயதான தோனி, 350 ஒருநாள் போட்டிகளிலும், 90 டெஸ்ட் போட்டியிலும் விளையாடியுள்ளார். 2003ல் வங்கதேச அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் அறிமுகமானார்.

350 ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் விலையாடியுள்ள தோனி, 10,773 ரன்களும். 98 டி20 போட்டிகளில் 1,617 ரன்களும், 90 டெஸ்ட் போட்டிகளில் 4,876 ரன்களும் சேர்த்துள்ளார்

2008ம் ஆண்டு முதல் 2014 வரை இந்திய அணியின் கேப்டனாக பொறுப்பு வகித்துள்ளார்.

15 Aug 2020 6 PM

தமிழகத்தில் புதிதாக 5,860 பேருக்குத் தொற்று!

தமிழகத்தில் இன்று மட்டும் 5,860 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதையடுத்து தமிழகத்தில் கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,32,105 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,236 பேர் குணமடைந்து மருத்துவமனைகளில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதையடுத்து குணமடைந்தவர்கள் மொத்த எண்ணிக்கை, 2,72,251 ஆக அதிகரித்தது. தமிழகத்தில் கொரோனா நோய்த் தொற்றால் இறந்தவர்களின் எண்ணிக்கை 127 அதிகரித்த நிலையில், மொத்த எண்ணிக்கை 5641 ஆக அதிகரித்துள்ளது.

கோவிட் 19
கோவிட் 19

சென்னையில் மேலும் 1,179 பேருக்குத் தொற்று!

சென்னையில் மட்டும் இன்று 1,179 பேருக்கு பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. சென்னையில் கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,15,444 ஆக அதிகரித்துள்ளது.

15 Aug 2020 4 PM

அ.தி.மு.க அறிக்கை: 

அ.தி.மு.க கட்சி வட்டாரத்தில் முதல்வர் வேட்பாளர் தொடர்பான விவாதங்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இன்று அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் பன்னீர் செல்வம், துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி இடையே அமைச்சர்கள் குழு தொடர்ந்து ஆலோசனைகள் நடத்தியது. இந்த நிலையில் தற்போது அதிமுக தரப்பில் இருவர் பெயரிலும் கூட்டறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

சர்வதேச கிரிக்கெட் போட்டியிலிருந்து தோனி ஓய்வு!

அதில், ``கட்சி நிர்வாகிகள் யாரும் தலைமையின் ஒப்புதல் இல்லாமல் தனிப்பட்ட கருத்துகளை தெரிவித்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். மீண்டும் வெற்றியை ஈட்ட அனைவரும் ஒன்றிணைந்து உழைக்க வேண்டிய நேரம் இது.,

சிறுசலசலப்புக்கும் இடம் தராமல் நம்மை வீழ்த்த நினைப்போரின் பேராசைகளுக்கு வாய்ப்பளிக்காமல் ஒன்றுபட்டு உழைத்திட கேட்டுக்கொள்கிறோம்” என குறிப்பிடப்பட்டுள்ளது.

15 Aug 2020 11 AM

அமைச்சர்கள் அவசர ஆலோசனை!

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இல்லத்திற்கு மூத்த அமைச்சர்கள் சிலர் அவசர ஆலோசனைக்காக செல்கின்றனர். முன்னதாகத் தலைமை செயலகத்தில் அமைச்சர் ஜெயக்குமார் அறையில், அமைச்சர்கள் ஜெயக்குமார், செங்கோட்டையன், சி.வி.சண்முகம் உள்ளிட்டோர் ஆலோசனை நடத்தினர். இந்நிலையில் முதல்வரை அவரது இல்லத்தில் சந்தித்து பேச உள்ளனர். எஸ்.பி.வேலுமணி, தங்கமணி, கே.பி.அன்பழகன், காமராஜ், உடுமலை ராதாகிருஷ்ணன், கே.சி.வீரமணி, பெஞ்சமின் ஆகியோரும் முதல்வரை சந்திக்கின்றனர்.

தேனியில் அடுத்த முதல்வர் ஓ.பி.எஸ் என போஸ்டர் ஒட்டப்பட்டிருந்த நிலையில் அமைச்சர்களின் அவசர ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. முதல்வரை சந்திக்கும் முன்னர் அமைச்சர்கள் துணை முதல்வர் பன்னீர் செல்வத்தையும் சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார்கள். அ.தி.மு.க-வில் வரும் தேர்தலுக்கான முதல் வேட்பாளர் யார் என்பது தொடர்பான விவாதங்கள் தற்போது அனல் பறக்கத் தொடங்கி உள்ளன. தேனியில் ஒட்டப்பட்ட போஸ்டர் தொடர்பான செய்தியை கீழே உள்ள லிங்கில் தெரிந்துகொள்ளலாம்!

`தமிழகத்தின் நிரந்தர முதல்வர் ஐயா OPS' - தேனியை அதிர வைத்த போஸ்டர்கள்
15 Aug 2020 10 AM

25 லட்சத்தைக் கடந்த கொரோனா பாதிப்பு: 

கோவிட் -19 கொரோனா
கோவிட் -19 கொரோனா

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 25 லட்சத்தைக் கடந்திருக்கிறது. மொத்த பாதிப்பு 25,26,193 ஆக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் 24 மணி நேரத்தில் 65,002 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

கொரோனா தொற்றால் 24 மணி நேரத்தில் மட்டும் 996 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், உயிரிழந்தோர் எண்ணிக்கை 49,036 ஆக அதிகரித்திருக்கிறது. அதேபோல், தொற்று பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 18,08,937 ஆகவும் உயர்ந்துள்ளது.

15 Aug 2020 9 AM

ராமநாதபுரத்தில் சுதந்திர தின விழா!

இராமநாதபுரத்தில் 74-வது சுதந்திர தின விழா மாவட்ட ஆட்சியரின் கொடியேற்றத்துடன் தொடங்கியது நேரலை. உ.பாண்டி

Posted by Vikatan EMagazine on Friday, August 14, 2020

ராமநாதபுரத்தில் 74-வது சுதந்திர தின விழா மாவட்ட ஆட்சியரின் கொடியேற்றத்துடன் தொடங்கியது.

நேரலை: உ.பாண்டி

15 Aug 2020 8 AM

தேசியக் கொடியேற்றினார் முதல்வர் பழனிசாமி!

இந்திய திருநாட்டின் 74 -வது சுதந்திர தினத்தையொட்டி சென்னை கோட்டைக் கொத்தளத்தில் தேசியக் கொடியேற்றினார் முதல்வர் பழனிசாமி. பின்னர் வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை திறந்த ஜீப்பில் சென்று ஏற்றார் முதல்வர் பழனிசாமி. தற்போது முதல்வர் எடப்பாடி பழனிசாமி, சுதந்திர தின உரையை வழங்கி வருகிறார். சுதந்திர தின விழாவில் துணை முதல்வர் பன்னீர் செல்வம் மற்றும் அமைச்சர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

15 Aug 2020 7 AM

பிரதமர் மோடி நம்பிக்கை!

நாட்டின் 74வது சுதந்திர தினத்தையொட்டி டெல்லி செங்கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றினார் பிரதமர் மோடி. தொடர்ந்து அவர் தனது சுதந்திர தின உரையை வழங்கி வருகிறார். `கொரோனாவுக்கு எதிராக போராடும் முன்களப் பணியாளர்களுக்கு நன்றி’ தெரிவித்த பிரதமர் மோடி கொரோனாவுக்கு எதிரான போரில் இந்தியா நிச்சயம் வெல்லும் என நம்பிக்கை தெரிவித்தார். கொரோனா அச்சம் காரணமாக இன்றைய சுதந்திர தின நிகழ்வில் குழந்தைகளின் முகங்களை காண முடியவில்லை என பிரதமர் மோடி வருத்தம் தெரிவித்தார்.

அடுத்த கட்டுரைக்கு