Published:Updated:

பீகார்: மீண்டும் முதல்வராகிறார் நிதிஷ் குமார்! - எம்.எல்.ஏ-க்கள் கூட்டத்தில் முடிவு? #NowAtVikatan

பீகார் தேர்தல்
பீகார் தேர்தல்

15-11-2020 | இன்றைய முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு...!

15 Nov 2020 1 PM

அடுத்த முதல்வர் நிதிஷ் குமார்?

பீகாரில் மூன்று கட்டங்களாக நடந்த சட்டசபைத் தேர்தலில் பா.ஜ.க கூட்டணி வெற்றிபெற்று ஆட்சியைத் தக்கவைத்துக்கொண்டிருக்கிறது. இந்தத் தேர்தலில் பா.ஜ.க 74 இடங்களில் வென்று மாநிலத்தில் இரண்டாவது தனிப்பெரும் கட்சியாகவும், அதன் கூட்டணிக் கட்சியான நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் 43 இடங்களிலும் வெற்றிபெற்றன.

இன்று பாட்னாவில் கூட்டணிக் கட்சிகளின் எம்.எல்.ஏ-க்களின் கூட்டம் நடைபெற்றது. இதில் ராஜ்நாத் சிங், தேவேந்திர ஃபட்னாவிஸ் ஆகியோர் கலந்துகொண்டனர். இந்தக் கூட்டத்தில் ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைவர் நிதிஷ் குமார் முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது. இதனால் தொடர்ச்சியாக 4-வது முறையாக நிதிஷ் குமார் பீகாரின் முதல்வராகப் பொறுப்பேற்கிறார். பா.ஜ.க-வின் சுஷில் மோடி துணை முதல்வராகத் தொடர்வார் என்று கூறப்படுகிறது.

15 Nov 2020 11 AM

முதலிடத்தில் மதுரை மண்டலம்!

டாஸ்மாக்
டாஸ்மாக்

தீபாவளி உள்ளிட்ட பண்டிகைக் காலங்களில் மதுபான கடைகளில் வழக்கமான விற்பனையைவிட பன்மடங்கு விற்பனை அதிகரிப்பது தொடர்கதையாகிவருகிறது. இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை நாள்களான வெள்ளிக்கிழமை, சனிக்கிழமை ஆகிய இரண்டு தினங்களில் மட்டும் ரூ.466 கோடிக்கு மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டிருக்கின்றன. மதுரை மண்டலத்தில் அதிகபட்சமாக ரூ103.82 கோடிக்கு மது விற்பனையானது. இரண்டாவது இடமாக திருச்சி மண்டலத்திலும், மூன்றாவது இடமாக சென்னை மண்டலத்திலும் அதிக அளவில் மது விற்பனை நடந்திருப்பதாகக் கூறப்பட்டிருக்கிறது.

அடுத்த கட்டுரைக்கு