இன்ஷூரன்ஸ்... மாதச் சம்பளம் ஈட்டும் ஒவ்வொருவரும் அவசியம் செய்திருக்க வேண்டிய ஒன்று. இன்ஷூரன்ஸ் பாலிசிகளைத் தேர்வுசெய்யும்போது கவனிக்க வேண்டிய 15 வழிமுறைகள் இங்கே...

டேர்ம் இன்ஷூரன்ஸ்

1. எவ்வளவு கவரேஜ் தேவை?

வருமானம் ஈட்டும் ஒவ்வொரு நபரும், மனித வாழ்க்கை மதிப்பீட்டு முறையில் (HLV) டேர்ம் இன்ஷூரன்ஸ் எடுத்துக்கொள்ள வேண்டும். உதாரணமாக, ஒருவர் ஓராண்டுக்கு ரூ.3 லட்சம் சம்பாதிக்கிறாரென்றால், குறைந்தபட்சம் ரூ.30 லட்சத்திலிருந்து அதிகபட்சம் ரூ.60 லட்சம் வரை டேர்ம் இன்ஷூரன்ஸ் எடுக்க வேண்டும்.

2. க்ளெய்ம் செட்டில்மென்ட்

க்ளெய்ம் செட்டில்மென்ட் குறித்த விவரங்களை ஒவ்வொரு நிறுவனத்தின் இணையதளம் மற்றும் ஐ.ஆர்.டி.ஏ.ஐ இணைய தளத்தில் பார்க்கலாம். சில நிறுவனங்களின் க்ளெய்ம் செட்டில்மென்ட் ஆண்டுதோறும் மாறுவதால், குறைந்தபட்சம் கடந்த ஐந்து ஆண்டுகளின் க்ளெய்ம் செட்டில்மென்ட்டை அடிப்படையாகவைத்து இன்ஷூரன்ஸ் பாலிசி எடுக்கலாம்.

3. மருத்துவம் தொடர்பான கேள்விகள்

பாலிசி எடுக்கும் தறுவாயில், பாலிசி விண்ணப்பத்தில் உடல்நலம் மற்றும் ஏற்கெனவே ஏதேனும் வியாதிகள் இருந்தால் அவற்றின் விவரங்களை மறைக்காமல் குறிப்பிட வேண்டியது அவசியம். புகையிலையை எந்த வகையிலாவது பயன்படுத்துபவராக இருந்தால் பாலிசியின் பிரீமியம் தொகை 40%-50% அதிகரிக்கும்.

4. ஆன்லைன் / ஆஃப்லைன் டேர்ம் இன்ஷூரன்ஸ்

`ஆஃப்லைன் டேர்ம் இன்ஷூரன்ஸ்’ என்பது இன்ஷூரன்ஸ் ஏஜென்ட்டிடமோ, புரோக்கர் மூலமோ எடுக்கும் பாலிசி. `ஆன்லைன் டேர்ம் இன்ஷூரன்ஸ்’ அந்தந்த இன்ஷூரன்ஸ் நிறுவனத்தின் வலைதளத்துக்கு சென்று நாமே எடுப்பது. நிறுவனம் கேட்கும் கேள்விகளுக்கு விடையளித்து, அவர்கள் சொல்லும் மருத்துவப் பரிசோதனைகளை மேற்கொண்டு, பாலிசியை வாங்கிக்கொள்ளலாம். ஆன்லைனில் எடுக்கும் இன்ஷூரன்ஸ் பாலிசிக்கான பிரீமியம் குறைவு.

5. பிரீமியம் தொகை

பாலிசிக்கான பிரீமியம் ஒவ்வொரு நிறுவனத்துக்கும் மாறுபடும். பாலிசியின் அம்சங்கள் மற்றும் தன்மையைப் பொறுத்து மாறுபடும். பிரீமியத்தை மட்டும் கருத்தில் கொள்ளாமல் அந்த நிறுவனத்தின் ஆளுமை, க்ளெய்ம் செய்யும் வகை, எத்தனை ஆண்டுகளாக இந்தத் துறையில் இருக்கிறது என்பதையெல்லாம் கருத்தில்கொண்டு பாலிசி எடுப்பது மிகவும் நல்லது.

6. ரைடர்

`ரைடர்’ என்பது அடிப்படை பாலிசியின் மீது ஒருசில கூடுதல் கவரேஜ் கிடைக்க வழிவகுக்கும் துணை பாலிசி. பொதுவாக, அனைத்து டேர்ம் இன்ஷூரன்ஸ் பாலிசிகளிலும் விபத்தால் உண்டாகும் மரணம், விபத்தால் உண்டாகும் உடலுறுப்பு இழப்பு மற்றும் சில கடுமையான நோய்களால் பாதிப்பு ஏற்படுவது ஆகியவற்றுக்குக் கூடுதல் தொகை கிடைக்க ரைடர் உதவியாக இருக்கும். இதனால் பாலிசியின் பிரீமியம் தொகை சற்று அதிகரிக்கும். அவரவர் தேவைக்கேற்ப ரைடர் சேர்த்துக்கொள்வது நல்லது. உதாரணமாக, விற்பனைப் பிரதிநிதிகள் அதிக நேரம் பயணம் செய்ய வேண்டி வருமென்பதால், இவர்கள் விபத்தால் உண்டாகும் மரணம் போன்ற வற்றுக்கான ரைடரைச் சேர்ப்பது நல்லது.

7. சம்பாதிக்கும் காலம் வரை டேர்ம் இன்ஷூரன்ஸ்

30 வயது நிரம்பிய ஒருவர் 80 வயது வரை டேர்ம் இன்ஷூரன்ஸ் வாங்க வேண்டுமா என்றால் தேவையில்லை. ஏனெனில், ஒருவரின் சம்பாத்தியம் ஈட்டும் வயது 60 மட்டுமே. இது தவிர, 60 வயதில் ஒருவர் அவரின் அனைத்து நிதிப் பொறுப்புகளையும் முடித்திருக்கக்கூடும். மேலும், பல குடும்ப உறுப்பினர்கள் நிதியளவில் பாலிசிதாரரைச் சார்ந்திருக்க மாட்டார்கள். எனவே, 60 வயது வரை மட்டும் கவரேஜ் இருக்கும்படி பார்த்துக்கொள்வது நல்லது.

ஹெல்த் இன்ஷூரன்ஸ்

இனி ஹெல்த் இன்ஷூரன்ஸ் குறித்த முக்கிய அம்சங்களைப் பார்ப்போம்.

8. ஹெல்த் இன்ஷூரன்ஸ்... நிறுவனத்தின் தரம் மற்றும் நெட்வொர்க் ஹாஸ்பிட்டல்கள்

மருத்துவக் காப்பீடு எடுப்பதன் நோக்கமே, நோய்வாய்ப்படும்போது ஏற்படும் அவசரகாலச் செலவுகளைச் சரிசெய்து கொள்வதற்காகத்தான். எனவே, ஹெல்த் இன்ஷூரன்ஸ் எடுக்கும் போது, எந்தெந்த மருத்துவமனையுடன் அந்தக் காப்பீட்டு நிறுவனம் ஒப்பந்தம் செய்திருக்கிறது என்பதையும், அந்த மருத்துவமனை உங்கள் ஊருக்கு அருகிலிருக்கிறதா என்பதையும் பார்த்துக் கொள்வது நல்லது.

ஏற்கெனவே ஏதேனும் வியாதிகள் இருந்தால் அவற்றின் விவரங்களை விண்ணப்பத்தில் குறிப்பிட வேண்டும்.

9. க்ளெய்ம் உரிமைகோரல் விகிதம்

`உரிமைகோரல் விகிதம்’ என்பது ஓராண்டில் பாலிசியின் மொத்த வசூல் செய்த பிரீமியம் தொகையை அந்த ஆண்டில் க்ளெய்ம் செய்த தொகையுடன் கழித்தால் வரும் தொகை. இது ஒவ்வோர் ஆண்டும் சராசரியாக 50-60 சதவிகிதத்துக்கு மிகாமல் இருக்கும் நிறுவனமாகப் பார்த்து தேர்வுசெய்ய வேண்டியது அவசியம். உதாரணமாக, சில காப்பீட்டு நிறுவனங்களின் க்ளெய்ம் உரிமைகோரல் விகிதம் 100 சதவிகிதத்துக்குமேல் இருக்கிறது. இது போன்ற ஒரு நிறுவனத்துக்கு வருமான இழப்பீடு தொடர்ந்து வரும்பட்சத்தில், அந்த நிறுவனத்தால் சிறப்பாகச் செயலாற்ற முடியாமல் போகும். இது தொடர்ந்தால் அந்த நிறுவனம் மூடும் நிலைக்குத் தள்ளப்படலாம்.

10. இணைக் கட்டணம்

சில நோய்களுக்கு இணைக் கட்டணம் (கோபேமென்ட்) செலுத்த வேண்டும். இது குறித்து பாலிசி ஆவணத்தில் தெளிவாக விளக்கம் தரப்பட்டிருக்கும். இதன் சதவிகிதம் சுமார் 20%, அதிகபட்சமாக 40% வரை இருக்கும். எனவே, எந்தெந்த நோய்களுக்கு இணைக் கட்டணம் இருக்கிறது என்று பார்த்து, அதற்குத் தகுந்தாற்போல் பாலிசி எடுக்க வேண்டும். மருத்துவக் காப்பீடு எடுப்பதற்கு முன்னர் இணைக் கட்டணம் பற்றித் தீர விசாரிக்க வேண்டியது அவசியம்.

11. சிறப்பு பாலிசிகள்

சர்க்கரைநோய் மற்றும் இதயநோய் உள்ளவர்களுக்கு சாதாரண பாலிசி எடுக்க முடியாது. இவர்களுக்கான பிரத்யேக பாலிசிகளை எடுத்துக்கொள்ள வேண்டும். பொதுவாக, 45 வயதுக்குள் இருப்பவர்களுக்கு மருத்துவப் பரிசோதனை இருக்காது. எனவே, தாங்களாகவே முன்வந்து தங்களுக்கிருக்கும் நோயைப் பற்றிக் கூறி அதற்கேற்ற பிரத்யேக பாலிசிகளை எடுத்துக்கொள்வது நல்லது.

12. எவ்வளவு தொகைக்கு பாலிசி?

திருமணமாகாதவராக இருந்தால், தனிநபர் பாலிசி எடுத்துக்கொள்வது சிறந்தது. திருமணமான பின்னர் உங்கள் மனைவி / கணவரை இதே பாலிசியில் சேர்த்துக் கொள்ளலாம். திருமணமாகி, குழந்தை களுடன் இருக்கும்பட்சத்தில், குடும்பம் முழுவதையும் கவர் செய்யுமாறு ஃபேமிலி ஃப்ளோட்டர் பாலிசியைத் தேர்வுசெய்யலாம். தனிநபராக இருந்தால் கவரேஜ்-ஆக குறைந்தபட்சம் ரூ.3 லட்சம் முதல் அதிகபட்சமாக

ரூ.5 லட்சம் வரை எடுத்துக் கொள்வது நல்லது. இதுவே, ஒரு ஃபேமிலி ஃப்ளோட்டர் பாலிசி எடுக்கும்பட்சத்தில், ரூ.5 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை எடுக்கலாம்.

மோட்டார் இன்ஷூரன்ஸ்

இனி மோட்டார் இன்ஷூரன்ஸ் தொடர்பான அம்சங்களைப் பார்ப்போம்.

13. தேர்டு பார்ட்டி இன்ஷூரன்ஸ் மட்டும் போதாது!

`தேர்டு பார்ட்டி இன்ஷூரன்ஸ்’ என்பது நீங்கள் வாகனம் ஓட்டும்போது, உங்களால் வேறு ஒரு வாகனத்துக்கோ ஒரு மனிதனுக்கோ ஏதேனும் இழப்பு ஏற்படும்பட்சத்தில், அவர்களுக்கான இழப்பீட்டைக் கொடுக்க உதவும் வகையில் மட்டுமே அமையும். அந்த விபத்தில் உங்கள் வாகனம் பழுதடைந்தால் எந்தவிதமான க்ளெய்மையும் பெற முடியாது. ஆகவே, ஒருங்கிணைந்த காப்பீடு எடுத்துக்கொள்வது நல்லது. இந்த வகையான பாலிசியின் பிரீமியம் சற்று அதிகமாக இருந்தாலும், நம் வாகனத்துக்கு ஏற்படும் இழப்பைச் சரிசெய்ய உதவும்.

14. பம்பர் டு பம்பர் கவரேஜ்

கார் இன்ஷூரன்ஸைப் பொறுத்தவரை, ஒரு முழுமையான பாலிசியைத் தேர்ந்தெடுத்துக் கொள்வது மிக அவசியம். இந்த பம்பர் டு பம்பர் கவரேஜ், காரின் அனைத்து பாகங்களையும் கவர் செய்வதுடன், காரிலுள்ள மின்சாரச் சாதனங்கள் வரை கவர் செய்வதால், காருக்கு ஏற்படும் எந்தவிதமான இழப்பையும் ஈடுசெய்ய உதவும்.

மேலும், ஜீரோ தேய்மான கவரேஜ் உள்ள பாலிசி எடுக்கும்பட்சத்தில், எந்த வருடத்தில் பாலிசி க்ளெய்ம் செய்தாலும் கூடுதல் கட்டணம் இருக்காது; காரில் பழுதடைந்த பாகத்துக்கு பதில் புதிய பாகம் பொருத்தும்போதும், எந்தக் கூடுதல் கட்டணமும் செலுத்தாமலிருக்க வழிவகுக்கும்.

15. நாமினி கட்டாயம்

சிலர் தாங்கள் எடுத்திருக்கும் பாலிசிகளின் விவரங்களை தங்கள் குடும்ப உறுப்பினர்களுக்குத் தெரியப்படுத்தாமலிருப்பார்கள். அதனாலேயே இன்ஷூரன்ஸ் நிறுவனங்களில் பல கோடி ரூபாய் உரிமை கோராமல் நிலுவையிலுள்ளது. பாலிசி எடுப்பதே, ஏதாவது அசம்பாவிதம் நடக்கும் சமயத்தில் குடும்பத்துக்கு உதவத்தான். ஆகவே, எந்த பாலிசியாக இருந்தாலும் நாமினியை நியமிக்க வேண்டும்.

இன்ஷூரன்ஸ் பாலிசி எடுக்கும்போது இந்த 15 வழிமுறைகளை இனியாவது பின்பற்றலாமே!