ஹைமெனோப்தெரா (Hymenoptera) என்ற வகையைச் சேர்ந்த பூச்சிகளே, எறும்புகள். உலகளவில் 90 குடும்பங்களைச் சேர்ந்த ஒரு லட்சம் வகை எறும்புகள் வாழ்கின்றன. அவற்றில், 57 குடும்பங்களைச் சேர்ந்த 8,000 வகை எறும்புகள் இந்தியாவில் வாழ்கின்றன. அவற்றில் நான்கு...

இன்ச்மேன் எறும்புகள்

புல் எறும்புகளில் ஒரு வகை. ஆஸ்திரேலியாவைப் பூர்வீகமாகக்கொண்டவை, தென்கிழக்கு நாடுகளில் அதிகம் காணப்படும். பெரிய உருவத்தை வைத்து கிடைத்த பெயர்தான், இன்ச்மேன். பாறை சந்துகளிலும் சிறு சிறு ஓட்டைகளிலும் கூடுகளை அமைக்கும். மற்ற எறும்புகள் போல கூட்டமாக வாழ்ந்தாலும், இரை தேட தனியாகவே செல்லும். புழுக்கள், மற்ற பூச்சிகள், சிலந்திகள், லார்வாக்களை உண்கின்றன.

குளவிகள், தேனீக்கள் போன்றே கொடுக்கு இருக்கும். புல்டாக் எறும்பு இனங்களிலேயே அதிக நச்சுத்தன்மையுள்ளவை. பூச்சிகளில் மிகக்கொடிய நஞ்சுகளில் இவற்றின் நஞ்சும் ஒன்று.

குதிக்கும் எறும்புகள்

இன்ச்மேன் எறும்பும் இதுவும் ஒரே பேரினத்தைச் சேர்ந்த துணை இனங்கள். ஆஸ்திரேலியா, டாஸ்மேனியாவில் வாழும் நச்சுத்தன்மை எறும்புகளில் இதுவும் ஒன்று. அதிக தூரத்துக்கு தாவித் தாவிச் செல்லும் என்பதால் இந்தப் பெயர். இவற்றில் ஆண் எறும்புகளையும் உழைப்பாளர் எறும்புகளையும் அவற்றின் கீழ்தாடையை வைத்துக் கண்டுபிடித்துவிடலாம்.

பகலில் உலவும். வெட்டவெளி நிலப்பரப்புகளில் வாழும். இவற்றின் கூடுகள் புதர்கள், வெட்டவெளிக் காடுகள், மணற்பாங்கான நிலங்கள். சிறு சிறு பூச்சிகளை, தன் நஞ்சைச் செலுத்திக் கொன்று உணவாக்கிக்கொள்ளும். மற்ற எறும்புகளும், முதுகெலும்பில்லாத உயிரினங்களும் ஜம்பர் எறும்புகளை விரும்பிச் சாப்பிடுவதால், இவற்றுக்கு ஆபத்தும் அதிகம். மனிதர்களுக்கு ஆபத்தான எறும்புகளில் இவற்றின் நஞ்சும் ஒன்று.

சுளுக்கை எறும்புகள் அல்லது சுள்ளெறும்புகள்

தமிழில் முசுறு, சுளுக்கை போன்ற பெயர்களில் அழைக்கப்படும் ஆசிய வீவர் (Asian Weaver) எறும்புகள், மரங்களில் வாழக்கூடியவை. உலகிலேயே இலைகளைத் தைத்துக் கூடுகட்டும் எறும்பு ஒரே எறும்பு. லார்வாக்களின் பட்டு நூலில் இலைகளைக் கோத்துக் கூடு கட்டிக்கொள்ளும். இவற்றின் காலனிகள் மிகப்பெரியவை. சில மரங்களில் நூற்றுக்கணக்கான கூடுகள் இருக்கும். இவற்றில் 5 லட்சம் எறும்புகள் வரை வாழும். சிறு பூச்சிகளைச் சாப்பிடும். மைனர் மற்றும் மேஜர் உழைப்பாளர்கள் இருப்பார்கள். மேஜர் உழைப்பாளர்கள் 8 முதல் 10 மில்லிமீட்டர் இருக்கும். மைனர் வகைகள் இதில் பாதி அளவு இருக்கும். இவை தம் எல்லையைப் பாதுகாப்பதில் மிகுந்த அக்கறை கொண்டவை. தென்கிழக்கு ஆசியாவில், இவை விவசாயிகளின் நண்பன்.

டிரைவர் எறும்புகள்

டோரிலஸ் (Dorylus) எனப்படும் இந்த டிரைவர் எறும்புகள், ஆப்பிரிக்கா மற்றும் ஆசியாவின் வெப்பமண்டலப் பகுதிகளில் காணபப்டும். ஒரு காலனிக்கு 2 கோடி எறும்புகள் இருக்கும். (இதில், ‘போராளி எறும்புகள்’ என்ற தனி வகையும் உண்டு. மற்றவற்றைவிடப் பெரிய தலையுடையவை) தங்கள் காலனி பகுதியில் உணவுப் பற்றாக்குறை ஏற்படும்போது, இடத்தை மாற்றிக்கொள்ள குழுக்களாக அணிவகுத்துச் செல்லும். ஓர் அணிவகுப்பில் 5 கோடி எறும்புகள் இருக்கும். கோடிக்கணக்கில் செல்வதால் மனிதர்கள் அருகில் நெருங்க மாட்டார்கள். ஒரு மணி நேரத்துக்கு 20 மீட்டர்களே பயணிக்கும். காலனியில் இருக்கும் மெதுவாகப் பயணிக்கும் எறும்புகளுக்காகவே இப்படி பொறுமையாகச் செல்கின்றன. இவற்றின் உணவு, சிறிய பூச்சிகள் முதல் பெரிய எலிகள் வரை. எனவே, ஆப்பிரிக்க மசாய் இன மக்களின் விவசாய நண்பனாகப் பார்க்கப்படுகின்றன.

-க.சுபகுணம்