Published:Updated:

இன்று லேசான மழைக்கு வாய்ப்பு... சென்னை வானிலை மையம் தகவல்!

இன்று லேசான மழைக்கு வாய்ப்பு... சென்னை வானிலை மையம் தகவல்!
இன்று லேசான மழைக்கு வாய்ப்பு... சென்னை வானிலை மையம் தகவல்!

மிழகத்தில், இன்று லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

குமரிக் கடலில் இருந்து ராயலசீமா வழியாக உள் தமிழகம் வரை காற்றழுத்தத் தாழ்வுநிலை காணப்படுகிறது. இதனால் தமிழகம் மற்றும் புதுச்சேரியின் ஓரிரு இடங்களில், இன்று முதல் அடுத்த 2 நாள்களுக்கு லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. 

இந்நிலையில், நீலகிரி மாவட்டம் குன்னூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில் நள்ளிரவு சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாகக் கனமழை பெய்தது. 

தமிழகத்தின் பல்வேறு இடங்களில் நேற்று மிதமான வெப்பநிலை காணப்பட்டாலும், சில இடங்களில் மட்டும் வெயில் அதிகமாக இருந்தது. மதுரையில் 100 டிகிரியும், சேலத்தில் 102 டிகிரி வெப்பநிலையும் பதிவானது. 

கடந்த சில நாள்களாகவே, சென்னையின் சில இடங்களில் தண்ணீருக்காக மக்கள் சாலைகளில் காலி குடங்களுடன் அலையும் நிலை உருவாகியுள்ளது. இந்த நிலையில், சென்னையில் மழைக்கு வாய்ப்பு எனும் வானிலை மையத்தின் அறிவிப்பு பொதுமக்களை சந்தோஷத்தில் ஆழ்த்தியுள்ளது.