Published:Updated:

`102 டிகிரி ஃபாரன்ஹீட்டில் கொளுத்திய வெயில்!’ -வேலூர் மக்கள் கடும் அவதி

`102 டிகிரி ஃபாரன்ஹீட்டில் கொளுத்திய வெயில்!’ -வேலூர் மக்கள் கடும் அவதி
`102 டிகிரி ஃபாரன்ஹீட்டில் கொளுத்திய வெயில்!’ -வேலூர் மக்கள் கடும் அவதி

102 டிகிரி ஃபாரன்ஹீட் வெயிலில், வேலூர் மாவட்டம் தகிக்கிறது. அனல் காற்றுடன் வெயில் சுட்டெரிப்பதால், பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

பருவமழை பொய்த்துப்போனதால், வேலூர் மாவட்டத்தில் கோடைக்கு முன்பே வெயில் சுட்டெரிக்கிறது. காலை 8 மணிக்கே சுளீரென்று, தோலைக் கிழிக்கும் அளவுக்கு வாட்டிவதைக்கும் வெயில், மண்டையைப் பிளப்பதுபோல் மாலை 5 மணிவரை நீடிக்கிறது. காற்றில் ஈரப்பதம் குறைந்து வறண்ட நிலையில் அனல்காற்று வீசுவதால், பொதுமக்கள் தவிப்புக்குள்ளாகியுள்ளனர். வேலூர் மாவட்டத்தில் 5-ம் தேதி நிலவரப்படி, 102.6 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் கொளுத்தியது. 

1-ம் தேதி 95.2 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில், 2-ம் தேதி 93.6 டிகிரி, 3-ம் தேதி 96.1 டிகிரி, 4-ம் தேதி 97.2 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம்  பதிவாகியிருந்தது. ஒரே நாளில், 5 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் அதிகரித்து, 102.6 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கு வெயில் சுட்டெரித்ததால், பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினர். வெயிலின் தாக்கம் மேலும் அதிகரிக்கும் என்று சொல்லப்பட்டிருப்பதால், வேலூர் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.