Published:Updated:

நிலம்... நீர்... நீதி! - உயிர்பெறும் கரைகள்...

நிலம்... நீர்... நீதி! - உயிர்பெறும் கரைகள்...
பிரீமியம் ஸ்டோரி
நிலம்... நீர்... நீதி! - உயிர்பெறும் கரைகள்...

நிலம்... நீர்... நீதி! - உயிர்பெறும் கரைகள்...

நிலம்... நீர்... நீதி! - உயிர்பெறும் கரைகள்...

நிலம்... நீர்... நீதி! - உயிர்பெறும் கரைகள்...

Published:Updated:
நிலம்... நீர்... நீதி! - உயிர்பெறும் கரைகள்...
பிரீமியம் ஸ்டோரி
நிலம்... நீர்... நீதி! - உயிர்பெறும் கரைகள்...

“நரியம்பாக்கம் ஏரிக் கரையில அடிக்கடி மண் அரிப்பு ஏற்படும். அதனால ஏரியில தேங்கும் தண்ணி அதிக அளவுல வெளியேறிடும். இப்போ ஏரியோட கரையில கல் பதிக்கிறதால, மண் அரிப்பு இனி இருக்காது. ரெண்டு வருஷத்துக்கு முன்ன, வாசன் சாரிட்டபிள் டிரஸ்ட் மூலமா இந்த ஏரியைத் தூர்வாரி, ஆழப்படுத்திச் சீரமைச்சாங்க. அதன் பிறகு, ஏரியோட கரை உடையல. ஏரியில தேங்கும் தண்ணீரின் அளவும் அதிகரிச்சிருக்கு. ஏரி தண்ணி கிடைக்காததால, பல குடும்பங்கள் பயிர் செய்வதையே நிறுத்தியிருந்தாங்க. இப்போ ஏரி சீரமைக்கப்பட்டிருக் கிறதால, விவசாயிகள் நம்பிக்கையோடு விவசாயத்துல ஈடுபடுவாங்க. இந்தப் பணிகளைச் செய்துவரும் ஆனந்த விகடன் குழுமத்துக்கு எங்க பகுதி சார்பா நன்றியைத் தெரிவிச்சுக்கிறோம்” என நெகிழ்வோடு பேசுகிறார் சென்னையை அடுத்த நரியம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த குணா.

நிலம்... நீர்... நீதி! - உயிர்பெறும் கரைகள்...

2015-ம் ஆண்டின் சென்னை பெருவெள்ளத்துக்குப் பிறகு வாசகர்களுடன் இணைந்து விகடன் முன்னெடுத்த திட்டம், ‘நிலம்... நீர்... நீதி’. இந்தத் திட்டத்தின் மூலம் சென்னையை அடுத்த சாலமங்கலம் ஊராட்சியில் சாலமங்கலம், நரியம்பாக்கம், சிறுமாத்தூர் ஆகிய மூன்று ஏரிகளைத் தூர்வாரி, ஆழப்படுத்தி, சீரமைத்துக் கொடுத்தோம். இதுகுறித்து ஜூனியர் விகடன் இதழில் ஏற்கெனவே பதிவு செய்திருக்கிறோம்.  

இதைத் தொடர்ந்து சீரமைக்கப்பட்ட அந்த ஏரிகளின் கரைகளைப் பலப்படுத்தும் பொருட்டு, கரைகளில் கல் பதிக்கும் பணிகள் வாசன் அறக்கட்டளை மூலம் முன்னெடுக்கப்பட்டுள்ளன. முதல்கட்டமாக 71 ஏக்கர் பரப்பளவில் 1.3 கி.மீட்டர் தூரம் கரைகளைக்கொண்ட நரியம்பாக்கம் ஏரியில் கல்பதிக்கும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர், குன்றத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலரின் அனுமதியுடன் தற்போது பணிகள் நடைபெற்று வருகின்றன. இன்னும் சில நாள்களில் பணிகள் முடிக்கப்பட்டுவிடும். இதன் மூலம் நரியம்பாக்கம் பகுதியில் உள்ள 200-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பலனடையும். 60 ஏக்கருக்கும் மேலான நிலங்கள் பாசன வசதி பெறுவதுடன் கால்நடைகள், பறவைகள், சிறுவிலங்குகளின் நீர்த்தேவையும் உறுதியாகும்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

நிலம்... நீர்... நீதி! - உயிர்பெறும் கரைகள்...

தற்போது கரைசீரமைப்புப் பணிகளைச் செய்துவரும் ஒப்பந்ததாரர், சில தகவல்களை நம்மிடம் பகிர்ந்துகொண்டார். “இந்த ஏரிக்கு நீர்வரத்து அதிகமாக உள்ளது. ஆனால், கரை பலம் இல்லாமல் இருப்பதால் தண்ணீரைச் சேமிக்க முடிவதில்லை. கரையைப் பலப்படுத்தினால்தான் நீரின் கொள்ளளவை அதிகரிக்க முடியும். எனவே, தற்போது எட்டு அடி உயரமுள்ள கரையை 12 அடியாக உயர்த்தி, பலப்படுத்தி வருகிறோம். கரையைப் பலப்படுத்துவதால் நீரின் கொள்ளளவு அதிகரிப்பதுடன், நீர்க்கசிவையும் தடுக்க முடியும். அத்துடன் ஏரிக்கரையின் மொத்த நீளமான 1,382 மீட்டர் தூரத்துக்கு கான்கிரீட் பிளாக் அமைக்கிறோம். ஏழு இடங்களில் ஏரிக்கான நீர்வரத்து உள்ளது. அந்த இடங்களும் வலுவிழந்து உள்ளன. ஏரிக்கரைப் பணிகளை முடித்துவிட்டு, அடுத்து நீர் வரத்துப் பகுதிகளையும் கான்கிரீட் பிளாக் கொண்டு பலப்படுத்த உள்ளோம்” என்றார்.

இப்போது, நீர்நிலைச் சீரமைப்புப் பணிகள் அடுத்தடுத்தக் கட்டத்தை அடைந்து கொண்டிருக்கின்றன. விகடனின் வேண்டுகோளையடுத்து, உதவிக்கரம் நீட்டிய வாசகர்களின் பங்களிப்பால்தான் இது சாத்தியமாகிக் கொண்டிருக்கிறது. வாசகர்கள் அனைவருக்கும் நன்றி!

- பெ.ராக்கேஷ்
படம்: தே.அசோக்குமார்