அனைவருக்கும் பசுமை வணக்கம்!

‘மோடியின் குஜராத், இந்தியாவின் வளர்ச்சிக்கு ஒரு முன்மாதிரி’ என்ற பிரசாரம்தான், நரேந்திர மோடி முதல்தடவை பிரதமர் பதவியில் அமர்வதற்கு அடிப்படைக் காரணமாக இருந்தது. ‘ஏராளமான ஏரிகள், குளங்கள் போன்ற நீர்நிலைகள், மோடி முதல்வராக இருந்த காலத்தில் தூர்வாரப்பட்டன. ஏறக்குறைய ஒரு லட்சம் தடுப்பணைகள் குஜராத்தில் கட்டப்பட்டன’ என்கின்றன புள்ளிவிவரங்கள். இது, அந்த மாநிலத்தில் நிலவிவந்த தண்ணீர்ப் பஞ்சத்தைத் தீர்த்ததோடு விவசாயத்தையும் செழிக்க வைத்தது.

‘வைபிரண்ட் குஜராத்’ என்கிற பெயரில் நடத்தப்பட்ட அம்மாநில அரசின் நிகழ்ச்சியில், ‘விவசாயத்தில் எழுச்சிபெற்றது குஜராத்’ என்று பெருமைப்பட அன்று பேசினார் முதல்வராக இருந்த மோடி. ‘இத்தகைய மாற்றத்தை உருவாக்கிய மந்திரவித்தைக்காரர், ஒட்டுமொத்த இந்தியாவையும் மாற்றிக்காட்டுவார்’ என்கிற நம்பிக்கையில்தான் பிரதமர் பதவியில் அமரவைத்தனர் மக்கள். ‘நல்லது நடக்கும்’ என்று கடந்த ஐந்தாண்டுக் காலமும் விவசாயிகள் காத்திருந்தனர். ஆனால், கடந்த ஐந்தாண்டுக்கால ஆட்சியில், அவர்களின் காத்திருப்புக்குப் பெரிதாகப் பதிலில்லை.

‘குஜராத் வளர்ச்சி’யை இந்தியா முழுவதும் கொண்டுசெல்வதற்கு ஐந்து ஆண்டுகள் என்பது குறைவானது என்றே வைத்துக்கொள்வோம். இதோ, மீண்டும் ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது. இரண்டாவது முறையாகப் பதவியேற்ற சூட்டோடு, ‘அனைத்து விவசாயிகளுக்கும் ஆண்டுதோறும் ஆறாயிரம் ரூபாய் உதவித்தொகை’ என்று அறிவித்துள்ளார் மோடி. ஆனால், இது விவசாயிகளின் ஏக்கத்துக்கு வெறும் ஆறுதல் மட்டுமே!

மோடி டெல்லிக்கு இடம் மாறியபிறகு, குஜராத்தில்கூட வளர்ச்சி கிட்டத்தட்ட தேங்கிவிட்டது. தண்ணீர்ப் பஞ்சம் தலையெடுப்பதால், தவிக்கின்றனர் அம்மாநில விவசாயிகள்.

இரண்டாவது முறையாகக் கிடைத்திருக்கும் பிரதமர் வாய்ப்பைப் பயன்படுத்தி, தான் உருவாக்கிய ‘குஜராத் வளர்ச்சி’ என்பதை நாடு முழுக்க மோடி நடத்திக்காட்ட வேண்டும்.

அனைத்து நீர்நிலைகளையும் மேம்படுத்துவதோடு, விளைபொருள்களுக்கு நல்ல விலை கிடைப்பதையும் உறுதிப்படுத்த வேண்டும்.

-ஆசிரியர்