மரங்கள்... பூமித் தாய் அளித்த வரங்கள். அந்த மரங்களிடமிருந்து பயன்களை மட்டுமல்ல, நல்ல குணங்களையும் கற்றுக்கொள்ளலாம். அவற்றில் சில...

வேப்பமரம்

இந்த மரத்தின் இலையும் கிளையும் கசக்கும். ஆனால், எண்ணற்ற மருத்துவப் பயன்களை தன்னிடம் வைத்திருக்கும். கொளுத்தும் கோடையிலும் தன்னைச் சுற்றி குளிர்ச்சியை உருவாக்கும். அதுபோல, சிலரின் கண்டிப்பான வார்த்தைகள் நமக்குக் கசக்கும். ஆனால், அவர்கள் சொல்லும் செயல்கள் நம் நன்மைக்காகவே இருக்கும். கோடையில் குளிர்ச்சி போல நாம் சோர்ந்திருக்கும் நேரத்தில் ஆறுதல் வார்த்தைகளால், நமக்குக் தைரியம் அளிப்பார்கள். இந்த வேப்பமரம் போன்று பிறரின் நலனுக்குக் கண்டிப்பாகவும், அவர்களே தளர்ந்திருக்கும்போது ஆறுதலாகவும் இருக்கும் குணத்தை வளர்த்துக்கொள்வோம்.

தென்னை மரம்

கையடக்க தென்னம்பிள்ளையாக இருக்கும் இந்த மரம்தான், பிறகு வானுயர்ந்து நிற்கிறது. அப்படி உயர்ந்து நிற்கும்போது, தனக்குக் கீழே நிழலைக் கொடுக்க முடியாவிட்டாலும், தன் மூலமாக இளநீர், தேங்காய், தென்னங்கீற்று எனக் குளிர்ச்சியான விஷயங்களை அளிக்கிறது. அதுபோல, உங்கள் சூழ்நிலை, வேலையின் தன்மை காரணமாக, களத்தில் இறங்கி உதவமுடியாமல் போகலாம். ஆனால், வேறு வகையில் அதற்கு ஈடான உதவியைச் செய்யும் குணத்தை வளர்த்துக்கொள்ள வேண்டும்.

வாழைமரம்

மங்களகரமான விழாக்களில் முன்னின்று வரவேற்பது வாழைமரங்கள். அத்துடன், இலை, காய், கனி, தண்டு எனத் தன்னை முழுமையாக அளிக்கும். எப்படி ஒரு குடும்பத்தின் தலைவன் அல்லது தலைவி வாழ்வு முழுவதும் மற்றவர்களுக்காக உழைப்பதுடன், நல்ல விஷயங்களில் முன்னின்றும் செய்வார்களோ அதுபோல, ஒரு விஷயத்தை முழுமையாகப் பங்களிப்பதுடன், முன்னின்று புன்னகையுடன் நடத்தும் குணத்தையும் வளர்த்துக்கொள்ள வேண்டும்.

ஆலமரம்

இந்த மரத்தால் பெரிய அளவில் காய்களோ, கனிகளோ கொடுக்க முடியாது. ஆனால், அடர்ந்து விரிந்து தனக்குக் கீழே பெரும் நிழலை உருவாக்கும். பல பறவைகளும் உயிரினங்களும் மரத்திலும் மரத்துக்குக் கீழேயும் தங்கி இளைப்பாறலாம். அப்படி, நம்மிடம் நேரடியாக வசதி இல்லாவிட்டாலும், களத்தின் பொறுப்பாளராக இருந்து உதவமுடியும். தன்னிடமிருந்து விழுதுகளையும் உருவாக்கி நீண்ட காலத்துக்கு நிலைத்து நிற்பது போல, பல நல்ல மனிதர்களை உருவாக்கி, அவர்களின் வழியே நன்மைகளைத் தொடரச்செய்யும் குணத்தை வளர்த்துக்கொள்ள வேண்டும்.