Published:Updated:

ரூ.2480 கோடி நஷ்டஈடு வழங்க கோரி கர்நாடகா அரசு மீது தமிழக அரசு வழக்கு

Vikatan Correspondent
ரூ.2480 கோடி நஷ்டஈடு வழங்க கோரி கர்நாடகா அரசு மீது தமிழக அரசு வழக்கு
ரூ.2480 கோடி நஷ்டஈடு வழங்க கோரி கர்நாடகா அரசு மீது தமிழக அரசு வழக்கு
ரூ.2480 கோடி நஷ்டஈடு வழங்க கோரி கர்நாடகா அரசு மீது தமிழக அரசு வழக்கு

சென்னை: காவிரியில் தண்ணீர் திறந்து விடாததால் கர்நாடக அரசு ரூ.2480 கோடி நஷ்ட ஈடு வழங்க கோரி தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.

கர்நாடகா அரசு காவிரிவில் தண்ணீர் திறந்துவிடாததால் டெல்டா பகுதியில் விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டதோடு, பெருமளவு நஷடத்தை சந்தித்தனர். இதைத் தொடர்ந்து கர்நாடக அரசு மீது வழக்கு தொடரப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்திருந்தார்.

அதன்படி  கர்நாடகா மீது உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்துள்ளது. கடந்த 9ஆம் தேதி வழக்கு தாக்கல் செய்துள்ள மனுவில், காவிரி தீர்ப்பாயம் உத்தரவின்படி 2012-13 ஆண்டில் கர்நாடகா தண்ணீர் திறந்து விடாததால் விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதுமட்டுமல்லாமல் மின் உற்பத்தி மற்றும் விவசாய சார்பு பொருட்கள் உற்பத்தி ஆகியவையும் பாதிக்கப்பட்டுள்ளன. இதற்கு இழப்பிடாக ரூ.1045 கோடியே 70 லட்சம் கர்நாடகா தர உத்தரவிடவேண்டும்.

##~~##
மேலும் தீர்ப்பாயம் 2012-13-ம் ஆண்டில் 58.18 டி.எம்.சி. தண்ணீர் திறந்துவிட உத்தரவிட்டும் அதை வழங்காததால் அதற்கு ரூ.1434 கோடி நஷ்டஈடு வழங்க உத்தரவிட வேண்டும்.
கர்நாடகாவில் போதிய தண்ணீர் இருந்தது. வேண்டுமென்றே அவர்கள் தண்ணீர் திறந்து விடவில்லை. அதே நேரத்தில் அந்த தண்ணீரை தங்களது மாநில விவசாயிகளுக்கு திருப்பிவிட்டு சட்டத்துக்கு விரோதமாக பயனடைந்துள்ளனர். இதன் மூலம தமிழ்நாடு விவசாயிகள் வஞ்சிக்கப்பட்டுள்ளனர். இதற்கு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.