Published:Updated:

``சிவகார்த்திகேயனை மட்டும் அனுமதித்தீர்கள்; என்னை ஏன் அனுமதிக்கவில்லை?” -பெண் தர்ணாவால் பரபரப்பு

மணிமாறன்.இரா
``சிவகார்த்திகேயனை மட்டும் அனுமதித்தீர்கள்; என்னை ஏன் அனுமதிக்கவில்லை?” -பெண் தர்ணாவால் பரபரப்பு
``சிவகார்த்திகேயனை மட்டும் அனுமதித்தீர்கள்; என்னை ஏன் அனுமதிக்கவில்லை?” -பெண் தர்ணாவால் பரபரப்பு

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகே எருக்கலக்கோட்டையில் வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லை என்பதால், வாக்களிக்க வந்த பெண்ணுக்கு அனுமதி மறுத்தனர். இதனால், ஆத்திரமடைந்த பெண், `என்னை அனுமதிக்காத  நீங்கள் எப்படி நடிகர் சிவகார்த்திகேயனை மட்டும் அனுமதித்தீர்கள்' என அலுவலர்களுடன் வாக்குவாதம் செய்ததோடு, தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

``சிவகார்த்திகேயனை மட்டும் அனுமதித்தீர்கள்; என்னை ஏன் அனுமதிக்கவில்லை?” -பெண் தர்ணாவால் பரபரப்பு


புதுக்கோட்டை மாவட்டம் எருக்கலக்கோட்டையைச் சேர்ந்தவர் தேன்மொழி (31). கொடைக்கானலில் குடும்பத்துடன் வசித்து அங்கு வேலை பார்த்து வருகிறார். கொடைக்கானலில் இருந்து வாக்களிப்பதற்காகவே சொந்த ஊருக்கு வந்திருந்தார். இந்த நிலையில், நேற்று மாலை எருக்கலக்கோட்டையில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடிக்கு வாக்களிக்கச் சென்றபோது தேன்மொழி என்ற பெயர் வாக்காளர் பட்டியலில் இல்லை என்று கூற அதிர்ச்சியடைந்தார். இதனால், அவரை அதிகாரிகள் வாக்களிக்க அனுமதிக்கவில்லை. இதனால், ஆத்திரமடைந்த தேன்மொழி, `நடிகர் சிவகார்த்திகேயனுக்கும் வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லை. ஆனால், எப்படி அவரை அனுமதித்தீர்கள். அதேபோல், என்னையும் வாக்களிக்க அனுமதிக்க வேண்டும்' என்று கூறி, வாக்குச்சாவடி வாயிலில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். மாலையில் துவங்கிய தர்ணா இரவு வரையிலும் நீடித்தது. இறுதி வரையிலும் தர்ணாவில் ஈடுபட்டும் வாக்களிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிச் சென்றார்.

``சிவகார்த்திகேயனை மட்டும் அனுமதித்தீர்கள்; என்னை ஏன் அனுமதிக்கவில்லை?” -பெண் தர்ணாவால் பரபரப்பு

அப்போது, பேசிய தேன்மொழி,  ``வெளியூரில் இருந்த நாங்கள் வாக்களிப்பதற்காகவே சொந்த ஊருக்கு வந்தோம். வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லை என்று அலுவலர்கள் கூறுவது எனக்கு அதிர்ச்சியாக உள்ளது. காலையில் நடிகர் சிவகார்த்திகேயன் வளசரவாக்கத்தில் உள்ள பள்ளியில் வாக்களிக்கப் போனார். அங்கு அவரின் மனைவிக்கு மட்டுமே வாக்கு இருந்தது. வாக்காளர் பட்டியலில் சிவகார்த்திகேயன் பெயர் இல்லை. ஆனாலும், அவர் சேலஞ்ச் ஓட்டு போட அனுமதி பெற்று. அவர் தனது  ஓட்டை போட்டுவிட்டுதான் அங்கிருந்து கிளம்பிச் சென்றார். அதேபோல்தான் எனக்கும் வாக்களிக்க அனுமதி கொடுங்கள் என்று போராடினேன். அலுவலர்கள் என்னைக் கண்டுகொள்ளவில்லை. வாக்காளர் பட்டியலில் அவர் பெயர் இல்லாதபோது சிவகார்த்திகேயனை மட்டும்  ஏன் அனுமதித்தார்கள்! சிவகார்த்திகேயன் நடிகர் என்பதால் அவருக்கு ஒரு நியாயம். எனக்கு ஒரு நியாமா. நான் சாதாரணமான பெண் என்பதால்தானே  எனக்கு வாக்களிக்கும் உரிமை மறுக்கப்பட்டது. இதுவே ஒரு நடிகையாக இருந்திருந்தால் என்னையும் வாக்களிக்க அனுமதித்திருப்பார்கள்'' என விரக்தியுடன் பேசி அவர் அங்கிருந்து கிளம்பிச் சென்றார்.