Published:Updated:

முதல் குண்டு முதல் ட்ரம்ப்பின் சர்ச்சை ட்வீட் வரை...! இலங்கை குண்டுவெடிப்பின் 16 மணி நேர தொகுப்பு

முதல் குண்டு முதல் ட்ரம்ப்பின் சர்ச்சை ட்வீட் வரை...! இலங்கை குண்டுவெடிப்பின் 16 மணி நேர தொகுப்பு
முதல் குண்டு முதல் ட்ரம்ப்பின் சர்ச்சை ட்வீட் வரை...! இலங்கை குண்டுவெடிப்பின் 16 மணி நேர தொகுப்பு

ஏசு உயிர்தெழுந்த தினத்தை கிறித்துவ மக்கள் ஈஸ்டர் திருநாளாக கொண்டாடி வருகின்றனர். இந்த பண்டிகை உலகம் முழுவதிலும் உள்ள அனைத்து கிறிஸ்துவ மக்களாலும் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.

இன்று இலங்கை முழுவதிலும் உள்ள அனைத்து தேவாலயங்களிலும் சிறப்பு பிரார்த்தனைக்காக மக்கள் அதிக அளவில் கூடியுள்ளனர். இந்நிலையில் இந்திய நேரப்படி காலை 8:45 மணிக்கு கொழும்புவில் உள்ள புனித அந்தோணியர் ஆலயம் மற்றும் நீர்கொழும்புவில் உள்ள புனித செபஸ்டியன் தேவாலயம் ஆகியவற்றில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றுக்கொண்டிருக்கும் போது யாரும் எதிர்பாராத வகையில் தேவாலயத்தினுள் மக்கள் அமர்ந்திருக்கும் இடத்தில் சக்தி வாய்ந்த குண்டு வெடித்துள்ளது.

முதல் குண்டு முதல் ட்ரம்ப்பின் சர்ச்சை ட்வீட் வரை...! இலங்கை குண்டுவெடிப்பின் 16 மணி நேர தொகுப்பு

இவை மட்டுமல்லாது கொழும்புவில் உள்ள மிகவும் பிரபலமான நட்சத்திர ஹோட்டல்களான சங்கரி லா, சின்னமன் கிராண்ட், கிங்ஸ்புரி ஹோட்டல் ஆகியவற்றிலும் சக்திவாய்ந்த குண்டு வெடித்துள்ளது. இதை தற்கொலைப்படையை சேர்ந்தவர்கள் செய்திருக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

முதல் குண்டு முதல் ட்ரம்ப்பின் சர்ச்சை ட்வீட் வரை...! இலங்கை குண்டுவெடிப்பின் 16 மணி நேர தொகுப்பு

இந்த சம்பவம் பற்றி கருத்து தெரிவித்துள்ள இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஸ்மா ஸ்வராஜ், ‘ இலங்கை குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாகத் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. இலங்கையில் உள்ள இந்திய தூதரிடம் நிலைமையைக் கேட்டறிந்து வருகிறேன்’ என ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

முதல் குண்டு முதல் ட்ரம்ப்பின் சர்ச்சை ட்வீட் வரை...! இலங்கை குண்டுவெடிப்பின் 16 மணி நேர தொகுப்பு

மேலும் இலங்கை குண்டு வெடிப்பு குறித்த தகவல்கள் மற்றும் உதவிகள் தேவைப்படும் இந்தியர்கள் +94777903082 +94112422788 +94112422789 ஆகிய எண்களுக்கு தொடர்புகொள்ளலாம் எனக் கூறப்பட்டுள்ளது.

முதல் குண்டு முதல் ட்ரம்ப்பின் சர்ச்சை ட்வீட் வரை...! இலங்கை குண்டுவெடிப்பின் 16 மணி நேர தொகுப்பு

குண்டு வெடிப்பை நேரில் பார்த்த ஒருவர் இது பற்றி கூறும் போது, ‘ நாங்கள் தேவாலயத்தின் வெளியில் சென்றுகொண்டிருக்கும் போது பலத்த சத்தத்துடன் மிகப்பெரும் குண்டு வெடித்தது. இதனால் அருகில் இருந்த கட்டடங்கள் குலுங்கின. நிலநடுக்கம் ஏற்பட்டதை போல் உணர்ந்தோம். இந்த தாக்குதலில் பலர் படுகாயமடைந்துள்ளனர்’ எனத் தெரிவித்துள்ளார். இந்த குண்டுவெடிப்புக்கு யார் காரணம் என்ற தகவல் இன்னும் வெளிவராத நிலையில் இலங்கை முழுவதும் தொடர் பதற்றம் நிலவுகிறது. பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களைக் குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதால் யாரும் அதிகமாகக் கூட வேண்டாம் என அந்நாட்டு காவல் துறையினர் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் அவசர தேவைகளை தாண்டி வேறு எந்த தேவைக்காகவும் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியில் வரவேண்டாம் என்றும் எச்சரித்துள்ளனர். விமான நிலையங்கள், பொது இடங்கள் போன்றவற்றில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. 

முதல் குண்டு முதல் ட்ரம்ப்பின் சர்ச்சை ட்வீட் வரை...! இலங்கை குண்டுவெடிப்பின் 16 மணி நேர தொகுப்பு

இந்த சம்பவத்துக்குக் கடும் கண்டனம் தெரிவித்துள்ள அந்நாட்டு பிரதமர் ரணில் விக்ரமசிங்கே, இந்த கோழைத்தனமான தாக்குதலில் ஈடுபட்டவர்களை சட்டத்தின் முன் நிறுத்துவோம் என்று கண்டனம் தெரிவித்திருக்கிறார். அதேபோல், பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, அமெரிக்க, இங்கிலாந்து உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் தலைவர்களும் தங்களின் கடுமையான கண்டனத்தைப் பதிவு செய்து வருகிறார்கள். இந்தக் குண்டுவெடிப்புகளுக்குக் காரணமானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என இலங்கை அரசு எச்சரித்திருக்கிறது. 

முதல் குண்டு முதல் ட்ரம்ப்பின் சர்ச்சை ட்வீட் வரை...! இலங்கை குண்டுவெடிப்பின் 16 மணி நேர தொகுப்பு

இந்நிலையில் நடிகை ராதிகா ட்விட்டரில் இந்த சம்பவம் குறித்து பதிவு ஒன்றை இட்டியிருந்தார். இது குறித்து ராதிகாவிடம் பேசியதிலிருந்து. 

முதல் குண்டு முதல் ட்ரம்ப்பின் சர்ச்சை ட்வீட் வரை...! இலங்கை குண்டுவெடிப்பின் 16 மணி நேர தொகுப்பு

''இரண்டு நாளுக்கு முன்னாடி இலங்கை சென்றிருந்தேன். அதுவும் குடும்பத்துடன். என்னோட ப்ரதர் அங்கேதான் இருக்கார். நாங்கள் சின்னமன் கிரான்ட் ஹோட்டலில் தங்கியிருந்தோம். எப்போது இலங்கை போனாலும் பிரசித்திபெற்ற கொச்சிக்கடை சர்ச்க்கு போவோம்.  சக்திவாய்ந்த சர்ச்சும்கூட. ஆனால், இன்னைக்கு காலையில் இந்த சர்ச்சிலும், நாங்கள் தங்கியிருந்த ஹோட்டலிலும் குண்டு வெடிச்சிருக்குற செய்தி என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. என்னோட ப்ரதர்தான் எனக்குப் போன் பண்ணி இந்த செய்தியை சொன்னார். எங்களை இன்னும் இரண்டு நாள்கள் இலங்கையில் தங்கிவிட்டு போகச்சொல்லி என்னுடைய ப்ரதர் கட்டாயப்படுத்தினார். ஷூட்டிங் வேலைகள் இருந்ததால் சென்னைக்கு வரவேண்டிய சூழல் அதனால் கிளம்பிவிட்டோம். ஒருவேளை அங்கே அதே ஹோட்டலில் இன்று இருந்திருந்தால் என்ன நடந்திருக்கும்னு தெரியல. கடவுள் கூடவே இருக்கார்னு நம்புறேன். மேலும் அவர் கூறுகையில் 

கொழும்புவில் தொடர் குண்டு வெடிப்பு சம்பவங்கள் நிகழ்வதால் அங்கு அவசர நிலை பிரகடனப் படுத்தப்பட்டுள்ளது. 12  மணிநேரத்துக்குப் பொதுமக்கள் யாரும் வெளியே வரக்கூடாது என அறிவிக்கப்பட்டு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் ஃபேஸ்புக், வாட்ஸ் அப் போன்ற சமூக வலைதளங்களும் முடக்கப்பட்டுள்ளன. 

முதல் குண்டு முதல் ட்ரம்ப்பின் சர்ச்சை ட்வீட் வரை...! இலங்கை குண்டுவெடிப்பின் 16 மணி நேர தொகுப்பு

இந்நிலையில் இலங்கையில் தாக்குதல் தொடர்பாக வெளிவரும் வதந்திகளை நம்ப வேண்டாம் எனப் பொதுமக்களுக்கு இலங்கை அதிபர் மைத்திரிய பால சிறிசேன வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும் உறுதியற்ற தகவல்களை ஊடகங்கள் வெளியிட வேண்டாம் எனக் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இந்த தொடர் தாக்குதலுக்கு உலக தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இலங்கையில் 10 ஆண்டுகளுக்கு முன்னர் உள்நாட்டு போருக்கு பிறகு நடக்கும் மிகப்பெரிய தாக்குதல் இது எனக் கூறப்பட்டுள்ளது.  

தொடர் வெடிக்குண்டு தாக்குதலினால் நாடு முழுவதிலும் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் நாளையும் நாளை மறு தினமும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பல்கலைகழகங்களுக்கு நடக்கவிருந்த தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. இன்று இரவு கொழும்புவில் இருந்து வெளியில் செல்லும் ரயில்கள் மற்றும் வெளியில் இருந்து கொழும்புவுக்குள் வரும் ரயில்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன. குண்டு வெடிப்பை அடுத்து நிலைமை கட்டுக்குள் வரும் வரை அனைத்து காவலர்களுக்கும் விடுமுறை அளிக்கப்படமாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது. 

அதில், ``இது இலங்கைக்கான கறுப்பு நாள். புனித நாளைக் கொண்டாட வந்த இலங்கை மக்களைக் கொன்று குவித்திருக்கிறார்கள். கிறித்துவர்கள், இஸ்லாமியர்கள், இந்துக்கள், புத்த மதத்தைச் சேர்ந்தவர்கள், எனப் பல இலங்கை மக்கள் இதில் கொல்லப்பட்டிருக்கிறார்கள். ஒரு புனித நாளில், இப்படியான கொடூர தாக்குதல்கள் கடும் கண்டனத்துக்கு உரியது. தற்போது வரையில் இதற்கான காரணமான அமைப்பு, நபர்கள் யார் என யாருக்கும் தெரியவில்லை. ஆனால் இவை அப்பாவி மக்களைக் கொல்லும் தீவிரவாதம் மட்டுமே. இதற்குக் காரணமானவர்கள் சட்டத்தின் முன் வெகு விரைவில் தண்டிக்கப்படுவார்கள்.

முதல் குண்டு முதல் ட்ரம்ப்பின் சர்ச்சை ட்வீட் வரை...! இலங்கை குண்டுவெடிப்பின் 16 மணி நேர தொகுப்பு

தாக்குதல் நடத்தப்பட்ட ஹோட்டல்களில் வெளிநாட்டு பயணிகளின் ஆதர்சமான சின்னாமன் கிராண்ட் ஹோட்டலும் ஒன்று. அந்த ஹோட்டலில் தாக்குதல் நடத்தியவர் குறித்த தகவல்கள் தெரியவந்துள்ளது. தாக்குதலில் ஈடுபட்ட நபர் இலங்கையைச் சேர்ந்தவர்தான் என்கிறார்கள். 

முதல் குண்டு முதல் ட்ரம்ப்பின் சர்ச்சை ட்வீட் வரை...! இலங்கை குண்டுவெடிப்பின் 16 மணி நேர தொகுப்பு

இதுகுறித்து பெயர் வெளியிட விரும்பாத சின்னாமன் கிராண்ட் ஹோட்டல் மேனேஜர் ஒருவர் செய்தி நிறுவனமான ஏ.எஃப்.பியிடம் கூறுகையில், `காலை 8.30 மணி இருக்கும். ஈஸ்டர் விருந்துக்காக ஹோட்டலில் மக்கள், தங்கள் குடும்பத்தினருடன் கூடியிருந்தனர். அப்போது, பின்புறம் பேக் ஒன்றை வைத்திருந்த அந்த நபர் பொறுமையாக வரிசையில் காத்திருந்தார். விருந்து அளிக்கப்படும் இடம் வரை பொறுமையாக வந்த அவர், விருந்து பரிமாறப்பட இருந்த வேளையில் தனது பேக்கில் இருந்த வெடிபொருள்களை வெடிக்கச் செய்தார். இதையடுத்து, அந்த இடத்தில் பெரும் கூச்சல் குழப்பம் நிலவியது. 

முதல் குண்டு முதல் ட்ரம்ப்பின் சர்ச்சை ட்வீட் வரை...! இலங்கை குண்டுவெடிப்பின் 16 மணி நேர தொகுப்பு

விருந்தினர்களை வரவேற்கும் பணியில் இருந்த எங்களின் மேலாளர் ஒருவரும் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டார். வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்த நபர் இறந்தநிலையில், அவரது உடல் பாகங்களை போலீஸார் சேகரித்திருக்கிறார்கள்’ என்று பதற்றத்துடன் நடந்த சம்பவங்களை விவரித்திருக்கிறார். இலங்கையைச் சேர்ந்த அந்த நபர், வியாபார நோக்கத்துக்காக வந்திருப்பதாகக் கூறி போலியான முகவரியுடன் ஹோட்டலில் செக் இன் செய்தது எப்படி என்பது குறித்து போலீஸார் விசாரித்து வருகிறார்கள். இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் அதிகாரபூர்வ இல்லத்துக்கு மிக அருகில் இருக்கிறது சின்னாமன் கிராண்ட் ஹோட்டல். குண்டுவெடிப்பை அடுத்த சில நிமிடங்களில் சிறப்புப் பாதுகாப்புப் படையினர் ஹோட்டலுக்கு வந்தடைந்தனர்.

இலங்கை தொடர் குண்டுவெடிப்பு தொடர்பாக 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

முதல் குண்டு முதல் ட்ரம்ப்பின் சர்ச்சை ட்வீட் வரை...! இலங்கை குண்டுவெடிப்பின் 16 மணி நேர தொகுப்பு

10 வருடங்களுக்குப் பிறகு நடந்த இந்த தாக்குதல் குறித்து இலங்கை முன்னாள் கிரிக்கெட் வீரர் குமார் சங்ககாரா கண்டனம் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், ``காட்டுமிராண்டித்தனமான இந்த இழிந்த செயல்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சக மக்கள் உயிரிழந்துள்ளனர். எங்கள் நாட்டிற்கு வந்த விருந்தினர்கள் இறந்துவிட்டனர். குண்டுவெடிப்பில் பாதிக்கப்பட்டவர்களை பார்க்கும் போது என் இதயம் நொறுங்கியது. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். பாதிக்கப்பட்டவர்களுக்கு வேகமாக மீட்பு உதவிகள் கிடைக்க வேண்டும். பாதிக்கப்பட்ட மக்களுக்காக நாம் கைகோக்க வேண்டிய நேரமிது. நாம் படுகின்ற இந்த துயரத்துக்கு வருத்தப்படுவதுக்குப் பிறகு நேரம் ஒதுக்கிவிட்டு தற்போது பாதிக்கப்பட்ட மக்களை வேதனையில் இருந்து முதலில் மீட்டெடுக்க வேண்டும். தீர்ப்பு அல்லது முடிவுகளுக்கு விரைந்து செல்லாதீர்கள்.

முதல் குண்டு முதல் ட்ரம்ப்பின் சர்ச்சை ட்வீட் வரை...! இலங்கை குண்டுவெடிப்பின் 16 மணி நேர தொகுப்பு

தற்போது இலங்கை அரசு 17 நபர்களைக் கைது செய்திருக்கிறது. தற்போது பலி எண்ணிக்கை அதிகமாகியுள்ளது என வரும் செய்திகள் மேலும் கவலை அளிக்கிறன்றன. இதுவரை 262 பேர் இறந்துவிட்டதாக அதிகாரபூர்வ  தகவல் வெளியாகியுள்ளது.  

இதில் வெளிநாட்டவர்களின் எண்ணிக்கை 11 என்றும் அவர்கள் இந்தியாவைச் சேர்ந்த மூவர், போர்ச்சுகலை சேர்ந்த ஒருவர், துருக்கியைச் சேர்ந்த இருவர், இங்கிலாந்தைச் சேர்ந்த மூவர் மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த இருவர் என அடையாளம் கண்டறியப்பட்டுள்ளது. பண்டாரநாயக்க பன்னாட்டு விமான நிலையத்திற்கு அருகே, அபாயகரமான பைப் வெடிகுண்டுகளை கண்டுபிடித்து அவற்றை செயலிழக்க செய்திருக்கிறார்கள் அந்நாட்டு விமானப்படையினர்.