Published:Updated:

நர்ஸ் உட்பட மூன்று பேரிடம் தீவிர விசாரணை - குழந்தை கடத்தலில் சிக்குவார்களா முக்கிய புள்ளிகள்?

நர்ஸ் உட்பட மூன்று பேரிடம் தீவிர விசாரணை - குழந்தை கடத்தலில் சிக்குவார்களா முக்கிய புள்ளிகள்?
நர்ஸ் உட்பட மூன்று பேரிடம் தீவிர விசாரணை - குழந்தை கடத்தலில் சிக்குவார்களா முக்கிய புள்ளிகள்?

நர்ஸ் உட்பட மூன்று பேரிடம் தீவிர விசாரணை - குழந்தை கடத்தலில் சிக்குவார்களா முக்கிய புள்ளிகள்?

நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகே  உள்ள காட்டுக்கொட்டாய் பகுதியைச் சேர்ந்தவர் ரவிச்சந்திரன்.  ராசிபுரம் நகர கூட்டுறவு வங்கியில் அலுவலக உதவியாளராகப் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி அமுதவள்ளி. இவர் ராசிபுரம் அரசு மருத்துவமனையில் நர்ஸாகப் பணியாற்றி, கடந்த 2012-ம் ஆண்டு விருப்ப ஓய்வுபெற்றார். அதன் பிறகு இவர், குழந்தைகளைச் சட்டவிரோதமாக வாங்கி விற்பனை செய்துவந்ததாகக் கூறப்படுகிறது. கடந்த 3 நாட்களுக்கு முன்பு அமுதவள்ளி, 'சதீஸ்குமார் என்பவரிடம் செல்போனில் பேசிய ஆடியோ ஒன்று வாட்ஸ்அப்பில் வைரலாகப் பரவியது. அந்த ஆடியோவில் அமுதவள்ளி, ’நான் 30 ஆண்டுகளாகக் குழந்தைகளை வாங்கி விற்பனை செய்துவருகிறேன். பெண் குழந்தையாக இருந்தால் ரூ.2½ லட்சம்முதல் ரூ.3½ லட்சம்வரையிலும், ஆண் குழந்தையாக இருந்தால் ரூ.4 லட்சம்முதல் ரூ.4½ லட்சம்வரையிலும் விற்றுவருகிறேன்.

இதனை வெளியில் கூற வேண்டாம். பிறப்புச் சான்றிதழ் வேண்டுமானால், ராசிபுரம் நகராட்சியிலிருந்து வாங்கித் தருகிறேன். அதற்கு ரூ.70,000 வரை செலவாகும்’ என்று கூறியுள்ளார். இந்த ஆடியோ வாட்ஸ்அப்பில் வெளியானதைத் தொடர்ந்து, கலெக்டர் ஆசியா மரியம் உத்தரவின் பேரில், நாமக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருளரசு மேற்பார்வையில், ராசிபுரம் துணை போலீஸ் சூப்பிரண்டு விஜயராகவன், போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்லமுத்து ஆகியோர் செவிலியர் உதவியாளர் அமுதவள்ளி, அவரது கணவர் ரவிச்சந்திரன் ஆகிய 2 பேரையும் கைதுசெய்து விசாரணை நடத்தினர். 

குழந்தை விற்பனை செய்வதில் அமுதவள்ளியுடன் யார்யார் தொடர்புவைத்து உள்ளனர் என்பதைக் கண்டுபிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. இதற்கிடையில், அமுதவள்ளியிடம் போலீஸார் நடத்திய விசாரணையில், கொல்லிமலையைச் சேர்ந்த ஆம்புலன்ஸ் டிரைவர் முருகேசன் என்பவரிடம் 2 குழந்தைகளை வாங்கி ஈரோடு கருங்கல்பாளையத்தைச் சேர்ந்த தனியார் ஆஸ்பத்திரி நர்ஸ் பர்வீனிடம் விற்றது தெரிந்தது. அதேபோல், சேலம் அன்னதானப்பட்டியைச் சேர்ந்த தம்பதியினரிடம் ஒரு குழந்தையை வாங்கி, மேட்டூரில் ஒருவரிடம் விற்றதும் தெரியவந்தது. இதையொட்டி, ஆம்புலன்ஸ் டிரைவர் முருகேசனையும், நர்ஸ் பர்வீனையும் போலீஸார் கைதுசெய்து விசாரணை நடத்தினர்.

போலீஸார், முருகேசனிடம் நடத்திய விசாரணையில், 6 குழந்தைகளை அமுதவள்ளியிடம் விற்றதாகத் தெரிவித்தார். நர்ஸ் பர்வீன் அமுதவள்ளியிடம் 4 குழந்தைகளை வாங்கியதாகத் தெரிவித்தார். அமுதவள்ளி வாங்கிய குழந்தைகளை சேலம், ஈரோடு, மதுரை, திருச்சி போன்ற இடங்களில் விற்பனை செய்ததாக அவர்கள் கூறினர். ஆனால், குழந்தைகளை யாரிடம் விற்றார் என்பதற்கான ஆதாரம் இல்லை என்று கூறப்படுகிறது. இந்த நிலையில், போலீஸ் சூப்பிரண்டு அருளரசு நேற்று 2-வது நாளாக ராசிபுரத்தில் முகாமிட்டு அமுதவள்ளி, அவரது கணவர் ரவிச்சந்திரன், நர்ஸ் பர்வீன், ஆம்புலன்ஸ் டிரைவர் முருகேசனிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினார்.

கொல்லிமலை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடக்கும் பிரசவங்கள் குறித்து ஆம்புலன்ஸ் டிரைவர் முருகேசன் அவ்வப்போது அமுதவள்ளிக்குத் தகவல் கொடுத்து வந்ததாகவும் அதன்பேரில் அமுதவள்ளி குழந்தைகளின் பெற்றோரைத் தொடர்புகொண்டு குழந்தைகளை விலைக்கு வாங்கி விற்பனை செய்ததும் தெரியவந்துள்ளது. இதற்கிடையில், நாமக்கல் சுகாதாரத் துறை உதவி இயக்குநர் டாக்டர் ரமேஷ்குமார் உத்தரவின் பேரில், ஒரு மருத்துவ அலுவலர், ஒரு வட்டார சுகாதார மேற்பார்வையாளர், 2 சுகாதார ஆய்வாளர்கள், 1 வட்டார புள்ளியியல் அலுவலர் உள்பட 15 பேர் அடங்கிய குழுவினர் ராசிபுரத்தில் உள்ள 8 தனியார் ஆஸ்பத்திரிகள், அரசு ஆஸ்பத்திரிகளில் கடந்த 2 ஆண்டுகளில் பிறந்த குழந்தைகளின் பிறப்புச் சான்று விவரங்களைக் கள ஆய்வு செய்தனர்.

ராசிபுரம் அரசு மருத்துவமனையில்  கடந்த 2017-ம் ஆண்டு பிறந்த 980 குழந்தைகளின் பிறப்புச் சான்றுகளை நேற்று அதிகாரிகள் ஆய்வு செய்தனர். மேலும், 2 ஆண்டு சான்றிதழ்களும் ஆய்வு செய்யப்படுகிறது. ராசிபுரம் நகராட்சியில் கடந்த 2 ஆண்டுகளில் 4,800 குழந்தைகளுக்கு பிறப்புச் சான்றிதழ் வழங்கப்பட்டு உள்ளதாகவும் அதில், ஏதேனும் முறைகேடு நடந்துள்ளதா என்பது பற்றியும் சுகாதாரத் துறையினர் ஆய்வுசெய்து வருகின்றனர். இதற்கிடையில் கைதான அமுதவள்ளி, அவரது கணவர் ரவிச்சந்திரன் ஆகியோர் ராசிபுரம் குற்றவியல் நீதிமன்றத்தில் நீதிபதி மாலதி முன்பு ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டனர். ராசிபுரத்தில், குழந்தைகள் விற்பனை செய்யப்பட்ட விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த கட்டுரைக்கு