Published:Updated:

கட்டடப் பணியின்போது மண்ணுக்குள் புதைந்திருந்த சுவாமி சிலை - தாசில்தாரிடம் ஒப்படைப்பு!

கட்டடப் பணியின்போது மண்ணுக்குள் புதைந்திருந்த சுவாமி சிலை - தாசில்தாரிடம் ஒப்படைப்பு!
கட்டடப் பணியின்போது மண்ணுக்குள் புதைந்திருந்த சுவாமி சிலை - தாசில்தாரிடம் ஒப்படைப்பு!

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே உள்ள கோங்குடி கிராமத்தில் கட்டடம் கட்டுவதற்காகக் குழி தோண்டியபோது மண்ணுக்குள் புதைந்திருந்த சுமார் 100 ஆண்டுகள் பழைமையான 4 அம்மன் சிலைகள் உள்ளிட்ட 7 சுவாமி சிலைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே கோங்குடியில் அம்மன் கோயில் உள்ளது. அம்மன் கோயிலுக்கு அருகே ஊராட்சிக் கட்டடம் கட்டுமானப் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. கட்டுமானப் பணிக்காக, ஜேசிபி இயந்திரம் மூலம் குழி தோண்டினர். ஜேசிபியை பாண்டி என்பர் இயக்கினார். குழி தோண்டும்போது, சிலை ஒன்று பாண்டி கண்ணுக்குத் தென்பட்டுள்ளது. இதையடுத்து, அந்த இடத்தில் இருந்த சுமார் 50 கிலோ எடை கொண்ட அம்மன் சிலையை பத்திரமாகத் தோண்டி எடுத்தனர். பீடம் ஒன்றும் கண்டுபிடிக்கப்பட்டது.

தொடர்ந்து, அங்கு நடைபெற்ற பணிகளின்போது அடுத்தடுத்து மூன்று அம்மன் சிலைகள், ஒரு நடராஜர், ஒரு பைரவர்  சிலையும், ஒரு உருவம் தெரியாத சிலையும் என 6 சிலைகள் கண்டுபிடிக்கப்பட்டுத் தோண்டி எடுக்கப்பட்டது. இவை அனைத்தும் பத்திரமாக மீட்கப்பட்டு அறந்தாங்கி தாசில்தார் சூர்யபிரபுவிடம் ஒப்படைக்கப்பட்டது. இவை அனைத்தையும் வருவாய்த்துறையினர் தொல்லியல்துறையிடம் ஒப்படைப்பார்கள் என்று கூறப்படுகிறது.