Published:Updated:

பெரம்பலூர் வன்கொடுமை விவகாரத்தை வெளிச்சத்துக்குக் கொண்டுவந்த நாம் தமிழர் வழக்கறிஞர் கைது!

எம்.திலீபன்
பெரம்பலூர் வன்கொடுமை விவகாரத்தை வெளிச்சத்துக்குக் கொண்டுவந்த நாம் தமிழர் வழக்கறிஞர் கைது!
பெரம்பலூர் வன்கொடுமை விவகாரத்தை வெளிச்சத்துக்குக் கொண்டுவந்த நாம் தமிழர் வழக்கறிஞர் கைது!

பெரம்பலூரில் வேலை வாங்கித் தருவதாக பெண்கள் பலருக்கு பாலியல் வன்கொடுமை நிகழ்த்தப்பட்ட சம்பவத்தை வெளிச்சத்துக்குக் கொண்டுவந்த நாம் தமிழர் கட்சி வழக்கறிஞர் அருள் கைது செய்யப்பட்டிருக்கிறார்.

`வேலை வாங்கித் தருவதாகக் கூறி, பாலியல் தொந்தரவு கொடுத்தார்கள். என்னைப்போல் பல பெண்களை ஏமாற்றியிருக்கிறார்கள். இச்சம்பவத்தில், பெரம்பலூர் அ.தி.மு.க முக்கிய புள்ளிகளுக்குத் தொடர்பு இருக்கிறது. இந்த வழக்கை முழுமையாக விசாரிக்க வேண்டும்'' என்று பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் வெளியிட்ட ஆடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தில் ஆளும்கட்சி எம்.எல்.ஏ தமிழ்செல்வனுக்கு தொடர்பு இருப்பதாகப் புகார் எழுந்திருக்கிறது. இதுதொடர்பாக நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த வழக்கறிஞர் அருள் பெரம்பலூர் காவல்நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார். ஆனால், அந்தப் புகாரில் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை என்கிறார்கள். 

எம்.எல்.ஏ மற்றும் அரசின் பெயருக்குக் களங்கம் விளைவிக்க முயற்சி செய்வதாக வழக்கறிஞர் அருள் முயற்சி செய்வதாக அரசு தரப்பு வழக்கறிஞர் பெரம்பலூர் காவல்நிலையத்தில் கடந்த சில தினங்களுக்கு முன் புகார் அளிக்கப்பட்டது. இதுதொடர்பாக சென்னை பிரஸ் கிளப்பில் செய்தியாளர்களிடம் பேசிய வழக்கறிஞர் அருள், `பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் தன்னை வீடியோ எடுத்துவிட்டதாக ஆடியோ மூலம் புகார் கூறியிருக்கிறார். அந்தப் புகாரின்பேரில் எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை. ஆனால், இந்த வழக்கைத் திசைதிருப்பும் நோக்கில் என் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்'' என்று பகிரங்கமாகக் குற்றச்சாட்டை முன்வைத்திருந்தார்.

இந்தநிலையில், அரசு தரப்பு வழக்கறிஞர் கொடுத்த புகாரின்பேரில் வழக்கறிஞர் அருளை பெரம்பலூர் போலீஸார் கைது செய்திருக்கிறார்கள். இந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.