Published:Updated:

பொள்ளாச்சி போல குமரியிலும் பெண்களைச் சீரழித்த கும்பல்! - நடவடிக்கை எடுக்காத போலீஸ்!

சிந்து ஆர்
பொள்ளாச்சி போல குமரியிலும் பெண்களைச் சீரழித்த கும்பல்! - நடவடிக்கை எடுக்காத போலீஸ்!
பொள்ளாச்சி போல குமரியிலும் பெண்களைச் சீரழித்த கும்பல்! - நடவடிக்கை எடுக்காத போலீஸ்!

பொள்ளாச்சி போல கன்னியாகுமரி மாவட்டத்திலும் பெண்களை பாலியல் கொடுமைக்கு ஆளாக்கிய செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து காவல் துறை நடவடிக்கை எடுக்காததால், போராடத்தயாரான தி.மு.க-வினரால் பரபரப்பு ஏற்பட்டது.

பொள்ளாச்சி போல குமரியிலும் பெண்களைச் சீரழித்த கும்பல்! - நடவடிக்கை எடுக்காத போலீஸ்!

பொள்ளாச்சியில், இளம் பெண்களுக்கு காதல்வலை வீசி பாலியல் ரீதியாகத் துன்புறுத்தப்பட்ட சம்பவம் தமிழகத்தில் அதிர்வலையை ஏற்படுத்தியது. அதுபோன்ற பல சம்பவங்கள் தமிழகத்தின் பல பகுதிகளில் வெளிப்பட்டுவருகின்றன. இந்தநிலையில், கன்னியாகுமரி மாவட்டத்தில் இளம் பெண்களை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கியவர்கள்குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தும் காவல் துறையினர் நடவடிக்கை எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. குற்றவாளிகளைக் கைதுசெய்யவில்லை என தி.மு.க-வினர் குற்றம் சாட்டியுள்ளனர். மேலும், நடவடிக்கை எடுக்காத அதிகாரிகளையும், காவல் துறையையும் கண்டித்து தி.மு.க. எம்.எல்.ஏ மனோதங்கராஜ் தலைமையில் தக்கலையில் இன்று ஆர்ப்பாட்டம் நடத்த முயன்றனர்.

பொள்ளாச்சி போல குமரியிலும் பெண்களைச் சீரழித்த கும்பல்! - நடவடிக்கை எடுக்காத போலீஸ்!

காவல் துறையினர் அனுமதி மறுத்ததால் ஆர்ப்பாட்டம் கைவிடப்பட்டது. இதுகுறித்து கன்னியாகுமரி மேற்கு மாவட்ட தி.மு.க மகளிரணி அமைப்பாளர் கிளாடிஸ் லில்லி கூறுகையில், ``கன்னியாகுமரி மேற்கு மாவட்டத்தில் கடையால் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமியை சுனில்குமார், சுஜின் மற்றும் அகிலா ஆகியோர் கடத்திச்சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இதுகுறித்து குழித்துறை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

பொள்ளாச்சி போல குமரியிலும் பெண்களைச் சீரழித்த கும்பல்! - நடவடிக்கை எடுக்காத போலீஸ்!

சுஜின்ராஜ், பெண்கள் மற்றும் சிறுமிகளை ஆசை வார்த்தை கூறி அழைத்துச்சென்று பாலியல் பலாத்காரம் செய்து, அதை வீடியோவும் எடுப்பார். மேலும், குலசேகரத்தில் உள்ள அவரது வீட்டில் வைத்து சில முக்கியப் புள்ளிகளிடமும் பெண்களை மிரட்டி அனுப்பியுள்ளார். சுஜின் ராஜுக்கு கேரளா, கர்நாடகா மாநிலங்களைச் சேர்ந்த இடைத்தரகர்களுடன் தொடர்பு உள்ளது. பாலியல் பலாத்காரத்திற்குப்  பிறகு, உறவினர்களுக்குத் தகவல் கொடுத்து அழைத்துச்செல்லும்படி கூறுவார்கள். இதுபற்றி வெளியே சொன்னால் ஆபாச வீடியோக்களை வெளியிடுவதாகக் கூறி மிரட்டுவார். ஒரு சிறுமியின் பெற்றோர், குழித்துறை காவல் நிலையத்தில் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை" என்று ஆதங்கப்பட்டார். பொள்ளாச்சி சம்பவம் போன்று குமரி மாவட்டத்திலும் பெண்கள் வாழ்க்கையில் விளையாடியவர்கள்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.