Published:Updated:

`மழைக்காகக் கோயில்களில் யாகம் நடத்துங்கள்!' - இந்து சமய அறநிலையத்துறை சுற்றறிக்கை

மே மாதம் தொடங்கினால் அக்னி பகவான் அருள்புரியத் தொடங்கிவிடுவார். மாநிலம் முழுவதும் கோடை வெயில் கொளுத்தி எடுக்கிறது. ஏதோ ஃபானி புயல் வருகிறது தமிழகத்தில் மிதமான மழை பொழிவு இருக்கும் என வானிலை ஆய்வு சமீபத்தில் கூறியது. இதைக்கேட்டு தமிழக மக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர். ஆனால், வந்த புயலோ ஒடிசா பக்கம் சென்றுவிட்டது என்ற வானிலை ஆய்வு மையத்தின் அறிக்கை இடியாய் வந்து இறங்கியது.

இந்தநிலையில்தான் தமிழகத்தில் மழைப்பொழிவு ஏற்படக் கோயில்களில் யாகம் நடந்துங்கள் என கோயில்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியிருக்கிறது இந்து சமய அறநிலையத்துறை. அந்த அறிக்கையில்,``2019 - 20-ம் ஆண்டு ஸ்ரீவிஹாரி வருடத்தில் நல்ல பருவமழை பெய்து நாடு செழிக்க இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் உள்ள முக்கியத் திருக்கோயில்களில் மழை வேண்டி யாகம் செய்ய உத்தேசிக்கப்பட்டுள்ளது. திருக்கோயில்களின் வழக்கத்திற்கு உட்பட்டு சார் அலுவலர்கள் யாகம் நடத்தக் கேட்டுக்கொண்டுள்ளது” என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.

கோயில்களின் பழக்க வழக்கங்களுக்கு ஏற்ப யாகம் செய்ய வேண்டும் என்று இந்து சமய அறநிலையத் துறை அறிவுறுத்தியுள்ளது. அதேபோல், தங்கள் மண்டலங்களுக்கு உட்பட்ட கோயில்களில் எந்தெந்த கோயில்களில் எந்தத் தேதிகளில் மழைவேண்டி யாகம் செய்யப்படவுள்ளது என்பதற்கான விவரத்தைப் பட்டியலிட்டு அதுதொடர்பான தகவல்களை நாளைக்குள் (2.05.2019) தெரிவிக்கவும் மண்டல இணை ஆணையர்களை அறநிலையத் துறை கேட்டுக்கொண்டுள்ளது.