Published:Updated:

``மாயமான வங்கி ஊழியர்” - நகைகளை காட்டச்சொல்லி பொதுமக்கள் முற்றுகையால் புதுக்கோட்டையில் பரபரப்பு

புதுக்கோட்டையில் தேசியமயமாக்கப்பட்ட வங்கி ஊழியர் ஒருவர் மாயமானதைத் தொடர்ந்து, வங்கியில் நகை, பணம் சரிபார்ப்பு ஆய்வு நடைபெற்று வருவதாகப் பரவிய செய்தியால், வாடிக்கையாளர்கள் வங்கியை முற்றுகையிட்டனர். இதனால், பரபரப்பு ஏற்பட்டது.

``மாயமான வங்கி ஊழியர்” - நகைகளை காட்டச்சொல்லி பொதுமக்கள் முற்றுகையால் புதுக்கோட்டையில் பரபரப்பு

புதுக்கோட்டையில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கிக் கிளையில் அலுவலக உதவியாளராக பணிபுரிந்து வந்த மாரிமுத்து என்பவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு மாயமானர். இதுகுறித்து கணேஷ் நகர் போலீஸார் விசாரித்து வந்தனர். இந்த நிலையில், வல்லநாடு பகுதியில் மாரிமுத்துவின் கார் எரிந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது. காருடன் வளையல்கள் உள்ளிட்ட சில ஆபரணங்கள் எரிந்து கிடந்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில்தான் கடந்த 3 நாள்களாக வங்கியில் நகை, பணம் ஏதும் களவு சென்று இருக்கிறதா என்பது குறித்து வங்கி அதிகாரிகள் ரகசியமாக ஆய்வு நடத்தி வருகின்றனர். இதற்காக, திருச்சியைச் சேர்ந்த அதிகாரிகள் முகாமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், இந்தச் செய்தி தீயாகப் பரவ வங்கியில் நகையை அடகு வைத்த வாடிக்கையாளர்கள் வங்கி முன்பு குவியத் தொடங்கினர். வங்கியை முற்றுகையிட்டு வங்கி அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். போலீஸார் சமாதானம் செய்தனர். தங்களது நகை அடகு வைத்தச் சீட்டைக் காட்டி, இந்த நகை இருக்கிறதா என்று வங்கி ஊழியர்களிடம் கேட்டனர். அதற்கு, ``உங்களுடைய நகை அனைத்தும் பத்திரமாக உள்ளதாக வங்கி ஊழியர்கள் தெரிவித்தனர்.

``மாயமான வங்கி ஊழியர்” - நகைகளை காட்டச்சொல்லி பொதுமக்கள் முற்றுகையால் புதுக்கோட்டையில் பரபரப்பு

இதை நம்பாத வாடிக்கையாளர்கள், ``எவ்வாறு எங்கள் நகை இருக்கிறது என்று சொல்கிறீர்கள்; எங்களது நகையைக் காட்ட முடியுமா" என்று கேட்டனர். அதற்கு, வங்கி ஊழியர்கள், ``உடனே நகைக்கான கடன் பணத்தைச் செலுத்தி நகையைப் பெற்றுக்கொள்ளலாம்" என்று கூறினர். இதையடுத்து, வாடிக்கையாளர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால், பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து வங்கி முன்பு போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். 

வங்கி அதிகாரிகளிடம் இதுகுறித்து கேட்டபோது, ``வங்கியில் வழக்கமாக நடைபெறும் ஆய்வுதான் நடைபெறுகிறது. தவறான செய்தி பரவியதால், வாடிக்கையாளர்கள் வங்கி முன்பு குவிந்தனர். அவர்களிடம் நாங்கள் தெளிவான விளக்கம் கொடுத்துவிட்டோம்" என்றனர். இதுதொடர்பாக போலீஸாரிடம் பேசினோம், ``வங்கியில் இருந்து இதுவரையிலும் நகை, பணம் திருடு போனதாக எந்தப் புகாரும் வரவில்லை. வங்கி ஊழியர் மாயமானது, கார் எரிப்பு குறித்து தனிப்படை போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்” என்றனர்

புதுக்கோட்டையில் வங்கி ஊழியர் திடீர் மாயம், அவரது கார் எரிப்பு, வங்கியில் நடைபெற்ற திடீர் ஆய்வு, பொதுமக்கள் வங்கி முற்றுகை என அடுத்தடுத்து நடைபெறும் நிகழ்வுகளால் இந்த வழக்கில் போலீஸாரே குழம்பிப் போய் உள்ளனர். இதனால், புதுக்கோட்டை பராபரத்துக் கிடக்கிறது.

Vikatan
அடுத்த கட்டுரைக்கு