Published:Updated:

சடலமாக மீட்பு; 5 நாள்களுக்குப் பின் புகார்! - புதுக்கோட்டை வங்கி ஊழியர் வழக்கில் நீடிக்கும் மர்மம்

புதுக்கோட்டையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு மாயமான வங்கி ஊழியர் மாரிமுத்துவின் உடல், மணமேல்குடி அருகே கோடியக்கரை கடலில் சடலமாக மீட்கப்பட்டது. திடீரென வங்கி ஊழியர் மாயமான நிலையில், அவரது கார் எரிக்கப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து வங்கி ஊழியரின் மரணம் பல்வேறு சந்தேகங்களை எழுப்பி உள்ளது.

சடலமாக மீட்பு; 5 நாள்களுக்குப் பின் புகார்! - புதுக்கோட்டை வங்கி ஊழியர் வழக்கில் நீடிக்கும் மர்மம்

புதுக்கோட்டையில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கிக் கிளையில் அலுவலக உதவியாளராகப் பணிபுரிந்து வந்த மாரிமுத்து கடந்த சில தினங்களுக்கு முன்பு மாயமானார். இதைத்தொடர்ந்து அவரது கார் எரிந்த நிலையில் வல்லநாடு பகுதியில் கண்டெடுக்கப்பட்டது. அதில், வளையல்கள் உள்ளிட்ட நகைகள், சிசிடிவி ஹார்டு டிஸ்க் உள்ளிட்டவை எரிந்த நிலையில் கிடந்ததாகக் கூறப்படுகிறது. வங்கி ஊழியர் காணாமல் போனதைத் தொடர்ந்து வங்கியில் சுமார் ரூ.5 கோடி மதிப்பிலான தங்க நகைகள் திருடு போயிருக்கலாம் எனக் கூறப்பட்டது. இதற்காக, வங்கியின் மத்திய மண்டல அதிகாரிகள் வங்கியில் ஆய்வு நடத்தினர்.

சடலமாக மீட்பு; 5 நாள்களுக்குப் பின் புகார்! - புதுக்கோட்டை வங்கி ஊழியர் வழக்கில் நீடிக்கும் மர்மம்

வங்கி ஊழியர் மாரிமுத்துவின் மனைவி ராணி கொடுத்த புகாரின் பேரில் மாரிமுத்துவைக் கண்டுபிடிக்க 3 தனிப்படைகள் அமைத்து தீவிர விசாரணை நடத்தி வந்தனர். இந்தநிலையில்தான் மணமேல்குடி அருகே கோடியக்கரை கடற்கரையில் இறந்த நிலையில் ஆண் சடலம் ஒன்று கிடப்பதாக மணமேல்குடி போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீஸார் சம்பவ இடத்திற்குச் சென்று அந்த உடலை மீட்டனர். மாயமான வங்கி ஊழியர் மாரிமுத்துவின் சடலமாக இருக்கலாம் என்று சந்தேகித்த போலீஸார் மாரிமுத்துவின் மனைவி ராணியை அடையாளம் காட்டுவதற்காக அழைத்துச் சென்றனர். அவர் அணிந்திருந்த சட்டையை வைத்து இறந்து கிடப்பது மாரிமுத்து என்பதை ராணி உறுதி செய்தார். இதையடுத்து, உடற்கூறு பரிசோதனை செய்யப்பட்டு குடும்பத்தினரிடம் மாரிமுத்துவின் உடல் ஒப்படைக்கப்பட்டது.

சடலமாக மீட்பு; 5 நாள்களுக்குப் பின் புகார்! - புதுக்கோட்டை வங்கி ஊழியர் வழக்கில் நீடிக்கும் மர்மம்

ஏற்கெனவே வங்கி ஊழியர் திடீரென மாயமான நிலையில், அவரது கார் எரிக்கப்பட்ட நிலையில் தைலமரக் காட்டுக்குள் கிடந்தது. வங்கியிலிருந்து 5 கோடி மதிப்பிலான நகைகள் திருடு போயிருக்கலாம் என்று கூறப்படும் நிலையில், நகைகளை எடுத்துக்கொண்டு, தடையங்களை அழித்து மாரிமுத்து மாயமாகி இருக்கலாம் என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் போலீஸார் விசாரித்து வந்தனர். இந்தச் சூழலில், மாரிமுத்து சடலமாக மீட்டு இருப்பது பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தி உள்ளது. இந்த வழக்கில் போலீஸாரே குழம்பிப் போய் உள்ளதாகக் கூறப்படுகிறது.

சடலமாக மீட்பு; 5 நாள்களுக்குப் பின் புகார்! - புதுக்கோட்டை வங்கி ஊழியர் வழக்கில் நீடிக்கும் மர்மம்

புதுக்கோட்டை நகர் காவல் நிலையத்திற்கு வந்த பஞ்சாப் நேஷனல் வங்கியின் மேலாளர் மாரீஸ் கண்ணன் தலைமையிலான வங்கி அதிகாரிகள், புதுக்கோட்டை நகர் டிஎஸ்பி ஆறுமுகத்திடம் புகார் மனு ஒன்றைக் கொடுத்தனர். அதில், வங்கியிலிருந்து ரூ.4.84 கோடி மதிப்பிலான 13.75 கிலோ தங்க நகைகள் திருடப்பட்டுள்ளன. நகைகளை வங்கி அலுவலக உதவியாளர் பணிபுரிந்து வந்த மாரிமுத்துதான்  திருடி உள்ளார்"  என்று தெரிவித்து உள்ளனர். வங்கி லாக்கர் உடைக்கப்படாமல் நகை திருடப்பட்டுள்ளதாக வங்கி அதிகாரிகள் மனுவில் தெரிவித்துள்ளனர்.

வங்கி அதிகாரிகள் கொடுத்த புகார் மனுவில் பல்வேறு குளறுபடிகள் இருப்பதாகக் கூறி போலீஸார் அவர்களை திருப்பி அனுப்பினர். தொடர்ந்து வங்கி அதிகாரிகள் அங்கிருந்து கிளம்பினர். வங்கி அதிகாரிகள் தரப்பில் விசாரித்தபோது, ``கடந்த சில தினங்களாக வங்கி நகைகள் சரியாக உள்ளதா என்று சோதனை செய்தோம். முடிவில் பகுதி, பகுதியாக நகைகளை வங்கியிலிருந்து மாரிமுத்து திருடி உள்ளார். கஜா புயலுக்குப் பிறகு வங்கியிலிருந்து நகைகளை திருப்ப வந்த வாடிக்கையாளர்களை சாக்குபோக்குச் சொல்லி விரட்டி அடித்து உள்ளார் என்பது எல்லாம் விசாரித்த எங்களுக்குத் தெரியவந்தது" என்றனர்.

சடலமாக மீட்பு; 5 நாள்களுக்குப் பின் புகார்! - புதுக்கோட்டை வங்கி ஊழியர் வழக்கில் நீடிக்கும் மர்மம்

போலீஸாரிடம் பேசினோம். ``தனிப்படை விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. வங்கி அதிகாரிகள் கொடுத்த புகார் மனுவில் பல்வேறு  குளறுபடிகள் இருந்தது. இது தொடர்பாக கேட்டபோது, புதிய புகார் மனுவுடன் வருவதாகக் கூறி கிளம்பிச் சென்றனர். அவர்கள் சரியான புகார் அளிக்கும்பட்சத்தில் வழக்கு விசாரணையை தொடர்ந்து முடுக்கி விடுவோம்'' என்றனர்.

5 நாள்களுக்கு முன்பே வங்கி ஊழியர் மாயமான நிலையில், அவர்  மணமேல்குடி கடற்கரையில் நேற்று மர்மமான நிலையில் இறந்ததைத் தொடர்ந்து தற்போது வங்கி அதிகாரிகள் பல்வேறு குளறுபடிகளுடன் புகார் மனு கொடுத்துள்ளனர். இந்த வழக்கில் வங்கி உயர் அதிகாரிகளுக்கு ஏதேனும் தொடர்பு இருக்குமோ என்ற சந்தேகத்தை இது ஏற்படுத்தியுள்ளது. மேலும், இறந்த வங்கி ஊழியரின் பிரேத பரிசோதனையில் அவரின் உடலின் கழுத்து, உடம்பு பகுதியில் காயம் இருந்துள்ளதாகத் தெரிகிறது. இதன்மூலம் வங்கி ஊழியர் அடித்துக் கொல்லப்பட்டதாகத் தெரிகிறது. வங்கி ஊழியரை அடித்துக் கொன்று நகையினை மர்ம நபர்கள் கொள்ளை அடித்துச் சென்றனரா என்பது உள்ளிட்ட கோணங்களில் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். தொடர்ந்து எழும் கேள்விகளால் வழக்கில் மர்மம் நீடித்து வருகிறது.

அடுத்த கட்டுரைக்கு