Published:Updated:

`டீனின் கூற்று நம்பும்படியாகவா உள்ளது!'- மதுரை விவகாரத்தில் சந்தேகம் எழுப்பும் மருத்துவர்

`டீனின் கூற்று நம்பும்படியாகவா உள்ளது!'- மதுரை விவகாரத்தில் சந்தேகம் எழுப்பும் மருத்துவர்
`டீனின் கூற்று நம்பும்படியாகவா உள்ளது!'- மதுரை விவகாரத்தில் சந்தேகம் எழுப்பும் மருத்துவர்

`டீனின் கூற்று நம்பும்படியாகவா உள்ளது!'- மதுரை விவகாரத்தில் சந்தேகம் எழுப்பும் மருத்துவர்

மதுரை மாவட்டத்தில் நேற்று முன்தினம் பரவலாக மழைபெய்தது. இதன்காரணமாக அரசு இராசாசி மருத்துவமனை கட்டடங்களிலும் மின்தடை ஏற்பட்டது. சுமார் 1 மணி நேரம் மின்சாரம் முழுமையாகத் தடைப்பட்டதால் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த ரவிச்சந்திரன், மல்லிகா, பழனியம்மாள் என்ற 3 நோயாளிகளுக்கும் வென்டிலேட்டருக்கு மின்சாரம் வராததால் மூச்சுத் திணறல் ஏற்பட்டு அடுத்தடுத்து உயிரிழந்ததாகப் புகார் வந்தது. இதுதொடர்பாக விளக்கமளித்த அரசு இராசாசி மருத்துவமனை முதல்வர் வனிதா, ``மதுரை அரசு மருத்துவமனையில் வென்டிலேட்டர்கள் 2 மணி நேரம் பேட்டரியில் இயங்கக்கூடியது. ஜெனரேட்டர் பழுதடைந்த சமயத்தில்கூட அவை இயங்கியது. குறிப்பிட்ட தீவிரப் பிரிவில் மொத்தம் 10 நபர்கள் வென்டிலேட்டர் சிகிச்சையில் இருந்தனர். அனைவருக்குமே முறையாக வென்டிலேட்டர் செயல்பட்டது.  நோய்த்தன்மை காரணமாக 3 நபர்கள் மட்டும் இறந்தனர். அவர்களது மரணத்துக்கும் மின்தடைக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை'' எனத் தெரிவித்தார்.

`டீனின் கூற்று நம்பும்படியாகவா உள்ளது!'- மதுரை விவகாரத்தில் சந்தேகம் எழுப்பும் மருத்துவர்

இதுதொடர்பாக நம்மிடம் பேசிய சூழலியலுக்கான மருத்துவர்கள் சங்கத்தைச் சேர்ந்த மருத்துவர் புகழேந்தி, `` மின்நிறுத்தம் ஏற்பட்டு 10-15 நிமிடங்களில் இறப்பு நிகந்துள்ளதால் நிச்சயம் அது இறப்பிற்கான காரணமாக இருக்க வாய்ப்பு அதிகம் இருக்க, இறப்பிற்கும் மின்நிறுத்தத்துக்கும் தொடர்பு இல்லை என டீன் அறிக்கை விட்டது மருத்துவ ரீதியாக சரியா. செயற்கை சுவாசம் தடைப்பட்டால் ஆக்ஸிஜன் அளவு குறைந்து இதய நிறுத்தம் ஏற்படும். செயற்கை சுவாசக் கருவிகள் பேட்டரி மூலம் செயல்பட்டது (இதை உறவினர்கள் மறுத்துச் செயல்படவில்லை எனக் கூறியுள்ளனர்) என டீன் கூறியது உண்மையெனில் ஆம்பு பை மூலம் ஏன் ஆக்ஸிஜன் செலுத்த வேண்டும். அதுவும் 20 நிமிடங்களுக்கு மட்டும். மின்உற்பத்தி செய்யும் 2 ஜெனரேட்டர்களும் அவசரத்தின்போது ஏன் தானாக இயங்கவில்லை. 2 ஜெனரேட்டர்களும் ஒரே சமயத்தில் மின்னல் தாக்கி இயங்கவில்லை எனும் டீனின் கூற்று நம்பும்படியாகவா உள்ளது.15 நாள்களுக்கு ஒருமுறை செயற்கை சுவாசக்கருவி சரியாகச் செயல்படுகிறதா எனப் பரிசோதிக்கப்பட வேண்டும் என்பது விதியாக இருந்தாலும், அது கடைப்பிடிக்கப்படுவதில்லை. (ஏனெனில் அவை பெரும்பாலும் தொடர்பயன்பாட்டில் இருப்பதால்) எனும் மூத்த மருத்துவரின் கூற்றுக்கு அரசின் பதில் என்ன.


மின்னல் தாக்கி ஜெனரேட்டர் பாதிக்கப்பட்டதாகவும்,சம்பவம் நடந்த 2தினங்களுக்கு முன்னரே அது பழுதடைந்திருந்தது எனவும் முரண்பட்ட தகவலை டீன் அவர்கள் அளித்ததிலிருந்து சுயேச்சையான வெளிவிசாரணை மூலம் மட்டுமே உண்மை வெளிச்சத்திற்கு வரும் என்பது தெளிவு.  தகவல் அறியும் சட்டத்தின் மூலம் பெற்ற தகவலில் பயிற்சி பெற்ற ஜெனரேட்டர் பழுதுநீக்கும் பணியாளர்கள் வேலையமர்த்தப்படவில்லை எனும் விசயம் தெரிய வந்துள்ளது. இது யாருடைய குற்றம். யார் இதற்கு பொறுப்பு. 2013ல் வாங்கப்பட்ட ஜெனரேட்டரின் ஆயுட்காலம் 20வருடம் என இருக்கையில்,2பேர் பராமரிப்பு பணிகளுக்காக வேலையில் இருக்கும் போது அவர்கள் பணியை சரியாக செய்தார்களா. 2 நாட்களுக்கு முன்னரே ஜெனரேட்டர் பழுதடைந்தது உண்மையெனில்,2நாட்களாக என்ன வேலை அதை சரிசெய்ய மேற்கொள்ளப்பட்டது. சீராக்க முடியவில்லையெனில் மாற்று ஏற்பாடுகள் ஏன் செய்யப்படவில்லை.

சுயேச்சையான வெளிமருத்துவர்களைக் கொண்டு உண்மையை வெளிச்சத்துக்குக் கொண்டுவர விசாரணை நடத்தாதது ஏன். உண்மைக்கும், நேர்மைக்கும் மதிப்பளிக்கும் சமூகத்தையும், நான் என மட்டும் சிந்திக்கும் சிந்தனை மாறி நாம் எனச் சிந்திக்கும் சமூகம் இல்லாதவரை நீதி மக்களுக்குக் கிடைக்காது. இது பற்றி அறிக்கை அளிப்பவர்கள் தனது பிள்ளைகளுக்கு இப்பிரச்னை ஏற்பட்டிருந்தால் எப்படி அறிக்கை தயாரித்திருப்பார்கள் என எண்ணிப்பார்க்க வேண்டும். தனக்கு ஒரு நீதி பிறருக்கு ஒரு நீதி என இருந்தால் நியாயம் அரசு மருத்துவமனைகளுக்குச் செல்லும் ஏழை, எளிய மக்களுக்குக் கிடைக்காது.  அரசு, அறிக்கை அளிக்கும் மருத்துவர்கள் உண்மையை வெளிச்சத்துக்குக் கொண்டுவர முன்வருவார்களா'' எனக் கேள்வியெழுப்பியுள்ளார்.

அடுத்த கட்டுரைக்கு