Published:Updated:

`ஒரு குடம் தண்ணீருக்கு 4 கி.மீ. அலையுறோம்!' - காவிரிக் கரையில் ஒலிக்கும் வேதனைக் குரல்கள்

`ஒரு குடம் தண்ணீருக்கு 4 கி.மீ. அலையுறோம்!' - காவிரிக் கரையில் ஒலிக்கும் வேதனைக் குரல்கள்
`ஒரு குடம் தண்ணீருக்கு 4 கி.மீ. அலையுறோம்!' - காவிரிக் கரையில் ஒலிக்கும் வேதனைக் குரல்கள்

காவிரி பாயும் தஞ்சாவூரில் கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது.ஒரு குடம்  குடிநீர் கொண்டு வர ஆண்கள், பெண்கள், வயதானவர்கள் என அனைவரும் பல கிலோ மீட்டர் தூரம் செல்ல வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளது வேதனையைத் தருவதாக அப்பகுதியை சேர்ந்த மக்கள் தெரிவித்தனர். 

`ஒரு குடம் தண்ணீருக்கு 4 கி.மீ. அலையுறோம்!' - காவிரிக் கரையில் ஒலிக்கும் வேதனைக் குரல்கள்

தஞ்சாவூர் அருகே கையில் குடங்களுடன் பெண்களும்,டூவீலர் மற்றும் சைக்கிளில் குடங்களை எடுத்து கொண்டு ஆண்களும் கூட்டம் கூட்டமாக செல்கின்றனர். ஏதோ கோயில் திருவிழாவிற்காகத்தான் இப்படி செல்கிறார்கள் என நினைத்தால் தலை விரித்தாடும் தண்ணீர் பஞ்சத்தால் ஒரு குடம் தண்ணீருக்காக பல கிலோ மீட்டர் தொலைவிற்கு அலைந்து திரிகிறார்கள்.காவிரி பாய்ந்த  தஞ்சையில் தான்  இந்த அவலத்தை சந்தித்து வருகிறார்கள் மக்கள்.

`ஒரு குடம் தண்ணீருக்கு 4 கி.மீ. அலையுறோம்!' - காவிரிக் கரையில் ஒலிக்கும் வேதனைக் குரல்கள்

தஞ்சாவூர் செங்கிப்பட்டி அருகே உள்ள புதுக்குடி,ராயமுண்டான்பட்டி, புதுதெரு, முத்துடையான்பட்டி மற்றும் இதனை சுற்றியுள்ள கிராமங்களில் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. இந்த கிராமங்களில் மக்கள் காலி நேரங்களில் குடிநீர்த் தேவைக்காக கையில் குடங்களோடு பல கிலோ மீட்டர் தொலைவிற்கு செல்கின்றனர்.இதனால் மக்கள் பலவித இன்னல்களுக்கு ஆளாகின்றனர். மேலும் இந்த ஊர் பஞ்சாயத்தில் வழங்கப்படும் தண்ணீரும் உப்புத் தண்ணீராக உள்ளதாக அதனால் குடிக்கவே முடிவதில்லை. இந்நிலையில், ராயமுண்டான்பட்டி அருகேயுள்ள புதுதெரு கிராமத்தில், 50க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. இந்த பகுதிக்கு புங்கனுார் கிராமத்திலிருந்து காவிரி குடிநீர் குழாய் திட்டம் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்டன. இதில் ஒரு சில மாதங்கள் மட்டுமே வந்த தண்ணீர் வந்ததாகச் சொல்கிறார்கள். அதன் பிறகு  வரவே இல்லை.

`ஒரு குடம் தண்ணீருக்கு 4 கி.மீ. அலையுறோம்!' - காவிரிக் கரையில் ஒலிக்கும் வேதனைக் குரல்கள்

இதனால் குடிநீருக்காக இந்த ஊரை சேர்ந்த மக்கள் மிகவும் பெருமளவில் சிரமப்பட்டு வருகின்றனர். இதுகுறித்து அந்த ஊர் மக்களிடம் பேசினோம். ``காவிரி ஆற்றில் இருந்தும், காவிரி கிளை ஆறுகள் பாயும் சில கிலோ மீட்டர் தொலைவில்தான் எங்க ஊர் இருக்கிறது. எங்களக்கு ஒரு குடம் நீருக்கே கடும் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதனால் நாங்கள்  குடிநீர் கொண்டு வருவதற்கு 3 கி.மீ.,துார தொலைவில் உள்ள  சேளாகம்பட்டிக்கும், 4 கி.மீ., தொலைவில் உள்ள தஞ்சாவூர் பார்டரும், திருச்சி மாவட்டமான திருநெடுங்குளத்திற்கும் டூ விலர், சைக்கிளில் ஆண்கள் குடங்களை எடுத்து கொண்டு செல்கிறோம். பெண்கள் நடந்தே இந்த பகுதிக்கு தண்ணீர் எடுத்து வரச் செல்கிறார்கள். தண்ணீருக்காக இவ்வளவு தூரம் அலைவதிலேயே பாதி நேரம் ஆகிவிடுவதால் பெரும்பாலானவர்கள் வேலைக்கே செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. கைக் குழந்தை வைத்திருப்பவர்களின் நிலை பரிதாபத்துக்குரியது.

`ஒரு குடம் தண்ணீருக்கு 4 கி.மீ. அலையுறோம்!' - காவிரிக் கரையில் ஒலிக்கும் வேதனைக் குரல்கள்

காவிரியில் தண்ணீர் வந்து பல ஆண்டுகள் ஆகிவிட்டன. இதனால் நிலத்தடி நீர் மட்டம் அதலபாதாளத்திற்குச் சென்று விட்டது. மேடான பகுதியைக் கொண்ட  எங்க ஊரில் பதிக்கப்பட்ட காவிரி குடிநீர்க் குழாய் திட்டத்தில் சரியாக பதிக்காமல் மேலோட்டமாக பதிக்கப்பட்டதால் தான் குழாய்களில் இங்கு தண்ணீர் வரவில்லை. இதனால், தண்ணீர் எடுக்க நாங்க அலைய வேண்டியுள்ளது. இந்த கிராமம் மட்டும் இல்லை, இந்த பகுதிகளில் உள்ள பல கிராமங்களில் இதேநிலைதான். நாங்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தி விட்டோம். அதிகாரிகளிடம் எங்கள் அவல நிலையை எடுத்துக்கூறி மனுகளும் கொடுத்தோம் எந்த பயனும் இல்லை'' என்றனர்.

`ஒரு குடம் தண்ணீருக்கு 4 கி.மீ. அலையுறோம்!' - காவிரிக் கரையில் ஒலிக்கும் வேதனைக் குரல்கள்

சமூக ஆர்வலர்கள் சிலர், ``முன்பெல்லாம் காவிரி பாய்கிறபோது தஞ்சை பார்ப்பதற்கே ரம்மியமாக இருக்கும். எங்கு பார்த்தாலும் பச்சை பசேல் என பச்சைப் போர்வை போர்த்தியது போல் விவசாயம் நடைபெறும். காவிரி பாய்வதால் வானம் பார்த்த பூமியாக இருக்ககூடிய ஊர்களும் இப்படித்தான் இருக்கும். ஆனால், இப்போது காவிரி நீர் முறையாக வந்து பல வருடங்கள் ஆகிவிட்டது. வயல் வெளிகள் வெடித்த கட்டாந்தரையாக மாறிவிட்டன. இதற்காக எத்தனை போராட்டங்கள், யார் நடத்தினாலும் தண்ணீர் மட்டும் வந்து சேர்ந்தபாடில்லை. இதனால், விவசாயம்தான் பாதிக்கப்பட்டிருந்தது. இப்போது, குடிநீருக்கே தட்டுப்பாடு ஏற்பட்டு விட்டது. தஞ்சை நகரப் பகுதியிலேயே தன்ணீர் தட்டுப்பாடு நிலவி வருவதுதான் பெரிய கொடுமை. அரசு, இதை மெத்தனமாக எடுத்து கொள்ள கூடாது. உடனடியாகக் குடிநீர்த் தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். காவிரி நீரையும் பெற வேண்டும் அப்படி இல்லை என்றால் தஞ்சை தண்ணீருக்காக தவிக்கிற நிலமை ஆகிவிடும்'' என்றனர்.

Vikatan
பின் செல்ல