Published:Updated:

`8 மாதங்களாகியும் முடிவெடுக்கவில்லை!' - ஆளுநருக்குக் கடிதம் எழுதிய ரவிச்சந்திரன்

ராம் பிரசாத்
`8 மாதங்களாகியும் முடிவெடுக்கவில்லை!' - ஆளுநருக்குக் கடிதம் எழுதிய ரவிச்சந்திரன்
`8 மாதங்களாகியும் முடிவெடுக்கவில்லை!' - ஆளுநருக்குக் கடிதம் எழுதிய ரவிச்சந்திரன்

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் மதுரைச் சிறையில் இருந்துவரும் ரவிச்சந்திரன் தனது விடுதலை தொடர்பாக ஆளுநருக்கு அனுப்பிய கடிதம் குறித்து கேள்வி எழுப்பியுள்ளார்.

`8 மாதங்களாகியும் முடிவெடுக்கவில்லை!' - ஆளுநருக்குக் கடிதம் எழுதிய ரவிச்சந்திரன்

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன், சாந்தன், நளினி, ரவிச்சந்திரன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்யும் வகையில் 2014-ம் ஆண்டு தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதை எதிர்த்து வெடிகுண்டுத் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் உச்ச நீதிமன்றத்தை நாடினர். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் ஆளுநரின் பரிசீலனையில் இருப்பதால் அவரே முடிவெடுப்பார் எனக் கூறியது. இந்நிலையில்தான் சிறையில் இருக்கும் ரவிச்சந்திரன் தனது விடுதலைத் தொடர்பாக ஆளுநருக்கு அனுப்பிய கடிதம் குறித்து கேள்வி எழுப்பியுள்ளார். 

தன் வழக்கறிஞர்கள் திருமுருகன், முத்து மூலமாக ஆளுநருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், ``தமிழக அரசு மனிதாபிமான அடிப்படையில் அரசியல் சாசனப்பிரிவு 161-ல் கீழ் எனது விடுதலைக்கு பரிந்துரைத்து. இந்தக் கோப்பைத் தங்களுக்கு அனுப்பி சுமார் 8 மாதங்கள் ஆகிவிட்டன. தமிழக அரசு எடுத்த கொள்கை முடிவுக்கு இசைவு மட்டுமே தெரிவிக்க வேண்டிய நிலையில் தாங்கள் சட்டம், நீதிநெறிமுறைகளைப் பின்பற்றாத செயலற்ற தன்மையைக் கடைப்பிடிக்கிறீர்கள் என்பதை அறிந்து இரண்டாவதாகக் கோரிக்கை மனு அனுப்பியும் எந்தப் பதிலும் இல்லை. ஆளுநர் தங்கள் பதவிக்குரிய சட்டப்படியான கடமையை நிறைவேற்ற எந்த ஒரு சிறுதடையும் இல்லை. தமிழ்நாட்டில் பொதுத்தேர்தலும் முடிந்துவிட்டது. கோப்பு அனுப்பப்பட்டு சுமார் 8 மாதங்கள் ஆன நிலையில் இனியும் தாமதிப்பதென்பது தங்கள் ஆளுகைக்குட்பட்ட ஓர் அரசின் மனிதாபிமான மற்றும் கொள்கை முடிவை அதிகார வரம்பைக் கேள்விக்குரியதாக்குவதாகும். தங்களின் விருப்பு வெறுப்பை அரசு சட்டம் நீதி பரிபாலனைகளில் திணிக்க வேண்டாமென பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.

`8 மாதங்களாகியும் முடிவெடுக்கவில்லை!' - ஆளுநருக்குக் கடிதம் எழுதிய ரவிச்சந்திரன்

எனவே, தமிழக அரசின் மனிதாபிமான மற்றும் அரசியல் சாசன வரம்புக்குட்பட்ட கொள்கை முடிவுக்கு விரைந்து இசைவு தர வேண்டியது தங்கள் பதவிக்குரிய கடமை என்பதைப் பாதிக்கப்பட்டவன் என்ற முறையில் மீண்டும் நினைவூட்டுகிறேன். தங்கள் நிலைப்பாட்டை இம்மனுவை கண்ட நான்கு வாரங்களுக்குள் தமிழக அரசுக்குத் தெரிவிக்குமாறு வேண்டுகிறேன்” என அதில் குறிப்பிட்டுள்ளார். இந்தக் கடிதத்தின் நகலைத் தமிழக முதல்வர் மற்றும் சட்டத்துறை அமைச்சருக்கும் அவர் அனுப்பி வைத்துள்ளார்.
 

Vikatan