Published:Updated:

புதுக்கோட்டை அருகே மதுபான ஆலையை மூடக்கோரி போராட்டம்! - 160 பெண்கள் உட்பட 250 பேர் கைது

புதுக்கோட்டை அருகே மதுபான ஆலையை மூடக்கோரி போராட்டம்! - 160 பெண்கள் உட்பட 250 பேர் கைது
புதுக்கோட்டை அருகே மதுபான ஆலையை மூடக்கோரி போராட்டம்! - 160 பெண்கள் உட்பட 250 பேர் கைது

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை அருகே கல்லாக்கோட்டை தனியார் மதுபான ஆலையை மூடக்கோரி நடைபெற்ற முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்ட 160 பெண்கள் உட்பட 250பேர் கைது செய்யப்பட்டனர்.

புதுக்கோட்டை அருகே மதுபான ஆலையை மூடக்கோரி போராட்டம்! - 160 பெண்கள் உட்பட 250 பேர் கைது

புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வக்கோட்டை அருகே கல்லாக்கோட்டையில் கால்ஸ் டிஜிட்டலிரிஸ் தனியாருக்குச் சொந்தமான மதுபான ஆலை, கடந்த சில வருடங்களாகச் செயல்பட்டு வருகிறது. இங்கு தயாராகும் மது வகைகள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் அனுப்பப்படுகிறது. நூற்றுக்கும் அதிகமான லாரிகளில் மதுவகைகள் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றன. மது ஆலைக்காக அளவுக்கு அதிகமான தண்ணீர் எடுப்பதால், இங்கு கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இங்கிருந்து கழிவு  நீர் அதிகளவில் வெளியேற்றப்படுவதால், அந்தப் பகுதியில் தொற்று நோய் ஏற்படும் அபாயம் உள்ளதாகக் கூறப்படுகிறது. மதுபான ஆலையை மூடக்கோரி பொதுமக்கள் பலமுறை புகார் கொடுத்தும் எந்தப் பலனும் இல்லை. அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

புதுக்கோட்டை அருகே மதுபான ஆலையை மூடக்கோரி போராட்டம்! - 160 பெண்கள் உட்பட 250 பேர் கைது

இந்த நிலையில்தான் கல்லாக்கோட்டை மதுபான ஆலையை மூட வேண்டும். தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி மகளிர் ஆயம் தலைவர் லட்சுமி அம்மாள் தலைமையில் கல்லாக்கோட்டை பேருந்து நிறுத்தத்திலிருந்து மதுபான ஆலையை முற்றுகையிடுவதற்காக 1 கி.மீ தூரம் வரையிலும் கோஷமிட்டபடி ஊர்வலம் வந்தனர். முன்னதாக, மதுபான ஆலை முன்பு 50-க்கும் மேற்பட்ட போலீஸார் குவிக்கப்பட்டு இருந்தனர். ஊர்வலமாக வந்த மகளிர் ஆயத்தைச் சேர்ந்த லட்சுமி அம்மாள் உட்பட 250 பேரை போலீஸார் கைது செய்து வேனில் ஏற்றினர். கைது செய்யப்பட்டவர்கள் அனைவரும் இரவு விடுவிக்கப்பட்டனர்.

புதுக்கோட்டை அருகே மதுபான ஆலையை மூடக்கோரி போராட்டம்! - 160 பெண்கள் உட்பட 250 பேர் கைது

மகளிர் ஆயம் தலைவர் லட்சுமி அம்மாள் கூறும்போது, ``மதுபானம் தயாரிப்பதற்காக, ஆழ்துளைக் கிணறுகளில் ராட்சத மோட்டார்கள் மூலம் தண்ணீர் எடுப்பதால், இந்தப் பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் அதலபாதாளத்துக்குச் சென்றுள்ளது. இங்கிருந்து வெளியேறும் கழிவு நீர்நிலைகளில் கலப்பதால், பல்வேறு தொற்று நோய்கள் இப்பகுதி மக்களுக்கு உருவாகிறது. பெண்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் எனப் பல தரப்பினரும் குடிப்பழக்கத்துக்கு அடிமையாகும் அவல நிலைதான் தமிழகத்தில் உள்ளது. பல குடும்பங்கள் சீரழிவதற்குக் காரணமான மதுக்கடைகளை மூட வேண்டும். முழு மதுவிலக்கு அமல்படுத்த வேண்டும்" என்றார்.