Published:Updated:

`அயன்' பட பாணியில் வயிற்றில் போதைப் பொருள் கடத்தியவர் நடுவானில் உயிரிழப்பு!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
`அயன்' பட பாணியில் வயிற்றில் போதைப் பொருள் கடத்தியவர் நடுவானில் உயிரிழப்பு!
`அயன்' பட பாணியில் வயிற்றில் போதைப் பொருள் கடத்தியவர் நடுவானில் உயிரிழப்பு!

`அயன்' பட பாணியில் வயிற்றில் போதைப் பொருள் கடத்தியவர் நடுவானில் உயிரிழப்பு!

`யன்' திரைப்படத்தில் வருவதுபோல் வயிற்றுக்குள் போதைப்பொருளை வைத்துக் கடத்த முயன்ற ஜப்பானைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் உயிரிழந்தார்.

`அயன்' பட பாணியில் வயிற்றில் போதைப் பொருள் கடத்தியவர் நடுவானில் உயிரிழப்பு!

(Photograph: Sonora Attorney-General)

ஜப்பானைச் சேர்ந்த 42 வயது இளைஞர் ஒருவர், கொலம்பியாவின் தலைநகரான பொகோடாவிலிருந்து டோக்கியோவுக்கு விமானத்தில் பயணம் செய்தார். நடுவானில் பறந்துகொண்டிருந்தபோது அவரது வயிறு வீக்கமடைந்தைக் கவனித்த விமானப் பணியாளர்கள், மெக்சிகோ நகரில் அவசரமாக விமானத்தைத் தரையிறக்கினர். ஆனால், அதற்குள் அந்த இளைஞர் இறந்துவிட்டார். இதையடுத்து, அந்த விமானத்தில் பயணம் செய்த 198 பயணிகள் வேறு விமானத்தில் டோக்கியோவுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

`அயன்' பட பாணியில் வயிற்றில் போதைப் பொருள் கடத்தியவர் நடுவானில் உயிரிழப்பு!

இறந்த இளைஞரது உடல் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டது. அதில், 246 பாக்கெட் கொகைன் போதைப்பொருளை வயிற்றுக்குள் வைத்துக் கடத்த முயன்றது தெரியவந்துள்ளது. ஒவ்வொன்றும் 1 செ.மீ முதல் 2.5 செ.மீ அளவுள்ள பாக்கெட்களாகும். சில பாக்கெட்டுகள் வயிற்றுக்குள் உடைந்து ரத்தத்தில் கலந்திருக்கின்றன. இதனால், வயிற்றில் வீக்கம் ஏற்பட்டதோடு, திடீர் இதயத்துடிப்பு முடக்கமும்  (Sudden Cardiac Arrest) ஏற்பட்டு உயிரிழந்திருக்கிறார். 

போதைப்பொருளை கேப்சூல் வடிவில் செய்து, விழுங்கி வயிற்றில் மறைத்துக் கடத்தும் வழக்கம் பரவலாக இருக்கிறது. சூர்யா நடித்த 'அயன்' படத்திலும் இதுமாதிரியான காட்சிகள் இடம்பெற்றிருந்தன. தற்போது ஜப்பானைச் சேர்ந்த அந்த இளைஞர் பணத்துக்காக இந்த விபரீதத்தில் இறங்கி கடைசியில் உயிரையே இழக்க நேரிட்டுள்ளது.

Vikatan
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு