Published:Updated:

`வேதாந்தாவுக்கு மட்டும்தான் கருத்துரிமையா?' - கொந்தளிக்கும் மீத்தேன் எதிர்ப்புக் கூட்டமைப்பு

`வேதாந்தாவுக்கு மட்டும்தான் கருத்துரிமையா?' - கொந்தளிக்கும் மீத்தேன் எதிர்ப்புக் கூட்டமைப்பு
`வேதாந்தாவுக்கு மட்டும்தான் கருத்துரிமையா?' - கொந்தளிக்கும் மீத்தேன் எதிர்ப்புக் கூட்டமைப்பு

மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பின் சார்பில் இன்று தொடங்கப்பட இருந்த காவிரி படுகைப் பாதுகப்புப் பரப்புரை பயணத்துக்குக் காவல்துறை அனுமதி மறுத்துள்ளது. இது இந்திய அரசியல் அமைப்பு சட்டம் வழங்கியுள்ள கருத்துரிமைக்கு எதிரானது எனவும் ஓ.என்.ஜி.சி, ஸ்டெர்லைட் (வேதாந்தா) போன்ற எரிவாயு நிறுவனங்களுக்கு மட்டுமே தமிழ்நாட்டில் கருத்துரிமை வழங்கப்படுவதாகவும் மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பினர் கொந்தளிக்கிறார்கள்.

`வேதாந்தாவுக்கு மட்டும்தான் கருத்துரிமையா?' - கொந்தளிக்கும் மீத்தேன் எதிர்ப்புக் கூட்டமைப்பு

இதுகுறித்து நம்மிடம் பேசிய இக்கூட்டமைப்பின் ஆலோசகர் டாக்டர் பாரதிச்செல்வன், ``விவசாய நிலங்கள் மற்றும் மக்கள் வாழ்விடங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டம் செயல்படுத்தப்பட்டால் பலவிதமான பாதிப்புகளைச் சந்திக்க நேரிடும். மக்களிடம்

`வேதாந்தாவுக்கு மட்டும்தான் கருத்துரிமையா?' - கொந்தளிக்கும் மீத்தேன் எதிர்ப்புக் கூட்டமைப்பு

விழிப்புணர்வு ஏற்படுத்த அமைதியான வழியில் பிரசாரம் மேற்கொள்ள திட்டமிட்டிருந்தோம். இதற்குக் காவல்துறையிடம் முறையாக அனுமதி கேட்டிருந்தோம். ஆனால், அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இது இந்திய அரசியல் அமைப்பு சட்ட விதி 19 வழங்கியுள்ள கருத்துரிமைக்கு எதிரானது. எரிவாயு எடுக்கும் திட்டங்களால் பாதிப்புகள் ஏற்படும் எனச் சொல்வது சட்ட விரோதமா?

ஓ.என்.ஜி.சி., ஸ்டெர்லைட் உள்ளிட்ட நிறுவனங்கள் தங்களது செயல்பாடுகளை நியாயப்படுத்தி பல இடங்களில் விளம்பர பலகைகள் வைத்துள்ளன. மக்களைச் சந்தித்து கூட்டங்களும் நடத்துகின்றன. அவர்கள் கருத்தை அவர்கள் சொல்கிறார்கள். எங்கள் கருத்தை நாங்கள் சொல்கிறோம். இதில் எது சரியோ, அதை மக்கள் ஏற்றுக்கொள்ளட்டும். ஆனால், தமிழ்நாட்டில் ஓ.என்.ஜி.சி, ஸ்டெர்லைட் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு மட்டுமே கருத்துரிமை அனுமதிக்கப்படுகிறது. இதை நீதிமன்றம் மூலம் முறியடிப்போம். நாங்கள் விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ளவில்லையென்றாலும் கிராம அளவில் அந்தந்தப் பகுதி மக்கள் தன்னெழுச்சியுடன் போராடுவார்கள். நெடுவாசல், கதிராமங்கலம், திருக்காரவாசல், கரியாப்பட்டினம் உள்ளிட்ட பகுதிகளில் எழுச்சியுடன் நடைபெற்ற தொடர் போராட்டங்களே இதற்கு உதாரணம்” என்றார்.