Published:Updated:

`திடீர்னு அந்த நேரத்துல..!' - ஆட்டோ டிரைவரின் 3 ஆண்டுகளாக நடமாடும் தண்ணீர் சேவை #WhereisMyWater

புதுக்கோட்டையைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் ஒருவர், தனது ஆட்டோவை குடிதண்ணீர் பந்தல்போல் மாற்றி தனது வாடிக்கையாளர்கள் மட்டுமன்றி பொதுமக்களின் தாகத்தைத் தீர்த்து வருகிறார்.

`திடீர்னு அந்த நேரத்துல..!' - ஆட்டோ டிரைவரின் 3 ஆண்டுகளாக நடமாடும் தண்ணீர் சேவை #WhereisMyWater

புதுக்கோட்டை தெற்கு ராஜ வீதியைச் சேர்ந்தவர் அன்வர் (46). 20 வருடங்களுக்கும் மேலாக ஆட்டோ ஓட்டி வருகிறார். கடந்த 3 ஆண்டுகளாக பொதுமக்களின் தாகம் தீர்க்கும் பணியைச் செய்துவருகிறார். அன்வரின் இருக்கைக்கு  ஸ்டாண்ட் அமைக்கப்பட்டு குடிநீர் கேன் ஒன்று பொருத்தப்பட்டுள்ளது. முகப்பில் "பொது குடிநீர்" என்ற வாசகம் இடம்பெற்றுள்ளது. வெயிலில் முதியவர்கள், குழந்தைகளுடன் பெற்றோர்கள் சிரமப்பட்டு நடந்து செல்வதைப் பார்த்தாலே, வாடிக்கையாளர்கள் கை நீட்டாமலேயே நிறுத்தி விடுகிறார். அவர்களிடம் தண்ணீர் வேண்டுமா என்று கனிவு காட்டுகிறார்.

பள்ளிக் குழந்தைகளைக் காலையில் பள்ளிக்குக் கொண்டு சென்றுவிட்டு, சிறிது நேர ஓய்வில் இருந்த அன்வரிடம் பேசினோம். "மூணு வருஷத்துக்கு முன்னால ஒரு நாள் முதியவர் ஒருவரை அவருடைய கிராமத்துக்கு ஏத்திக்கிட்டு சவாரி போயிட்டு இருந்தேன். திடீர்னு அவர் மயக்கம் ஆகிட்டாரு. மயக்கத்தைத் தெளியவைக்கத் தண்ணீரைத் தேடினால், நான் குடிக்கிறதுக்காகக் கொண்டுவந்த தண்ணீரும் முடிஞ்சுபோச்சு. அவர் கையிலையும் தண்ணீர் இல்லை. கொஞ்ச தூரத்தில இருந்த மளிகைக் கடைக்கு ஓடிப்போய் காசு கொடுத்து வாட்டர் பாட்டில் வாங்கி வந்து மயக்கத்தைத் தெளிய வைத்தேன்.

இயல்பு நிலைக்கு வந்த உடனே பத்திரமாக வீட்டில் கொண்டுபோய் விட்டேன். அந்த நேரத்துலதான் தண்ணீருடைய அவசியத்தை தெரிஞ்சிக்கிட்டேன். ஆட்டோவில் குடிநீர் கேன் வைப்பதற்கான ஐடியா அப்போதுதான் எனக்குக் கிடைச்சது. இப்போது 3 வருஷமாகப் பொதுமக்களுக்குக் குடிநீர் கொடுத்து வருகிறேன். வழக்கமாகக் காலையில் ஒரு கேனும் மாலையில் ஒரு கேனும் மாற்றுவேன். இப்போது, வெயில் வாட்டுவதால், சில நாள்கள் 4 கேன்கள் வரையிலும் தேவைப்படுகிறது. கஜா புயல் சமயத்தில் தண்ணீர் கிடைக்காமல் பொதுமக்கள் ரொம்பவே சிரமப்பட்டாங்க. அந்தச் சமயத்தில் 25 லிட்டர் வாட்டர் கேனைக் கடைக்காரர்கள் ரூ.200 வரையிலும்  விற்பனை செஞ்சாங்க. வேறு வழியில்லாமல்  ரூ.200-க்கு வாங்கி வச்சேன்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

`திடீர்னு அந்த நேரத்துல..!' - ஆட்டோ டிரைவரின் 3 ஆண்டுகளாக நடமாடும் தண்ணீர் சேவை #WhereisMyWater

பொதுமக்கள் ரொம்பவே  சந்தோஷப்பட்டாங்க. பக்கத்திலேயே தண்ணீர் கேன் இருப்பதால், அடிக்கடி பார்த்துக்குவேன். தண்ணீர் முடிகிற மாதிரி தெரிஞ்ச உடனே தண்ணீர் கேனை மாத்திருவேன். ஆட்டோவுக்கு எப்சி போடுறதுக்காக ஆர்.டி.ஓ அலுவலகம் போயிருந்தேன். ஆட்டோ போன கொஞ்ச நேரத்தில் இருந்த இரண்டு கேன் தண்ணீரும் முடிஞ்சிருச்சு. அலுவலகத்தில் தண்ணீர் இல்லையான்னு தெரியலை. ஆனா, இன்னும் இரண்டு கேன் தண்ணீர் எடுத்துக்கிட்டுப் போய் இருக்கலாமோ என்றுதான் எனக்கு அப்ப தோணுச்சு. தினமும் பள்ளி பிள்ளைகளை நான்தான் பள்ளியில் கொண்டுபோய் விடுவேன். ஆட்டோவில் தண்ணீர் கேன் இருக்கிறதால்,  சில சமயங்களில் வெறும் பாட்டிலோடு வருவாங்க. ரொம்ப உற்சாகமாகத் தண்ணீரை நிரப்பிக்கிட்டு போவாங்க. தினமும்  வருமானத்தில் வரும் ஒரு சிறிய தொகையைத்தான் நான் செலவு செய்கிறேன். என்னோட உயிர் இருக்க வரைக்கும் இந்தச் சேவையைத் தொடரணும் அதுதான் என்னோட ஆசை" என்கிறார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism